/* */

உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதிக்குள் நுழைந்த அர்ஜென்டினா

மெஸ்ஸியின் மேஜிக் உதவியால் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது

HIGHLIGHTS

உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதிக்குள் நுழைந்த அர்ஜென்டினா
X

உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழையும்.

அதன்படி, நெதர்லாந்து , செனகல் (குரூப் ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி), அர்ஜென்டினா, போலந்து (சி), பிரான்ஸ், ஆஸ்திரேலியா (டி), ஜப்பான், ஸ்பெயின், (இ), மொராக்கோ , குரோஷியா (எப்) , பிரேசில், சுவிட்சர்லாந்து (ஜி), போர்ச்சுக்கல், தென் கொரியா (எச்) ஆகிய 16 நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த நிலையில், இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடந்த நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இந்த ஆட்டம் தொடங்கியது முதலே அர்ஜென்டினா அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. ஆனால் அர்ஜென்டினா அணியின் பலத்தை கணித்து ஆஸ்திரேலியா அணியின் அனைத்து வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அர்ஜென்டினா அணி கோல் அடிக்க முடியாமல் திணறியது. இதனிடையே மெஸ்ஸிக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் அதிக தொல்லையை ஏற்படுத்தினர். இதன் காரணமாக 34வது நிமிடத்தில் மெஸ்ஸிக்கு, ஃபிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்து அர்ஜென்டினாவின் மெஸ்சி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

இதுவரை 5 உலகக்கோப்பைப் போட்டியில் விளையாடியுள்ள மெஸ்ஸியின், முதல் நாக் அவுட் கோல் இதுவாகும். இதன் மூலம் மெஸ்ஸியின் நாக் அவுட் சாபம் முடிவுக்கு வந்தது.

இதனால் முதல் பாதியில் அந்த அணி 1-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்தோடு களமிறங்கினர். ஆனால் 57வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா அணியின் கோல்கீப்பர் மேட் ரியான் செய்த தவறால், அர்ஜென்டினா அணி ஆல்வரஸ் இரண்டாவது கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

77வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் குட்வின் அடித்த பந்து அர்ஜென்டினா அணி ஃபெர்னான்டஸ் காலில் பட்டு சொந்த கோலாக மாறியது. இதனால் ஆட்டம் 2-1 என்ற கோல் கணக்கில் பரபரப்பானது. இறுதியில், அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

மெஸ்ஸி தனது 1,000வது தொழில்முறை போட்டியில் 789வது கோல் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினா தனது தொடக்க ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது கத்தாரில் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளானது.

வரும் 10ம் தேதி நடக்கவுள்ள காலிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி வலிமையான நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது

Updated On: 5 Dec 2022 4:34 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?