/* */

'மனச்சாட்சியுடன் வாழ்வதே உண்மையான ஆன்மீகம்'

கோவிலுக்கு செல்வது மட்டுமே உண்மையான ஆன்மீகம் அல்ல; உண்மையான உள்ளத்துடன், மற்றவர்களுக்கு கெடுதல் செய்யாமல், மனச்சாட்சிக்கு பயந்து வாழ்வதும் ஆன்மீகம்தான்.

HIGHLIGHTS

மனச்சாட்சியுடன் வாழ்வதே உண்மையான ஆன்மீகம்
X

‘தன்னைத்தானே சோதனை செய்து, தனக்குள் சென்று தன்னை அறிதலும், ஆன்மீகமே’ (கோப்பு படம்) 

ஆன்மீகம் என்பது, நெற்றியில் விபூதி பூசிக்கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோவிலுக்கு நன்கொடை தருவதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வதும் ஆன்மீகம்.


அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல், இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, 'எனக்கு உன்னைத் தவிர வேறு யாரையும் தெரியாது, உன்னைத் தவிர வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை, வாழ்க்கையை நீயே வழிநடத்தி செல்,' என, இறைவனிடம் சரணடைந்து விட்டு, நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை தான்.


வாரத்தில் இரண்டு முறை கோவிலுக்கு செல்வது, கிருத்திகை, சஷ்டி, அமாவாசை, ஏகாதசி போன்ற நாட்களில், தவறாமல் விரதம் இருப்பது, தினமும் காலை, மாலை இறைவனின் பாடல்களை பாடி பூஜிப்பது, மாதக்கணக்கில் மாலை அணிந்து விரதம் இருந்து, சுவாமியை தரிசிக்க செல்வது, தினமும் சரண கோஷங்கள் சொல்வது, பல மைல் தூரம் பாத யாத்திரை செல்வது என, இறைவனுக்காக பல விதங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாலும், வாழ்வில் நிம்மதி, அமைதி, சந்தோஷம் இருப்பதில்லை, வறுமை நீங்கவில்லை, நல்ல பிள்ளைகள் அமையவில்லை என பலரும் புலம்பித் தவிக்கின்றனர்.

நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.


இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான #பக்தி. இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.


மனிதர்களை பொருத்தவரை, கோவிலுக்கு செல்வதும், மாதக்கணக்கில் மாலை அணிந்து விரதம் இருப்பதும்தான் உண்மையில் ஆன்மீகம் என நினைக்கின்றனர். அது பக்தி ஆன்மீகம், வாழ்வில் ஆன்மீகம் என்பதுதான், வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் நான் பின்பற்ற வேண்டிய, ஆன்மீகமாக உள்ளது. கடவுள் என்பவர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று நாம் நம்புவது உண்மை என்றால், மனிதன் எப்போதுமே, நம்முடன் துணை வருகிறார், நம்மை, நமது எண்ணங்களை, செயல்பாடுகளை கண்காணித்து கொண்டிருக்கிறார் என்பது ஊர்ஜிதமாக தெரிகிறது. அதன்படி, பார்த்தால் நாம் எப்போதுமே உண்மையாக, மனச்சாட்சியுடன் வாழ்ந்தால் மட்டுமே, இறைவனின் அன்புக்கும், அருளுக்கும் பாத்திரமாக முடியும். எல்லா நிலைகளிலும், கடவுளின் ஆசீர்வாதத்தை பெற முடியும். அனைவரிடமும் அன்பு காட்டுகள். அதுவும் ஆன்மீகம்தான்.

Updated On: 6 Feb 2023 9:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி