/* */

குரு பெயர்ச்சி 2023 எப்போது?

Guru Peyarchi Palan 2023-குரு பெரும்பாலும் தீய பலன்கள் தருவதில்லை. அதேநேரம் சில அமைப்புகள் குருவை நமக்கு பலன் தரவிடாமல் முடக்கும். அப்படிப்பட்ட அமைப்புகள் கொண்ட ராசியினர் குரு பெயர்ச்சி சமயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

HIGHLIGHTS

Guru Peyarchi Palan 2023
X

Guru Peyarchi Palan 2023

Guru Peyarchi Palan 2023-குரு பெயர்ச்சி 2023 வரும் ஏப்ரல் 22ம் தேதி நடக்கிறது. குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கிறார். இதனால் எந்த எந்த ராசியினருக்கு நல்லது எந்தெந்த ராசியினர் கவனமாக இருக்கவேண்டும் என்பன குறித்த தகவல்களை பார்ப்போம்.

குரு பெரும்பாலும் தீய பலன்கள் தருவதில்லை. அதேநேரம் சில அமைப்புகள் குருவை நமக்கு பலன் தரவிடாமல் முடக்கும். அப்படிப்பட்ட அமைப்புகள் கொண்ட ராசியினர் குரு பெயர்ச்சி சமயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

குரு பெயர்ச்சி 2023 : இந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் மக்களே!

குருவின் பார்வை பட்டால் அதிர்ஷ்ட பலன்கள்...!

குரு பார்க்கும் இடங்களில் இருக்கும் ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் அடிக்கும் என்பார்கள். குருவின் பார்வை படும் இடத்தில் இருக்கும் ராசி, கிரகங்கள் பலன்களை பெறும். குரு பகவான் தற்போது பெயரும் இடத்திலிருந்து 5,7,9, 11 ஆகிய இடங்களில் இருக்கும்போது மிகவும் சிறப்பான பலன்களைத் தருவார். இதனால் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு ஆகிய ராசிக்காரர்களுக்கு மிகுந்த யோகம் கிடைக்கும். இவர்கள் சிறப்பான பலன்களை பெறுவார்கள்.

மேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 | Mesha rasi guru peyarchi 2023 | guru peyarchi 2023 for mesha rasi

நல்ல குணம் கொண்ட மேஷ ராசிக்காரர்களே இந்த குருப் பெயர்ச்சியில் நீங்கள் அடையப் போகும் லாபம் என்பது நீங்களே எதிர்பாராதது. வீடு வாங்கவும், நிலம் வாங்கவும் வாய்ப்பு அமையும். தங்கம் வாங்குவது கூடுதல் சிறப்பாக இருக்கும். திருமணம் கைகூடி வரும், பொருளாதாரத்தில் அடுத்த படியை தொடுவீர்கள். சம்பளம் அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும். காதலில் சிக்கல்கள் குறைந்து மனம் தெளிவாகும். அப்பா வழியில் நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த பிரச்னை தீர்ந்து சுமூகமாக முடித்து வைக்கப்படும். வெளிநாடு போகும் வாய்ப்பும் உருவாகும். உடல் ஆரோக்யத்தில் மிக மிக கவனம் தேவை.

மிதுன ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 | Mithuna rasi guru peyarchi 2023 | guru peyarchi 2023 for mithuna rasi

அடுத்தடுத்து வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம், குழந்தை, வீடு கட்டுதல், நிலம் வாங்குதல் என ஒட்டு மொத்த நல்ல செய்திகளும் உங்களுக்கு இந்த 2 வருடங்களில் நடந்தேறும். பூர்வீக சொத்துக்களின் மூலம் வியாபாரம் செய்யுங்கள், பொருளாதாரம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் நிச்சயம் நிறைவேறும்.

சிம்ம ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 | Simma rasi guru peyarchi 2023 | guru peyarchi 2023 for simma rasi

குரு பார்த்தால் கோடி நன்மை. அது எந்த ராசிக்காருக்கு பொருந்துமோ இல்லையோ சிம்ம ராசிக்காரர்கள் உண்மையில் ஆளப்பிறந்தவர்கள். திருமணம் சீரும் சிறப்புமாக நடந்தேறும். அதிர்ஷ்டம் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது உங்களின் 100 சதவிகித உழைப்பை போடுங்கள் வெற்றி உங்கள் கையில்.

துலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 | Thulam rasi guru peyarchi 2023 | guru peyarchi 2023 for Thulam rasi

லாப ஸ்தானத்தை குரு பார்க்கிறார். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உடன் பிறந்தோர் வழியில் உதவி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். காதல் திருமணத்துக்கு 100 சதவிகிதம் வாய்ப்பு உருவாகும். பேச்சில் சிறந்தவரான நீங்கள் பேசியே அனைத்தையும் சாதிப்பீர்கள்.

தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 | dhanush rasi guru peyarchi 2023 | guru peyarchi 2023 for dhanush rasi

வெளிநாடு பயணம் போக வாய்ப்பு கிடைக்கும். அதேநேரம் தொழிலில் முதலீடுகள் தேடி வரும். தொழிலா, வேலையா என குழப்பத்தில் இருக்கும் உங்களுக்கு முடிவு எடுக்கவேண்டிய நாள் நெருங்கிவிட்டது. தொழிலில் இறங்கினால் ஓஹோன்னு செல்வீர்கள். திருமணம், குழந்தை வாய்ப்பு உண்டு.

கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

குருபகவான் எங்கு அமர்ந்தாலும் நன்மைதான் என்றாலும், இந்த அமைப்புகளில் குருவால் பெரிய நன்மைகள் எதையும் தரமுடியாத ராசிகளும் இருக்கின்றன. அவை எந்தெந்த ராசிகள் என்பதை நாம் தெரிந்து கொண்டு அந்த ராசிக்காரர்கள் மிக கவனமாக செயல்படும்போது நிச்சயம் பலன்கள் இல்லையென்றாலும் சாமர்த்தியத்தால் நாம் சாதிக்க முடியும்.

ரிஷப ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 | Rishaba rasi guru peyarchi 2023 | guru peyarchi 2023 for Rishaba rasi

12ம் வீட்டில் விரய ஸ்தானத்தில் நுழைகிறார் குரு. இதனால் இன்னல்கள் உண்டாகும்.

செலவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகலாம்.

கடக ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 | kadaga rasi guru peyarchi 2023 | guru peyarchi 2023 for kadaga rasi

கடக ராசிக்கு 10வது இடத்தில் தொழில் ஸ்தானத்தில் வருகிறார். இதனால் பெரிய பலன் கிடைக்கப்போவது இல்லை. ஆரம்பத்தில் தொழில், வியாபாரம், வேலைகளில் பல இன்னல்கள் வந்து வந்து போகும். வேலையைத் தக்கவைத்துக் கொள்ள பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருக்கும். பெரிய முதலீடுகளை செய்வதை தவிருங்கள்.

கன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 | Kanni rasi guru peyarchi 2023 | guru peyarchi 2023 for Kanni rasi

கன்னி ராசிக்கு 8ம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் வருகிறார் குரு. இது ஆயுள் தொடர்பான ஸ்தானம். ஆரோக்யம் மேம்படும். ஆனாலும் சில தர்மசங்கடமான சூழலில் சிக்கி சின்னாபின்னமாகும் நிலைமையும் உண்டு.

மனக்கஷ்டங்கள் அதிக அளவில் உண்டாகும்.

விருச்சிக ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 | Viruchiga rasi guru peyarchi 2023 | guru peyarchi 2023 for viruchiga rasi

6ம் வீட்டில் குரு வருகிறார். இதனால் எதிரிகளால் பெரிய கஷ்டங்கள் உண்டாகலாம். அவர்களை சமாளித்து வெளியே வருவது மிகப்பெரிய சவாலான விசயமாக இருக்கும். உடல் நலத்தில் மிகுந்த கவனம் வேண்டும்.

மகர ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 | Magara rasi guru peyarchi 2023 | guru peyarchi 2023 for magara rasi

மகர ராசிக்கு குரு 4ம் இடமான தாயார் ஸ்தானத்தில் வரப்போகிறார். தாயின் ஆரோக்யத்தில் கவனம் தேவை. திடீர் செலவுகள், ஆடம்பர செலவுகளைத் தவிர்க்க வேண்டும்.

குரு பெரும்பாலும் தீய பலன்கள் தருவதில்லை. அதேநேரம் சில அமைப்புகள் குருவை நமக்கு பலன் தரவிடாமல் முடக்கும். அப்படிப்பட்ட அமைப்புகள் கொண்ட ராசியினர் குரு பெயர்ச்சி சமயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.2ம் இடமான தன, குடும்ப ஸ்தானத்தில் வரப்போகிறார் குரு. நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஆனால் செலவும் ஒரு பக்கம் இருக்கும். குடும்பத்துக்குள் குழப்பம் உண்டாகும். சமாளித்து போனால் பெரிய சண்டைகளைத் தவிர்க்கலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 30 March 2024 6:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  5. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  6. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  7. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  8. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  9. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  10. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...