/* */

வைகாசி பௌர்ணமி – மறக்காமல் இதை எல்லாம் செய்து பலன்களை பெறுங்கள்

இளவேனில் எனும் வசந்த காலத்தில் வரும் வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்பர். பொருளாதார கஷ்டத்தை போக்கி செல்வம் அருளும் வைகாசி பௌர்ணமி விரதம்

HIGHLIGHTS

வைகாசி பௌர்ணமி – மறக்காமல் இதை எல்லாம் செய்து பலன்களை பெறுங்கள்
X

வளம் தரும் வைகாசி மாதத்தை 'மாதவ மாதம்' என்றும் வைகாசம் என்று போற்றுவர். வைகாசி முதல் தேதியில் கங்கை நதியில் நீராடினால் ஏழேழு ஜென்மங்களில் செய்த பாபங்கள் நீங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. வைகாசி என்பதை விசாகம் என்றும் சொல்வர். விசாகம் என்றால் " மலர்ச்சி' என்று பொருள். வைகாசிதான் சமஸ்கிருதத்தில் வைசாகம் ஆனது. இம்மாதத்தில் புனித நதியில் நீராடி மஹாவிஷ்ணுவை துளசி இலைகளால் பூஜை செய்தால் நற்பேறுகள் பல பெறலாம் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.

1. மேலும் வைகாசி மாதத்தில் பல அவதாரங்கள் நிகழ்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. வைகாசி பௌர்ணமி அன்று சிவபெருமானின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியானது ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் தோன்றியது.

2. வைகாசி சுக்ல சதுர்த்தசியில்தான் மஹாவிஷ்ணு தன் பக்தன் பிரகலாதனுக்காக ஒரு நொடிப்பொழுதில் நரசிம்ம அவதாரம் எடுத்தார்.

3. கௌதம புத்தர் அவதரித்தது ஒரு வைகாசி பௌர்ணமி என்று வரலாறு சொல்கிறது. அவர், கயாவில் போதி மரத்தடியில் ஞானம் பெற்றதும் வைகாசி பௌர்ணமியே ஆகும்.

4. வைகாசி மாத மூலநட்சத்திர நாள் திருஞானசம்பந்தரின் திருநட்சத்திர தினம். அன்று ஆச்சாள் புரத்தில் திருஞானசம்பந்தர் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

5. நம்மாழ்வார், திருக்கோட்டியூர் நம்பிகள் அவதரித்த மாதம் வைகாசி.

6. காஞ்சி மகாபெரியவர் அவதரித்ததும் வைகாசி பௌர்ணமியே. ஆதிசங்கரர் தோன்றியது வைகாசி பஞ்சமி.

வைகாசி பௌர்ணமி – மறக்காமல் இதை எல்லாம் செய்து பலன்களை பெறுங்கள்

தமிழ் மாதங்களில் இரண்டாவதாக வரும் மாதமாக வைகாசி மாதம் இருக்கிறது. சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயரும் மாதமே வைகாசி மாதம் எனப்படுகிறது. வைகாசி மாதத்தில் வளர்பிறை காலத்தில் தொடர்ந்தாற்போல் பல சிறப்பான தினங்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் வைகாசி பௌர்ணமி தினம். இந்த வைகாசி பௌர்ணமி தினத்தன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வைகாசி பௌர்ணமி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, உங்களின் விருப்பத்திற்குரிய தெய்வங்களை வழிபடுவதால் அந்த தெய்வத்தின் பரிபூரண ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும். மாலை வேளையில் வானில் தோன்றும் சந்திர பகவானை தரிசித்து வழிபடுவது மிகவும் சிறந்தது.

மற்ற எல்லா தானங்களிலும் விட சிறந்த தானம் அன்னதானம் என்பது நமது நமது முன்னோர்களின் கருத்தாக உள்ளது. எனவே புண்ணியம் மிகுந்த இந்த வைகாசி பௌர்ணமி தினத்தன்று தயிர்சாதம், எலுமிச்சை சாதம், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றை பக்தர்களுக்கு தானமாக வழங்குவது உங்களின் பாவ வினைகளை போக்கி புண்ணியத்தை உண்டாக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் மற்றும் மனம் சார்ந்த நோய்கள், குறைபாடுகள் நீங்கும். பொருளாதார கஷ்ட நிலைகள் நீங்கி செல்வ சேர்க்கை உண்டாகும்.

Updated On: 15 May 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  4. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  5. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  6. கோவை மாநகர்
    தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ; அக்னிசட்டி எடுத்து...
  7. கோவை மாநகர்
    சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  9. கவுண்டம்பாளையம்
    சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் காங்கிரஸ் : தமிழிசை
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்