/* */

வினை தீர்க்கும் விநாயகனின் மந்திரங்களை உரக்க சொல்லுங்க.... வினைகள் பறந்தோடிடும்....

Vinayagar Mantra in Tamil முதற்கடவுளான விநாயகருக்கு சதுர்த்தி தினத்தில் விமர்சையாக பூஜைகள் நடக்கும். வினை தீர்ப்பவருக்கான மந்திரங்கள் , போற்றி அழகிய தமிழில் படிச்சு பாருங்க....

HIGHLIGHTS

வினை தீர்க்கும் விநாயகனின்  மந்திரங்களை உரக்க சொல்லுங்க....  வினைகள் பறந்தோடிடும்....
X


Vinayagar Mantra in Tamil-இறைவனின் படைப்பில் மனிதர்களாகிய நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது ஐதீகம். அந்த வகையில் நாம் வாழும்போது வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களுக்கும் நாம் இறைவனையே சரணடைகின்றோம். அந்த வகையில் முதற் கடவுளான விநாயகனின் பூஜை இல்லாத எந்த காரியமாவது உண்டா?

எந்தவொரு காரியமாகட்டு்ம் முதலில் கணபதி பூஜை போட்டுத்தான் துவங்குவார்கள். அந்த வகையில் அனைவருக்கும் எளிதானவன் விநாயகன். மண்ணினாலும் செய்யலாம், மஞ்சளினாலும் செய்யலாம்... சாதாரணமாக கையால் உருட்டினாலோ பிள்ளையார் வந்து விடுவார். அவர் தான் பிள்ளையார்.

இவரை வணங்கியவர்களை அவர் எப்போதும் கைவிட்டதில்லை. ஆம்.. இவருக்கான பெருவிழாதான் வரும் 31 ந்தேதி வருகிறது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை தமிழகத்தில் 10 நாட்களுக்கு மேல் வெற்றி விழாவாக கொண்டாடுவர். சாதி, இன, மத பேதமற்ற கடவுள் பிள்ளையார். எளியோரும் அணுக கூடிய இறைவன் விநாயகன் ஒருவனே.

இதுவே வட மாநிலங்களில் கணேஷ் சதுர்த்தி என வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது உண்டு. ராட்சத லட்டு பிரசாதங்கள் அலங்கரிக்கும். காண கண் கோடி வேண்டும் இதற்கு.

தமிழகத்தில் கற்பக விநாயகர் கோவில் அமைந்திருக்கும் பிள்ளையார் பட்டியில் களை கட்டும்.

விநாயகனைப் போற்றுவோம்... வினைகள் தீர்ப்போம்...

இவருக்கான மந்திரங்கள், போற்றி ....அழகிய தமிழில் இதோ.....

