/* */

திருப்பதியில் ஏழுமலையான் சுவாமி தரிசனம்; செப்., மாத ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விவரம் வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், செப்டம்பர் மாத விசேஷ பூஜைகள் சுவாமி தரிசனத்துக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருப்பதியில் ஏழுமலையான் சுவாமி தரிசனம்; செப்., மாத ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விவரம் வெளியீடு
X

திருப்பதி ஏழுமலையான் சுவாமியை தரிசனம் செய்ய ஆன்லைன் டிக்கெட் பதிவுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. (கோப்பு படம்)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறக்கூடிய சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, உள்ளிட்ட கட்டண சேவைகளுக்கான குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் பதிவுக்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்படுகிறது.

வருகிற 19-ம் தேதி காலை 10 மணி முதல் 21-ம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். 21-ம் தேதி காலை 12 மணிக்கு எலக்ட்ரானிக் குலுக்கல் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு செல்போன் அல்லது இமெயிலுக்கு தகவல் அனுப்பப்படும். அதனை வைத்துக் கொண்டு பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இதேபோன்று ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வருடாந்திர பவித்ர உற்சவம் ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகள் இந்த மாதம் 22-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் நடைபெறக்கூடிய கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைக்கான டிக்கெட்டுகள் இந்த மாதம் 22-ம் தேதி காலை 10 மணி முதல் தங்களுக்கு வேண்டிய சேவைகளை பக்தர்கள் முன்பதிவு செய்து டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

செப்டம்பர் மாதம் அங்க பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் இந்த மாதம் 23-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 70 ஆயிரத்து 896 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 37,546 பேர் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ.4.07 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.

Updated On: 16 Jun 2023 6:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  2. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  3. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  4. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  5. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  7. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  10. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?