/* */

காமன்வெல்த் போட்டி 2022: பளுதூக்குதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

Weightlifting Game - பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் அச்சிந்தா ஷூலி 313 கிலோ தூக்கி முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார்

HIGHLIGHTS

காமன்வெல்த் போட்டி 2022: பளுதூக்குதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
X

Weightlifting Game - 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை பளுதூக்குதலில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்நிலையில், ஆண்களுக்கான பளு தூக்குதலின் (73 கிலோ) இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. அதில் இந்தியாவின் அச்சிந்தா ஷூலி பங்கேற்றார். இப்போட்டியில் அவர் மொத்தம் 313 கிலோ தூக்கி தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார்.

அவர் ஸ்னாட்ச் பிரிவில் 143 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க்கில் 170 கிலோவும் தூக்கினார். மலேசியாவின் ஹிதாயத் முஹம்மது 303 கிலோ எடையுடன் இரண்டாவது இடத்தையும், கனடாவின் ஷாட் டார்சினி 298 கிலோ எடையுடன் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினார்.

அச்சிந்தா ஷூலி தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா இதுவரை 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் வென்றுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 Aug 2022 6:14 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!