/* */

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 'சாம்பியன்'

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் ஜோகோவிச் ‘சாம்பியன்’ 19-வது கிராண்ட்ஸ்லாம் வென்று சாதனை

HIGHLIGHTS

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் சாம்பியன்
X

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரர் நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), 5-ம் நிலை வீரர் சிட்சிபாசும் (கிரீஸ்) மோதினர். 13 முறை சாம்பியனான நடாலை அரைஇறுதியில் தோற்கடித்த நம்பிக்கையுடன் களம் புகுந்த ஜோகோவிச்சை தொடக்கத்தில் சிட்சிபாஸ் தடுமாற வைத்தார்.

72 நிமிடங்கள் போராடி முதல் செட்டை வென்ற சிட்சிபாஸ் 2-வது செட்டையும் தனக்குரியதாக்கினார். இரு செட் பின்தங்கிய நிலையிலும் மனம் தளராத அனுபவ வீரர் ஜோகோவிச் ஆக்ரோஷமாக விளையாடி. அடுத்த இரு செட்டுகளை கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இதையடுத்து கடைசி செட் மேலும் சூடுபிடித்தது. இதில் சிட்சிபாஸ் வெகுவாக தாக்குப்பிடித்த போதிலும் ஜோகோவிச்சின் கம்பீரமான வெற்றிப்பயணத்துக்கு தடை போட முடியவில்லை.

4 மணி 11 நிமிடங்கள் நீடித்த திரில்லிங்கான இந்த போட்டியில் ஜோகோவிச் 6-7 (6-8), 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சிட்சிபாசை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றினார்.

பிரெஞ்ச் ஓபனை ஜோகோவிச் வெல்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2016-ம் ஆண்டிலும் இங்கு வாகை சூடியுள்ளார். இதன் மூலம் கடந்த 52 ஆண்டுகளில் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் குறைந்தது இரண்டு முறை பட்டம் வென்ற முதல் வீரர் என்ற மகத்தான பெருமையை ஜோகோவிச் பெற்றார். ஒட்டுமொத்தத்தில் ராய் எமர்சன் (ஆஸ்திரேலியா), ரோட் லாவர் (ஆஸ்திரேலியா) ஆகியோருக்கு பிறகு இச்சாதனையை ஜோகோவிச் செய்துள்ளார். ஒட்டுமொத்தத்தில் ஜோகோவிச்சுக்கு இது 19-வது (ஆஸ்திரேலிய ஓபன்-9, பிரெஞ்ச் ஓபன்-2, விம்பிள்டன்-5, அமெரிக்க ஓபன்-3) கிராண்ட்ஸ்லாம் ஆகும்.

அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களின் வரிசையில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், ஸ்பெயினின் ரபெல் நடாலும் தலா 20 கிராண்ட்ஸ்லாமுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளனர். அவர்களை நெருங்கி விட்ட ஜோகோவிச், விம்பிள்டன் போட்டியின் போது அவர்களின் சாதனையை சமன் செய்ய வாய்ப்புள்ளது.

கோப்பையை வென்ற ஜோகோவிச்சுக்கு ரூ.12½ கோடியும், கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக இறுதி சுற்றுக்கு வந்து 2-வது இடத்தை பிடித்த சிட்சிபாசுக்கு ரூ.6¾ கோடியும் பரிசுத்தொகையாக கிடைத்தது.

இரட்டையர் பிரிவிலும் அசத்திய கிரெஜ்சிகோவா

பெண்கள் ஒற்றையர் பிரிவில் வென்ற செக்குடியரசு இளம் வீராங்கனை பார்போரா கிரெஜ்சிகோவா இரட்டையர் பிரிவிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். அவரும் சக நாட்டவர் கேத்ரினா சினியாகோவாவும் இணைந்து நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் 6-4, 6-2 என்ற நேர் செட்டில் ஸ்வியாடெக் (போலந்து)- மேட்டெக் சான்ட்ஸ் (அமொிக்கா) கூட்டணியை வென்று கோப்பையை சொந்தமாக்கினர்.

2000-ம் ஆண்டுக்கு பிறகு பிரெஞ்ச் ஓபனில் பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் இரு பிரிவிலும் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பை 25 வயதான கிரெஜ்சிகோவா பெற்றார்.

Updated On: 14 Jun 2021 1:42 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  2. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  3. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  4. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  5. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  6. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  7. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  8. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  9. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  10. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!