/* */

Chennai IPL 2023 விடிய விடிய மழையில் காத்து நின்று டிக்கெட் வாங்கிய ரசிகர்கள்!

சென்னையில் வரும் சனிக்கிழமை நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க மைதானத்துக்கு வெளியே கொட்டும் மழையில் விடிய விடிய காத்திருந்து வாங்கிச் சென்றனர் ரசிகர்கள்.

HIGHLIGHTS

Chennai IPL 2023 விடிய விடிய மழையில் காத்து நின்று டிக்கெட் வாங்கிய ரசிகர்கள்!
X

சென்னையில் வரும் சனிக்கிழமை நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க மைதானத்துக்கு வெளியே கொட்டும் மழையில் விடிய விடிய காத்திருந்து வாங்கிச் சென்றனர் ரசிகர்கள்.

கடந்த சில ஆண்டுகளாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வேலை நடைபெற்று வந்தது. அதன் காரணமாக போட்டிகள் நடைபெறாமலே இருந்தது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே இந்த மைதானத்தில் எப்போது ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு தொல்லை செய்யும் அளவுக்கு ஆகிவிட்டது. இதனால் ரசிகர்களின் ஆர்வத்தை பார்த்த கிரிக்கெட் சம்பந்தப்பட்டவர்கள் அவர்களுக்கு விரைவில் நற்செய்தி அறிவிக்கப்படும் என்று கூறி வந்தனர். அந்த வகையில் இந்த ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றன. இதுவரை நடந்த 4 போட்டிகளிலும் மைதானம் நிரம்பி வழிந்தது. தோனியைக் காணவே பல ரசிகர்கள் மைதானத்தில் திரண்டு இருந்தார்கள்.

இதுவரை நான்கு போட்டிகளில் சென்னையில் நடந்துள்ள நிலையில், அடுத்த போட்டி வரும் 6ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி விளையாட இருக்கிறது. இது மிகப்பெரிய போட்டி என்பதால் இதற்கான டிக்கெட்டுக்கு மிகப்பெரிய போட்டி இருந்தது. இன்று முதல் இந்த டிக்கெட் விற்பனைத் துவங்க இருப்பது அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு முதலே கொட்டும் மழையில் விடிய விடிய ரசிகர்கள் டிக்கெட் வாங்க காத்துக்கிடந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி விளையாடும் கடைசி தொடராக இருக்கும் என பலரும் நினைத்து வருவதால் ரசிகர்கள் அடுத்தடுத்த போட்டிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த போட்டியில் மும்பையுடன் மோத இருப்பதால் இந்த போட்டி மற்ற போட்டிகளையும் விட மிகப்பெரிய விசயமாக இருக்கிறது.

நேரடியாக மைதானத்திலும், பேடிஎம் செயலிகளிலும் இணையத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த டிக்கெட்டுகளைப் பெற ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

மைதானத்தில் நேரடியாக சென்று வாங்குவதாக இருந்தால் 1500 ரூபாய் டிக்கெட்டுகளும், ஆன்லைனில் 2500 முதல் 5000 ரூபாய் டிக்கெட்டுகளும் கிடைக்கின்றன.

Updated On: 3 May 2023 6:37 AM GMT

Related News