/* */

ஆசியக் கோப்பை டி20 தொடர் : பாகிஸ்தானுடன் மோதும் இந்திய அணி அறி்விப்பு

இம்மாதம் 27 ந்தேதி துவங்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 28 ந்தேதி பாகிஸ்தானுடன் இந்திய அணி களமிறங்குவதால் ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் உள்ளனர்.

HIGHLIGHTS

ஆசியக் கோப்பை டி20 தொடர் :   பாகிஸ்தானுடன் மோதும் இந்திய அணி அறி்விப்பு
X

வெஸ்ட் இண்டீசுடனான டி20போட்டிகள் முடிந்து ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. தற்போது ஆசியக்கோப்பை டி௨௦ டி௨௦ தொடருக்கான இந்திய வீரர்கள் பெயர் பட்டியலை இந்திய அணி தேர்வுக்குழுவானது வெளியிட்டது.

ரோகித்சர்மா கேப்டனாகவும், துணைக்கேப்டனாக ராகுலும் இடம்பெற்றுள்ளனர்.இதுமட்டும் அல்லாமல் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களாவன.

இந்திய அணி 1, ரோகித் சர்மா, 2, கேஎல் ராகுல், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ஹ்ர்திக் பாண்டியா, 6, ஜடேஜா, 7, ரிஷப் பண்ட், 8, அஸ்வின், 9, சாஹல். 10, பிஸ்னாய், 11, புவனேஸ்வர் குமார், 12, ஆவேஷ் கான், 13, ஆர்ஸ்தீப் சிங், 14 தீபக் ஹூடா, 15, தினேஷ் கார்த்திக். கூடுதல் வீரர்கள் - ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், அக்சர் பட்டேல்.

ஆசியக் கோப்பை தொடரானது டி20உலக கோப்பைக்கு முந்தைய தொடராக உள்ளதால் இந்திய அணி வீரர்களுக்குஇது சிறந்த பயிற்சி போட்டியாகவும் கருதலாம். ஆசியக்கோப்பை தொடரானது. இம்மாதம் 27 ந்தேதி துவங்குகிறது. செப்டம்பர் 11ந்தேதி வரை நடக்கிறது.

28 ந்தேதி இந்தியா-பாகிஸ்தான்

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நம் அணி மற்ற எந்த நாடுகளுடன் விளையாடினாலும் அதில் த்ரில்லிங் இருக்காது.ஆனால் பாகிஸ்தானுடன் மோதும் மேட்ச்களில் ரசிகர்கள் அதிக அளவில்கூடுவார்கள். கேலரியில் பெரும் சப்தமாக இருக்கும். வீரர்களும்அதற்கு தகுந்தாற்போல்விளாசி விளையாடுவர். இது வரை நடந்து வந்த மேட்ச் இது. ஆனால் 28ந்தேதி நடக்க உள்ள மேட்சில் அனல் பறக்கும் என தெரிகிறது. கொரோனாவால் பாகிஸ்தானோடு இந்திய அணி மோதி வருடக்கணக்காகிவிட்டது. எனவே இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கான த்ரில்லிங் மேட்ச்தான்.

அனுபவ வீரர்களுக்கு வாய்ப்பு

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட்கோலியும் ஆசிய கோப்பைத்தொடரில் இடம் பெற்றுள்ளதால் பாகிஸ்தானுடனான மேட்ச் களைகட்டும் என்பதில் ஐயமில்லை.தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன்ரோகித்சர்மாவும், துணைக் கேப்டன் ராகுலும் களமிறங்குவார்கள். 3 வது பேட்ஸ்மேனாக விராட்கோலி களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. நடுவரிசையில் தீபக்ஹீடா, சூர்யகுமார் யாதவ், களமிறங்குவார்கள் என எதிர்பார்கக்ப்படுகிறது.

விக்கெட் கீப்பர்கள்

ஆசியக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பாஸ்ட் பவுலர்கள்

இந்திய அணியி்ன் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஸ்குமார்,ஆர்ஸ்தீப் சிங், ஆவேஷ் கான் ,இளம்வீரர் பிஸ்னாய் ஆகியோர் ஆசிய கோப்பையில் விளையாட தேர்வாகியுள்ளனர். காயம் காரணமாக ஹர்சல்பட்டேல், பும்ரா ஆகியோர் இந்த தொடரில் இடம்பெறவில்லை. கூடுதல் வீரர்களாக அக்சர் படேல், ஷ்ரேயாஸ் அய்யர், தீபக்சாஹர் ஆகியோர் அனுப்பப்பட உள்ளனர்.

அதிரடி வீரர் ஹர்திக் இத்தொடரில் இடம்பெற்றிருப்பது இந்தியாவுக்கு கூடுதல் பலம் சேர்க்கும். அதேபோல் தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கும் ,சாஹல் ஆகியோருக்கும்வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது

Updated On: 10 Aug 2022 4:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?