/* */

பயம் போக்கும் வராஹி மந்திரம்..! தினமும் உச்சரிங்க..! துணிச்சல் ஆகுங்க..!

Varahi Moola Mantra Lyrics-பயம் இருப்பவர் வாழ்க்கையில் எதையும் எதிர்கொண்டு வாழ்வது சிரமம். அதனால்,மன தைரியம் வளர என்ன செய்யலாம்? பார்ப்போம் வாங்க.

HIGHLIGHTS

Varahi Moola Mantra Lyrics
X

Varahi Moola Mantra Lyrics 

Varahi Moola Mantra Lyrics

ஒரு மனிதனுக்கு எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் அதனை ஏதாவது ஒரு வகையில் அவன் சமாளித்துக் கொள்வான். அதற்கு தானே ஒரு வழிவகை கிடைத்துவிடும். ஆனால் சில சமயங்களில் தான் செய்யாத தவறுக்கு, மற்றவர்களிடம் அவமானப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். செய்யாத தவறுக்கு தண்டனையை அனுபவிப்பது மிகவும் கொடுமையான ஒன்று. இதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். இப்படி நாம் செய்யாத ஒரு தவறுக்கு பழி விழுந்தால், அதிலிருந்து எப்படி வெளிவருவது என்ற மன பயம் நமக்குள் வந்துவிடும். இதனால் நமக்கு ஏற்படும் தடுமாற்றம் நம்மை பல வழிகளில் சிக்க வைத்து விடுகிறது. இப்படியான ஒரு இக்கட்டான நிலமையை மனிதனாக பிறந்த எல்லோருமே எதிர்கொண்டு ஆகவேண்டும்.

அந்த இக்கட்டான சூழ்நிலையில் நம் மனதில் இருக்கும் பயத்தை போக்குவதற்கான ஒரு சிறந்த வழிபாடு தான் இந்த வராஹி வழிபாடு. இந்த மூல மந்திரத்தை உச்சரிக்கும் போது நம்மை அறியாமலேயே நம் மனதிலுள்ள பயம் நீங்கும். உங்களுக்கான வராஹி அம்மனின் மூல மந்திரம் கீழே தரப்பட்டுள்ளது.

வராஹி அம்மன் மூல மந்திரம் :

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம்

நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வராஹி வராஹி வராஹமுகி வராஹமுகி

அந்தே அந்தினி நமஹ

ருந்தே ருந்தினி நமஹ

ஜம்பே ஜம்பினி நமஹ

மோஹே மோஹினி நமஹ

ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ

சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம் சர்வ வாக்சித்த சக்ஷூர் முககதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வச்யம்,ஐம் க்லௌம் ட்டஹ ட்டஹ ட்டஹ ட்டஹ ஹூம் அஸ்த்ராய ப்பட்

மாதுளை நைவேத்தியம்

தினம் தோறும் நம் மனதில் அந்த வராஹி அம்மனை நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் பயந்த சுபாவம் மறைந்து, நம்மை அறியாமலேயே நம் மனதிற்குள் தன்னம்பிக்கையும், தைரியமும் வளரும். அஷ்டமி திதியன்று நெய்தீபம் ஏற்றி வராஹி அம்மனை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. வராஹி அம்மனுக்கு மாதுளம்பழம் நைவேத்தியமாக படைப்பது மிகவும் சிறப்பு.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 22 April 2024 6:17 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்