/* */

twitching meaning in tamil-கண்பேசும் வார்த்தைகள் தெரியும்..! கண் கூறும் பலன்கள் தெரியுமா..? தெரிஞ்சுக்கங்க..!

twitching meaning in tamil-ஒரு முகத்தின் கண்கள் அந்த உடலின் கண்ணாடி போன்றது. ஆமாம், உடல் மட்டுமல்ல உள்ளத்தின் உணர்வுகளையும் கண்கள் காட்டிவிடும்.

HIGHLIGHTS

twitching meaning in tamil-கண்பேசும் வார்த்தைகள் தெரியும்..! கண் கூறும் பலன்கள் தெரியுமா..? தெரிஞ்சுக்கங்க..!
X

twitching meaning in tamil-கண் துடிப்பதால் ஏற்படும் பலன்கள்.(கோப்பு படம்)

twitching meaning in tamil-எதிர்காலம் குறித்த கவலை இளைய வயதில் யாருக்கும் வருவதில்லை ஆனால், ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் அதைப்பற்றிய சிந்தனை தானே வந்துவிடும். எதிர்காலம் எப்படி அமையும் என்று அறிந்துகொள்வதற்கு ஜோதிட கலையில் கைரேகை சாஸ்திரம், எண்கணித சாஸ்திரம், ஜாதகத்தை கொண்டு பலன்கள் கூறுவது போன்ற அனைத்துமே வரும் காலத்தில் நமது வாழ்க்கையில் ஏற்படப்போகிற நிகழ்வுகளை ஓரளவு அறிந்துகொள்ள உதவுகின்ற கலைகளாகும். பொதுவாகவே எல்லோருக்கும் வாழ்க்கை இனிமையானதாக அமையவேண்டும் என்பதே எண்ணமாக இருக்கும். அப்படி வாழ்க்கை அமைவதற்கு அவர்களின் உழைப்பும் முயற்சியும் அவசியம்.

ஜோதிடத்தில் பலவகையான சாஸ்த்திர முறைகள் உள்ளன என்பது நமக்குத் தெரியும்.அதில் ஒன்றுதான் துடி சாஸ்திர நூல். உடலில் சில பாகங்களில் ஒரு துடிப்பு ஏற்படுவது வழக்கமான ஒன்று. உடலின் பல பாகங்களில் ஏற்படும் இத்தகைய துடிப்புகள் நமக்கு ஏற்படவிருக்கும் நன்மை, தீமைகளை பற்றி கூறும் அறிகுறிகளாக பெரும்பாலான மக்களால் பார்க்கப்படுகிறது. அதில் முக்கியமாக கண் துடிப்பது.


இந்த கட்டுரையில் கண் துடிப்பதற்கு காரணங்கள் மற்றும் அதற்கான பலன்களையும் தெரிந்துகொள்வோம் வாங்க.

twitching meaning in tamil

கண் துடிப்பதால் ஏற்படும் பலன்

கண்துடித்தல் என்பது கண்களை சுற்றியிருக்கும் நரம்புகள், நாளங்களில் சில சமயம் அதிக அழுத்தத்துடன் ரத்தம் பாயும்போது அந்தப்பகுதிகளில் வேகமான துடிப்பு ஏற்படுவதை உணர முடியும். இது உடல் சார்ந்த ஒரு செயல்பாடு.

இருப்பினும் கண்துடிப்பு ஏற்படுவது நமக்கு ஏற்படப்போகும் நன்மை மற்றும் தீமைகளை முன்னறிவிப்புச் செய்யும் ஒரு அறிகுறியாகவே பழங்காலம் தொட்டு கருதப்பட்டு வருகிறது. "கலித்தொகை, சிலப்பதிகாரம், கம்பராமாயணம்" போன்ற தமிழ் இலக்கியங்களிலும் கண்துடித்தல் உண்டாவதால் ஏற்படும் பலன்கள் குறித்து கூறப்படுகின்ற வரிகள் இருக்கின்றன.

கண்களை காக்கும் கண் இமைகள், புருவங்கள், ஒட்டுமொத்த கண்களை சார்ந்த பகுதிகள் ஆகிய ஒவ்வொன்றும் துடிப்பதற்கேற்ப ஒவ்வொரு பலன்கள் கூறப்படுகின்றன.


பலன்கள் என்ன?

ஆண்களுக்கு வலது கண்பகுதியில் துடிப்பு ஏற்பட்டால் நன்மை ஏற்படும். அதாவது, ஏதாவது ஒரு வழியில் நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை.

பெண்களுக்கு இடது கண்பகுதியில் துடிப்பு ஏற்பட்டால் அது நற்பலன்கள் ஏற்படபோவதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.

twitching meaning in tamil

அதுவே ஆண்களுக்கு இடது கண் பகுதியிலும், பெண்களுக்கு வலது கண் பகுதியிலும் துடிப்பு ஏற்பட்டால் அது கெடுதலான பலன்கள் ஏற்படுவதற்கான அறிகுறி என ஜோதிட சாஸ்திரத்தின் ஒரு பிரிவான, துடிசாஸ்திரநூல் கூறுகிறது.

ஆண்கள்

ஆண்களுக்கு வலது கண் புருவம் துடித்தால் புகழ், பெருமை ஏற்படும். வலது கண் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் சீக்கிரத்தில் தீர்வதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. வலது கண்ணின் கீழ் சதைப்பகுதி துடித்தால் செல்வமும், புகழும் உண்டாகும். இடது புருவம் துடித்தால் வம்பு, வழக்குகள் ஏற்படலாம்.


பெண்கள்

பெண்களுக்கு இடது கண்பகுதி முழுதும் துடித்தால் செல்வம், புகழ் உண்டாகும். இடது கண்ணின் மேல் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் அனைத்தும் விரைவில் தீரப்போவதின் அறிகுறியாக கருதப்படுகிறது.

அதேநேரத்தில் பெண்களுக்கு வலது கண்ணின் கீழ் இமை துடித்தால் கணவருக்கு உடல்பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறி ஆக கருதப்படுகிறது.

ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலருக்கும் ஒரே நேரத்தில் இரண்டு கண்களின் புருவங்கள் சேர்ந்து துடித்தால் அவர்களுக்கு நற்பலன்கள் ஏற்படப் போகிறது என்பதைக் காட்டும் அறிகுறியாகும்.

நம்பிக்கை

இது ஒரு நம்பிக்கைத்தான். நல்லது ஏற்படப்போகும் என்ற நம்பிக்கை மனதில் புதிய உத்வேகத்தை உருவாக்கும். அதன் மூலம் அவர்களின் செயல்பாடுகளும் நம்பிக்கை மிகுந்து சிறப்பாக இருக்கும். அதனால் அவர்கள் எடுத்த காரியத்தில் வெற்றி அடைகிறார்கள். அதற்கு காரணம் பலன்கள் மீதான நம்பிக்கை.

twitching meaning in tamil

அதேநேரத்தில் எதிர் பலன் உடையவர்கள் எதிலும் ஜாக்கிரதையாக இருக்க நினைப்பார்கள். அந்த எச்சரிக்கை உணர்வு அவர்களுக்கு ஏற்படக்கூடிய தீங்கான விஷயங்களை தடுப்பதற்கான வழியாக கூட அமையும். ஆக மொத்தத்தில் இந்தப்பலன்கள் கூட உளவியல் சார்ந்த விஷயங்களே.

Updated On: 10 Feb 2023 6:09 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...