இல்லற இன்பத்துக்கு சில்டெனாபில் சிட்ரேட் மாத்திரை..! எப்பப்போ பயன்படுத்தனும்..?

sildenafil citrate tablets uses in tamil-சில்டெனாபில் சிட்ரேட் 50 மிகி மாத்திரை (Sildenafil Citrate 50 MG Tablet) எதற்காக பயனாகிறது? ஏதாவது பக்கவிளைவுகள் உள்ளனவா..என்பதை பார்ப்போம் வாங்க..!

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இல்லற இன்பத்துக்கு சில்டெனாபில் சிட்ரேட் மாத்திரை..! எப்பப்போ பயன்படுத்தனும்..?
X

sildenafil citrate tablets uses in tamil-மகிழ்ச்சியான தம்பதி. (மாத்திரைக்கான மாதிரி படம் )

sildenafil citrate tablets uses in tamil-சில்டெனாபில் சிட்ரேட் 50 மிகி மாத்திரை (Sildenafil Citrate 50 MG Tablet)ல் சில்டெனாபில் உள்ளது. பொதுவாக இது நீல மாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இது உடலுறவில் ஆண்களின் விறைப்புத்தன்மை குறைபாடு (ED) சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஒரு பயனுள்ள மருந்து. உடலுறவுக்கு போதுமான விறைப்புத்தன்மையை அடைய சில உடல் ரீதியிலான மருத்துவ குறைபாடுகள் இருக்கலாம். சில மருத்துவ நிலை, இரத்த ஓட்டம் குறைவது, கவலை, மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற சில உளவியல் நிலைகள் காரணமாக இது நிகழும் வாய்ப்புகள் உள்ளன.

சில்டெனாபில் சிட்ரேட் 50 மிகி மாத்திரை இரத்த நாளங்களை தளர்த்தி ஆண்குறிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.

சில்டெனாபில் சிட்ரேட் 50 மிகி மாத்திரையின் சில பக்கவிளைவுகள் சிவத்தல் (சிவப்பு மற்றும் வெப்ப உணர்வு), தலைவலி, வயிற்று வலி, தலைசுற்றல், மங்கலான பார்வை போன்றவை ஏற்படலாம். பொதுவாக, இந்தப் பக்க விளைவுகள் தானாகவே மறையும் தன்மையுடையன. ஒருவேளை இந்த பக்க விளைவுகள் மோசமடைந்தாலோ அல்லது நீண்ட நேரத்திற்கு நீடித்தாலோ மருத்துவரை அணுகவும்.

மருத்துவர் பரிந்துரை

மருத்துவர் பரிந்துரைத்தபடி சில்டெனாபில் சிட்ரேட் 50 மிகி மாத்திரையை உணவுடனோ அல்லது இல்லாமலோ எடுத்துக்கொள்ளலாம். உடலுறவுக்கு 30-60 நிமிடங்களுக்கு முன்பு மாத்திரையை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், உடலுறவுக்கு 4 மணி நேரத்திற்கு முன்பும் இதை எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் பாலுறவு தூண்டப்பட்டால் மட்டுமே இந்த மருந்து விறைப்புத்தன்மையைப் பெற/ பராமரிக்க உதவும். உடலுறவு நீண்டநேரம் இருக்கவேண்டும் என்பதற்காக கூடுதல் மாத்திரைகளை எடுக்க வேண்டாம். சில்டெனாபில் சிட்ரேட் 50 மிகி மாத்திரை ஆண்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

கட்டுப்பாடுகள்

இதயம் மற்றும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு சில்டெனாபில் சிட்ரேட் 50 மிகி மாத்திரை பரிந்துரைக்கப்படுவதில்லை. உங்களுக்கு பக்கவாதம் அல்லது மார்பு வலி சமீபகாலமாக இருந்தால் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். சிகிச்சையின் போது மது அருந்துவதைத் தவிர்க்கவும் அல்லது கட்டுப்படுத்தவும். இந்த சில்டெனாபில் சிட்ரேட் 50 மிகி மாத்திரை பயன்படுத்திவிட்டு வாகனம் ஓட்டவோ அல்லது இயந்திரங்களை இயக்கவோ கூடாது.

பக்க விளைவுகள்

சில்டெனாபில் சிட்ரேட் 50 மிகி மாத்திரைக்கான பொதுவான பக்க விளைவுகள் : (சிறிய அல்லது பெரிய அழிவில் ஏற்படலாம்)

 • தலைவலி
 • மூக்கில் இரத்தம் வடிதல்
 • அஜீரணம்
 • தூங்குவதில் சிக்கல்
 • வயிற்றுப்போக்கு
 • தலைசுற்றல்
 • இரத்தம் மற்றும் மங்கலான சிறுநீர்
 • கை, கால்களில் எரிச்சல், உணர்வின்மை, கூச்ச உணர்வு
 • எதையும் பார்க்க முடியாமை
 • ஒளியை பார்க்க முடியாமை
 • நீடித்த மற்றும் வலிமிகுந்த விறைப்புத்தன்மை
 • வலிமிகுந்த சிறுநீர் கழித்தல்
 • கண்ணீர் வழிதல்
 • காதுகளில் இரைச்சல் அல்லது சத்தம்
 • காது கேளாமை (அரிதாக)
 • மூக்கடைப்பு
 • குமட்டல்

sildenafil citrate tablets uses in tamil-குறிப்பாக முகம் மற்றும் கழுத்தில் தோல் சிவத்தல் போன்றவைகள் ஏற்படலாம். இது எல்லோருக்கும் ஏற்படாது. சில பக்கவிளைவுகள் அரிதானவை.

சில்டெனாபில் சிட்ரேட் 50 மிகி மாத்திரை மருந்தின் பயன்பாடுகள்

இது எதற்காக பரிந்துரைக்கப்படுகிறது?

விறைப்பு குறைபாடு

உடலுறவில் விறைப்புத்தன்மை இல்லாமை என்பது உடலுறவுக்கான போதுமான விறைப்புத்தன்மையை அடைய முடியாத ஒரு நிலை. ஆண்குறிக்கு இரத்த ஓட்டம் குறைவதால் இது நிகழ்கிறது. இது காயம் போன்ற உடல்ரீதியான பிரச்சனைகளால் இருக்கலாம். தீங்கற்ற புரோஸ்டேடிக் ஹைபர்டிராபி (புரோஸ்டேட் சுரப்பி விரிவாக்கம்), நீரிழிவு நோய், நரம்பியல் (நரம்பு வலி), புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற நோய்கள்; மற்றும் கவலை, மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற உளவியல் காரணங்களும் புகைபிடித்தல், குடிப்பழக்கம் போன்ற பழக்கங்களும் இந்த நிலை ஏற்பட காரணமாக இருக்கலாம்.

மருத்துவரின் ஆலோசனை

sildenafil citrate tablets uses in tamil-சில்டெனாபில் சிட்ரேட் 50 மிகி மாத்திரை (Sildenafil Citrate 50 MG Tablet) ஆண்குறிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் விறைப்புத்தன்மையைத் தக்கவைக்க உதவுகிறது. இந்த குறைப்பாட்டிற்கான அடிப்படைக் காரணம் கண்டறிந்து சிகிச்சையளிப்பது முக்கியம். எனினும் உடலுறவுக்கு மருத்துவ ஆலோசனையுடன் இந்த மாத்திரை பயன்படுத்தப்படுகிறது.

Updated On: 13 Aug 2022 10:00 AM GMT

Related News