காமன்வெல்த் விளையாட்டு: மல்யுத்தத்தில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம்

Commonwealth Games Medals - காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் 3 தங்கம் உட்பட 6 பதக்கங்களை இந்திய மல்யுத்த வீரர்கள் கைப்பற்றினர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
காமன்வெல்த் விளையாட்டு: மல்யுத்தத்தில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம்
X

Commonwealth Games Medals -இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்றுவரும் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா வலுதூக்குதல் போட்டியில் ஹெவிவெயிட் பிரிவில் பங்கேற்ற அரியானாவை சேர்ந்த 28 வயதான சுதிர் தங்கம் வென்றார்.

தனது முதலாவது முயற்சியில் 208 கிலோ எடையை தூக்கினார். 2-வது முயற்சியில் 212 கிலோ தூக்கிய அவர் 3-வது மற்றும் கடைசி வாய்ப்பில் 217 கிலோ எடையை தூக்க முயற்சித்து தோல்வி அடைந்தார். முடிவில் சுதிர் 134.5 புள்ளிகள் குவித்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். நடப்பு காமன்வெல்த் போட்டியில் இந்தியா வென்ற 6-வது தங்கப்பதக்கம் இதுவாகும். 2018-ம் ஆண்டு நடந்த பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார்.

'தங்கமகன்' சுதிருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தடகள போட்டியில் ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் இறுதி சுற்றில் 8 வீரர்கள் களம் இறங்கினர். இதில் பகாமஸ் நாட்டு வீரர் லாக்வான் நைரின், இந்திய வீரர் எம்.ஸ்ரீசங்கர் ஆகியோர் தலா 8.08 மீட்டர் தூரம் தாண்டி இணைந்து முதலிடத்தில் இருந்தனர்.

இதையடுத்து தங்கப்பதக்கம் யாருக்கு? என்பதை முடிவு செய்ய விதிமுறைப்படி அவர்கள் இருவரின் அடுத்த சிறப்பான செயல்பாடு கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது. 2-வது அதிகபட்ச தாண்டுதலாக லாக்வான் நைரின் 7.98 மீட்டரும், ஸ்ரீசங்கர் 7.84 மீட்டரும் தாவியிருந்தனர். இதன் அடிப்படையில் லாக்வான் நைரின் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஸ்ரீசங்கருக்கு வெள்ளிப்பதக்கம் கிட்டியது. மற்றொரு இந்திய வீரரான முகமது அனீஸ் யாஹியா (7.97 மீட்டர்) 5-வது இடமே பிடித்தார்.

தேசிய சாதனையாளரான கேரளாவை சேர்ந்த 23 வயது ஸ்ரீசங்கர் காமன்வெல்த் விளையாட்டில் நீளம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை சொந்தமாக்கினார். இதற்கு முன்பு 1978-ம் ஆண்டில் இந்திய வீரர் சுரேஷ் பாபு வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார்.

ஆண்களுக்கான மல்யுத்தத்தில் 65 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் பஜ்ரங் பூனியா 9-2 என்ற புள்ளி கணக்கில் கனடாவின் லாச்லன் மெக்நீலை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தக்க வைத்துக் கொண்டார்.

பெண்களுக்கான மல்யுத்தத்தில் 57 கிலோ எடைபிரிவில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

62 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக் ஷி மாலிக் கனடாவின் கோடிநெஸ்சை வீழ்த்தி தங்கம் வென்றார்.

ஆடவருக்கான ப்ரீஸ்டைல் 86 கிலோ பிரிவில் தீபக் புனியா 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானின் முஹம்மது இனாமைத்தை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார்.

அடுத்து நடைபெற்ற மல்யுத்த போட்டிகளில் இந்தியாவின் திவ்யா கக்ரன் மற்றும் மோஹித் கிரேவால் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை உயர்த்தினர்.

பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா 50 தங்கம், 44 வெள்ளி, 46 வெண்கலம் என்று மொத்தம் 134 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 9 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என்று 26 பதக்கங்களுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-08-08T16:32:46+05:30

Related News