ஓம் விநாயகனே போற்றி

ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி

ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி

ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி

ஓம் அமிர்த கணேசா போற்றி

ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி

ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி

ஓம் ஆனை முகத்தோனே போற்றி

ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி

ஓம் ஆதி மூலமே போற்றி ஓம் ஆனந்த உருவே போற்றி

ஓம் ஆபத் சகாயா போற்றி

ஓம் இமவான் சந்ததியே போற்றி

ஓம் இடரைக் களைவோனே போற்றி

ஓம் ஈசன் மகனே போற்றி

ஓம் ஈகை உருவே போற்றி

ஓம் உண்மை வடிவே போற்றி

ஓம் உலக நாயகனே போற்றி

ஓம் ஊறும் களிப்பே போற்றி

ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி

ஓம் எளியவனே போற்றி

ஓம் எந்தையே போற்றி

ஓம் எங்குமிருப்பவனே போற்றி

ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி

ஓம் ஏழை பங்காளனே போற்றி

ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி

ஓம் ஐயனே போற்றி ஓம் ஐங்கரனே போற்றி

ஓம் ஒப்பிலாதவனே போற்றி

ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி

ஓம் ஒளிமய உருவே போற்றி

ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி

ஓம் கருணாகரனே போற்றி

ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி

ஓம் கணேசனே போற்றி

ஓம் கணநாயகனே போற்றி

ஓம் கண்ணிற்படுபவனே போற்றி

ஓம் கலியுக நாதனே போற்றி

ஓம் கற்பகத்தருவே போற்றி

ஓம் கந்தனுக்கு தவியவனே போற்றி

ஓம் கிருபாநிதியே போற்றி

ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி

ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி

ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி

ஓம் குணநிதியே போற்றி

ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி

ஓம் கூவிட வருவோய் போற்றி

ஓம் கூத்தன் மகனே போற்றி

ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி

ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி

ஓம் கோனே போற்றி

ஓம் கோவிந்தன் மருமகனே போற்றி

ஓம் சடுதியில் வருபவனே போற்றி

ஓம் சங்கரன் புதல்வனே போற்றி

ஓம் சங்கடஹரனே போற்றி

ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி

ஓம் சிறிய கண்ணோனே போற்றி

ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி

ஓம் சுருதிப் பொருளே போற்றி

ஓம் சுந்தரவடிவே போற்றி

ஓம் ஞாலம் காப்பவனே போற்றி

ஓம் ஞான முதல்வனே போற்றி

ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி

ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி

ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி

ஓம் துயர் துடைப்பவனே போற்றி

ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி

ஓம் தேவாதி தேவனே போற்றி

ஓம் தொந்தி விநாயகனே போற்றி

ஓம் தொழுவோ நாயகனே போற்றி

ஓம் தோணியே போற்றி

ஓம் தோன்றலே போற்றி

ஓம் நம்பியே போற்றி

ஓம் நாதனே போற்றி

ஓம் நீறணிந்தவனே போற்றி

ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி

ஓம் பழத்தை வென்றவனே போற்றி

ஓம் பாரதம் எழுதியவனே போற்றி

ஓம் பரம்பொருளே போற்றி

ஓம் பரிபூரணனே போற்றி

ஓம் பிரணவமே போற்றி

ஓம் பிரம்மசாரியே போற்றி

ஓம் பிள்ளையாரே போற்றி

ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி

ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி

ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி

ஓம் புதுமை வடிவே போற்றி

ஓம் புண்ணியனே போற்றி

ஓம் பெரியவனே போற்றி

ஓம் பெரிய உடலோனே போற்றி

ஓம் பேரருளாளனே போற்றி

ஓம் பேதம் அறுப்போனே போற்றி

ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி

ஓம் மகிமையளிப்பவனே போற்றி

ஓம் மகாகணபதியே போற்றி

ஓம் மகேசுவரனே போற்றி

ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி

ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி

ஓம் முறக்காதோனே போற்றி

ஓம் முழுமுதற்கடவுளே போற்றி

ஓம் முக்கணன் மகனே போற்றி

ஓம் முக்காலம் அறிந்தானே போற்றி

ஓம் மூத்தோனே போற்றி

ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி

ஓம் வல்லப கணபதியே போற்றி

ஓம் வரம்தரு நாயகனே போற்றி

ஓம் விக்னேஸ்வரனே போற்றி

ஓம் வியாஸன் சேவகனே போற்றி

ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி

ஓம் வெற்றியளிப்பவனே போற்றி



விநாயகர் சகஸ்ரநாமம்:

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்

ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே



விநாயகர் ஸ்லோகம்:

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்

உமாஸுதம் சோக வினாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்



. விநாயகர் ஸ்லோகம்:

ஓம் தத்புருஷாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி

தன்னோ தந்தி ப்ரசோதயாத்



ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்

புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.




மூஷிக வாகன மோதக ஹஸ்த

சாமர கர்ண விளம்பித சூத்ர

வாமன ரூப மஹேஸ்வர புத்ர

விக்ன விநாயக பாத நமஸ்தே.




வக்ரதுண்டாய ஹீம்

ஓம் நமோ ஹேரம்ப மதமோதித

மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா

ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

விநாயகர் ஸ்லோகம்:

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த

தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல

குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்

கணபதியைக் கைதொழுதக் கால்.

ஆகியவற்றை தினமும் படித்து அருகம்புல்லால் விநாயகரை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும். பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும்.

விநாயகரை வணங்கினால் நம் காரியம் ஜெயம் ஆவது உறுதி.... நம்பிக்கையோடு வழிபடுங்க......


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 17 April 2024 9:38 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!