/* */

கன்னி ராசியில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்

Virgo Horoscope In Tamil-கன்னி ராசியினர் எந்தத் துறையிலும் வெற்றி பெறுவார்கள். எந்தவொரு வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் சாமார்த்தியமாக முடிப்பார்கள்.

HIGHLIGHTS

Virgo Horoscope In Tamil
X

Virgo Horoscope In தமிழ்-கன்னி ராசி

கன்னி ராசியினர் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள்.

கன்னி ராசியினர் எந்தத் துறையிலும் வெற்றி பெறுவார்கள். இதனை அவர்களுடைய ஜாதகத்தைப் பார்த்தே அறிந்துகொள்ளலாம். இந்த ராசியில் பிறந்தவர்கள் ஆசியராகவும், செய்தியாளர்களாகவும் நன்றாக பணிபுரிவார்கள். பணத்தின் அருமையும், முக்கியத்துவத்தையும் புரிந்தவர்கள். சிக்கனமாக இருக்க ஆசைப்படுவார்கள். எந்தவொரு வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் சாமார்த்தியமாக முடிப்பார்கள்.

இவர்கள சின்ன சின்ன விஷயங்களைக் கூட பெரியதாக எடுத்துக் கொள்வார்கள். அன்பை வெளிப்படுத்தாதவர்கள். முன்கோபக்காரர்கள். பழைய பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். ஒரு காரியத்தை எடுத்தால் அதை சீராக முடிப்பவர்கள்.


கன்னி ராசியில் பிறந்தவர்கள் மகர ராசி அல்லது விருச்சிக ராசியில் பிறந்தவர்களுடன் திருமண சம்பந்தம் வைத்துக் கொள்வது அதிக சுகம் ஆகும். இவர்களுடைய வாரிசு அறிவாளியாக இருக்கும். கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு பேச்சில் அவர்களுடைய உயிர் தோழனும் குழந்தையும் சம்பந்தப்பட்டிருப்பார்கள். கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு அன்பு இருக்கும். இவர்களுடைய வாழ்க்கையில் பெண் உதவி சம்பந்தப்பட்டிருக்கும்.

கன்னி ராசிக்காரர் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பவர். பணத்தின் மகத்துவத்தை நன்றாக புரிந்தவர்கள். பணத்தை பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும் என விருப்பமுடையவர். மனை வாங்கும் விஷயத்தில் பணம் செலவழித்தால் வெற்றி பெறுவர். அனைத்துபொருட்களையும் தானே இஷ்டப்பட்டு வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

புதுமை விரும்பியதாகவும், புரட்சியாளராகவும் இருப்பார்கள். பல ரகசியங்களை உள்ளடக்கியவராகவும் இருப்பார். வாதம் செய்வதில் வல்லவராகவும் இருப்பார். சேவை செய்வதில் விருப்பமும், எதையும் தெளிவாக சிந்தித்து முடிவெடுப்பதில் சாமர்த்தியசாலியாகவும் இருப்பார்

இவர்கள் கூட்டு குடும்பத்தில் தான் இருப்பார்கள். ஆனாலும் வெளியில்தான் மதிப்பு இருக்கும். குடும்பம் பிரிவதை ஏற்க மாட்டார்கள். அரசியலில் ஈடுபாடு இருக்கும். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தாங்கிக் கொள்வார்கள். குடும்பத்தில் உள்ளவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள். இவர்களுக்கு எந்த கஷ்டம் வந்தாலும் மற்றவர்களுக்கு நன்மையே செய்வார்கள்.


அதிர்ஷ்ட நிறம் பச்சை, ஆரஞ்சு, வெள்ளை. இந்த நிறத்தில் உள்ள ஆடைகள் அணிந்து கொண்டால் மனதில் அமைதி ஏற்படும். பாக்கெட்டில் பச்சை கலர் கொண்டு இருந்தால் லாபம் அதிகரிக்கும். இவர்கள் உடையில் பச்சையும் மஞ்சளும் கலந்து உடை தேர்ந்தெடுக்க வேண்டும்.

கல்வி, படிப்பு விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்கள். அதனால் படிப்பில் முன்னேற்றத்தை பெறுவர். கஷ்டப்பட்டு கடின உழைப்பில் வெற்றி பெறுபவர்.

படிப்பில் ஆர்வம் அதிகம். இவர்கள் விழிப்புணர்வோடும், கவனிப்போடும் இருப்பதனால் எழுத்தாளர்களாகவும் ஆவார்கள். கன்னி ராசியினர் உதவி செய்யும் குணமுடையவர். வழக்கறிஞராகவும், மருத்துவராகவும், செய்தி வாசிப்பவர்களாகவும் வெற்றி பெறுவார்கள்

கன்னி ராசியினர் நேரம் தவறி சாபபிடுவதால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களால் அவதிபடுவார்கள். இந்த ராசிகாரர்களுக்கு பித்தம், இருமல், தும்மல், தோல் வியாதி, காது வலி, தொண்டை வலி, வாயு, அம்மை, மூட்டு வலி, முதுகு வலி, படர்தாமரை போன்றவை ஏற்படலாம்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 March 2024 8:46 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...