/* */

GT vs KKR குஜராத்தின் வெற்றிப் பயணம் தொடருமா? கொல்கத்தாவுடன் இன்று மோதல்!

குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதும் ஆட்டம் 3.30 மணிக்கு துவங்கும். முன்னதாக 3 மணிக்கு டாஸ் நடைபெறுகிறது. இதில் டாஸ் வெற்றி பெறும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

HIGHLIGHTS

GT vs KKR குஜராத்தின் வெற்றிப் பயணம் தொடருமா? கொல்கத்தாவுடன் இன்று மோதல்!
X

ஐபிஎல் 2023 தொடரின் முதல் ஆட்டத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் அணி, அடுத்து டெல்லி அணிக்கு எதிராகவும் வெற்றி பெற்றது. தொடர் வெற்றிகளைத் தொடர்ந்து இப்போது மூன்றாவது போட்டியில் கொல்கத்தாவை எதிர் கொள்கிறது.

கொல்கத்தா அணி இதுவரை இரண்டு ஆட்டங்களில் விளையாடியிருந்தனர். முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடன் தோல்வியடைந்திருந்தாலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக வெற்றியை பதிவு செய்திருந்தது. இப்போது தனது 3வது ஆட்டத்தில் குஜராத்தை எதிர்கொள்கிறது.

gujarat titans vs kolkata knight riders

ஐபிஎல் 2023 தொடரின் 13 வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இந்த ஆட்டம் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இரண்டு அணிகளும் இதுவரை ஒருமுறைதான் விளையாடியிருக்கிறார்கள். அதில் குஜராத் அணிதான் வெற்றி பெற்றிருக்கிறது. கொல்கத்தா அணி இந்த ஆட்டத்தில் எப்படியாவது வென்று புள்ளிப் பட்டியலில் முன்னேற முயற்சி செய்யவுள்ளது.

GT vs KKR Match Time

குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதும் ஆட்டம் 3.30 மணிக்கு துவங்கும். முன்னதாக 3 மணிக்கு டாஸ் நடைபெறுகிறது. இதில் டாஸ் வெற்றி பெறும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

GT vs KKR TOSS

டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. கொல்கத்தா அணி பவுலிங் செய்யவுள்ளது. இந்த ஆட்டத்தில் குஜராத் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா விளையாடவில்லை. ரஷீத் கான் இந்த ஆட்டத்தில் குஜராத் அணி கேப்டனாக செயல்படுகிறார்.

GT vs KKR Pitch Report

மாலை நேரத்தில் விளையாட்டு துவங்குவதால் பனி இருக்காது. கடந்த ஆட்டத்தின் போது இந்த மைதானம் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைத்தது. அதனால் இது அதிக ரன்கள் குவிக்கும் ஆட்டமாக இருக்கலாம். 200 ரன்களுக்கும் அதிகமாக முதலில் பேட்டிங் செய்யும் அணி ரன் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு சுழல் பந்துவீச்சாளர்களால் நெருக்கடி ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அணி வீரர்கள் விவரம் | GT vs KKR IPL 2023 Playing XI

Gujarat Titans

Shubman Gill, HH Pandya(C), Sai Sudharsan, DA Miller, R Tewatia, Wriddhiman Saha(wk), Rashid Khan, M Shami, J Little, Yash Dayal, Alzarri Joseph

குஜராத் டைட்டான்ஸ்

ஷுப்மான் கில், ஷா பாண்டியா(சி), சாய் சுதர்சன், டாக்டர் மில்லர், ஆர் டெவாடியா, விருத்திமான் சாஹா(வ), ரஷித் கான், எம் ஷமி, ஜே லிட்டில், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப்

Kolkata Knight Riders

Mandeep Singh, RK Singh, N Rana(C), AD Russell, SP Narine, VR Iyer, Rahmanullah Gurbaz(wk), Shardul Thakur, Tim Southee, UT Yadav, Varun Chakravarthy

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

மந்தீப் சிங், ஆர்கே சிங், என் ராணா(சி), ஏடி ரஸ்ஸல், எஸ்பி நரைன், விஆர் ஐயர், ரஹ்மானுல்லா குர்பாஸ்(வாரம்), ஷர்துல் தாக்கூர், டிம் சவுத்தி, யுடி யாதவ், வருண் சக்ரவர்த்தி

டிரீம் லெவன் வீரர்கள் | GT vs KKR dream 11 prediction

Rahmanullah Gurbaz

RK Singh

Shubman Gill

Sai Sudharsan

DA Miller

AD Russell

SP Narine

Shardul Thakur

Varun Chakravarthy

Rashid Khan

M Shami

Updated On: 9 April 2023 10:08 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  2. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  4. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  5. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  6. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  7. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  8. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  9. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  10. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு