/* */

தஞ்சை பெரிய கோவிலுக்குள் புதைந்து கிடக்கும் ரகசியங்கள்..! தெரிஞ்சுக்கங்க..!

Tanjore Temple History in Tamil-தஞ்சை பெரிய கோவிலின் வரலாறு மற்றும் சிறப்புகள் இங்கு விளக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

Tanjore Temple History in Tamil
X

Tanjore Temple History in Tamil

Tanjore Temple History in Tamil

பெறுவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பெரியகோவில் உலகின் பழமையான கோவில்களில் ஒன்றாகும். 1005ம் ஆண்டு ராஜராஜ சோழனால் தொடங்கப்பட்டது. 1010ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. தொழில்நுட்பம் வளராத அந்த காலகட்டத்தில் இப்படி ஒரு பிரமாண்ட கோவிலை காட்டியது உலக அதிசயமாக பர்க்கப்படுகிறது. இந்தக் கோவிலின் கட்டிடக் கலைஞர் குஞ்சலராதன் என்ற கட்டிடக் கலைஞர் ஆவார்.

தஞ்சை என்றாலே அனைவருக்கும் மனதில் இடம்பெறும் முதல் புகழ்பெற்ற ஸ்தலம் தஞ்சை பெரிய கோவிலாகவும். தஞ்சாவூர் கோவில் மிகவும் சிறப்புடைய வரலாற்றுப்புகழ்மிக்க கோவிலாகும். தமிழர்களின பெருமையாக கருதப்படும் இந்த கோவில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது . இது நம் தமிழ் கட்டிட கலையின் திறனுக்கு புகழ்சேர்ப்பதாக கருதப்படுகிறது. இவ்வாறு சிறப்புமிக்க தஞ்சை பெரியகோவிலின் வரலாறு குறித்து இங்கு காணலாம்.

பெறுவுடையார் கோவில்

இந்த பெறுவுடையார் கோவில் உலகின் மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலை ராஜராஜ சோழன் 1005 ஆண்டு ஆரம்பித்து 1010ம் ஆண்டு கட்டி முடித்தார். அந்த காலத்தில் இதனை இவ்வளவு சிறப்பாக கட்டியிருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்றாகும். இந்த கோயிலின் கட்டிட கலையை நிர்ணயித்தவர் குஞ்சலராதன் என்ற கட்டிகலைஆய்வாளர் ஆவார். இந்த கோவில் பிரகதீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்பட்டு பிறகு பெறுவுடயார் கோவில் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த பெரிய கோவிலில் பல ரகசிய அறைகள் இருப்பதாகவும் அந்த பல ரகசிய அறைகள் பல்வேறு மர்மங்களை கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டுவருகிறது. இவாறான கட்டிடத்தை தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின்போது கட்டினால் கூட பல ஆண்டுகள் ஆகும் என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

தஞ்சைக் கோவிலின் மேற்கூரை

தஞ்சை பெரிய கோவிலின் மேற்கூரை சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் மேற்கூரை 80 டன் கிரானைட் கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. இது ஒரே கல்லால் ஆனது. இவ்வளவு எடை கொண்ட கல்லை 216 அடி உள்ள கோபுரத்தின் மேலே எப்படி எடுத்து சென்றிருப்பார்கள் என்று அனைவருக்கும் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

இந்த பாறையை யானைகள் மற்றும் வீரர்களை் மட்டும் வைத்து தான் மேலே வைத்தனர் என்று ஒரு சில கருத்துகள் உண்டு . இந்த கல்லை வைக்க சாய்வு தளம் அமைத்து அதன் பின்னரை கல்லை மேலே எடுத்து சென்றனர் என்று மற்றொரு கூற்றும் உள்ளது. இந்த இரண்டில் எது உண்மையில் நிகழ்ந்திருக்கும் என்பது இன்றளவும் புரியாத புதிராகவே உள்ளது. ஆனாலும் சாய்வு தளம் அமைக்கப்பட்டதற்கான இடங்களையும் சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கோவில் கருவறை

இந்த கோயிலின் கருவறையில் உள்ள சிவலிங்கம் அதிக மின்காந்த அலைகளைக் கொண்டது இது நேர்மறை (+ve) ஆற்றலை கொண்டதாகவும் உள்ளது. இந்த ஆற்றல் கோவிலை விட்டு வெளியே செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பெரிய 80 டன் கல்லை மேலே வைத்துள்ளனர். இந்த நல்ல ஆற்றலால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மன அமைதியும் உடல் ஆரோக்கியமும் பெறுகிறது.

தஞ்சை ஓவியம்

அழகான மற்றும் சிறப்பம்சம் மிக்க ஓவியங்கள் தாஞ்சாவூரில் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியம் ராஜராஜ சோழனின் வரலாறு மற்றும் அவர்களின் மகத்துவத்தை பற்றி தெரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ராஜராஜ சோழனின் சிவ பக்தியை இந்த ஓவியங்கள் எடுத்துக் கூறுகின்றன. இந்திய ஓவிய வரலாற்றில் தஞ்சாவூர் ஓவியம் சிறந்த இடத்தை பெற்றுள்ளது. இந்த ஓவியங்கள் மிகவும் நேர்த்தியாகவும், வண்ணங்கள் இன்றளவும் மாறாமல் அப்படியே இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர் .

ராட்ஷத கிரானைட் கல்

உலகில் சிறந்த மற்றும் உறுதியான கற்களில் ஒன்று இந்த கிரானைட் கல். இந்தக் கல் அதிக எடை மற்றும் உறுதியானது என்பதால் சிலைகள் செய்ய கடினமாக இருக்குமாம். இந்த கோயிலை கட்ட 130000 அளவிலான கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இந்த பாறைகளை கோவிலிருந்து 80 கீ.மீ தூரத்திலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கற்களை கொண்டுவர 1000 யானைகளும் 5000 குதிரை வண்டிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கிரானைட் பாறைகளை வெட்ட பல தந்திரங்களை பயன்படுத்தியுள்ளார்கள். அந்த காலத்தில் நவீன போக்குவரத்து இல்லாமலே பல கிலோமீட்டர் தூரத்திலிருந்து கற்களை மலையிலிருந்து சமவெளிக்கு எடுத்து வந்துள்ளனர். இந்த கோவில் சமவெளியில் கட்டப்பட்டது. ஆனால் பாறைகள் மலையிலிருந்து எடுத்து வரப்பட்டதால் எவ்வாறு எடுத்து வந்திருபார்கள் என்பதும் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

கோவில் சிறப்பம்சம்

இந்த கோவிலை 1886 ஹீல்ஸ் என்ற ஜெர்மன் நாட்டு அறிஞர் ராஜராஜ சோழன்தான் கட்டினார் என்று ஆதார பூர்வமாக நிரூபித்தார். ராஜராஜ சோழனின் இயற்பெயர் அருண்மொழித் தேவர் ஆவார். இந்த கோவில் சோழர்களின் கலை நயத்தை கூறுகிறது.

இந்த கோவிலின் கட்டுமான பணிகளில் பல ஆயிர கணக்கில் ஆட்கள் வேலை செய்ததாகவும், இந்த குறிப்புகளிலும் மற்றும் கோவிலின் கல்வெட்டிலும் பொறித்திருப்பதாகவும் கூறுகிறார்கள். இந்த கோவிலின் மொத்த உயரம் 216 அடி. இது தமிழ் உயிர்மெய் எழுத்துகளை குறிக்கிறது. சிவலிங்கத்தின் உயரம் 12 அடி. இது உயிர் எழுத்துகளை குறிக்கிறது. சிவலிங்க பீடத்தின் அடி 18. இது மெய் எழுத்துகளை குறிக்கிறது. கோயிலுக்கும் நந்திக்கும் இடையே உள்ள மொத்த அடி 247 ஆகும். இது தமிழின் மொத்த எழுத்துகளை குறிக்கிறது. இந்த கோவிலின் பல கட்டிடக்கலையின் சிறப்புகள் கோவிலின் கல்வெட்டிலேயே பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலை யார் யார் கட்டினார்கள்? என்று பல உழைப்பாளிகளின் பெயர்களும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் நிழல் மதிய நேரங்களில் நிழல் கீழே விழுவதில்லை என்பதும் கட்டிடக்கலையின் சிறப்பைக்கூறும் ஒரு சிறப்பம்சமாகும். இது சோழர் காலத்து நேர்த்தியான கட்டிட கலையை எடுத்துரைக்கிறது.

நந்தி சிலை

இந்த கோவிலின் நந்தி ஒரே கல்லால் செதுக்கப்பட்ட மிகப்பெரிய நதியாகும். இந்த நந்தி வளர்ந்துகொண்டே இருப்பதாகவும் கூறுகிறார்கள். முதலில் இந்த நந்தி சிறியதாக இருந்ததால் இந்த நந்தி பிற்காலத்தில் மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் முடித்து வெளியேற அரச குடும்பத்துக்கு தனி ரகசிய வழி உள்ளது.இந்த வழி பல மர்மம் நிறைந்தது என்று காலப்போக்கில் மூடப்பட்டுவிட்டது. இந்த ரகசிய வழி பல இடங்களை இணைப்பதாகவும் கூறப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 March 2024 9:49 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?