/* */

மதம், மொழி, இனம் கடந்து அற்புதம் செய்யும் சீரடி சாய்பாபா பொன்மொழிகள்

Sai Baba Quotes in Tamil-சீரடி எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்கள் கூட சாய்பாபாவின் அருள் அலைகளால் ஈர்க்கப்பட்டு சீரடி சென்று வருவது நடந்து கொண்டிருக்கிறது

HIGHLIGHTS

Sai Baba Quotes in Tamil
X

Sai Baba Quotes in Tamil

Sai Baba Quotes in Tamil

சாய் பாபா 1838 ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி பிறந்தார். இவரை இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களும் புனித கடவுளாக வணங்குகின்றனர். சீரடியில் இவர் சமாதி ஆன இடம் புண்ணிய தலமாக எல்லோராலும் கொண்டாட படுகின்றனர்.பல்வேறு அற்புதங்களை சாய் பாபா நிகழ்த்தி உள்ளார். மதம், மொழி, இனம் போன்ற அடையாளங்களை கடந்து வலியவர்களுக்கு அற்புதம் செய்யும் தெய்வமாக போற்றப்படுகிறார் சீரடி சாய்பாபா.

சிட்டுக்குருவியின் காலில் கயிற்றை கட்டி இழுப்பது போல பக்தர்களை என் பக்கம் இழுப்பேன்' என்று சீரடி சாய்பாபா அடிக்கடி சொல்வதுண்டு. அதை உறுதிபடுத்துவது போல சீரடி எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்கள் கூட சாய்பாபாவின் அருள் அலைகளால் ஈர்க்கப்பட்டு சீரடி சென்று வருவது நடந்து கொண்டிருக்கிறது

இந்த பதிவில் நாம் சாய்பாபாவின் பொன்மொழிகள் சிலவற்றை பார்க்கப்போகிறோம்.

ஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஓடுங்கள் வாழ்க்கை வாழ்வதற்கே,

நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்லுங்கள்

உனக்கென படைக்கப்பட்ட அனைத்தும் நிச்சயமாக உன்னை வந்தடையும்…

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.

ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தகூடாது.

நம் வார்த்தையால் ஒருவர் மனம் நிம்மதி அடைகிறது என்றால் அதுவும் தர்மம் தான்..!!!

என் வார்த்தைகளில் நம்பிக்கை வை எதை நீ தேடினாயோ அது உன்னைத் தேடி வரும்

நீ செல்லும் இடமெல்லாம் சாய் துணையாக இருக்கிறேன் நல்லதே நடக்கும்.

அறிவாளியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை விட

யாரையும் அறியாமல் காயப்படுத்தி விடக் கூடாது என்ற நோக்கமே சிறந்தது.

சங்கடங்களை நினைத்து சந்தோஷத்தை தொலைக்காதே

அனுதினமும் வணங்கும் கடவுள் நான் இருக்கிறேன்.

அனைத்திலும் இருந்து நான் உன்னை காப்பேன்…

உன் நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும் உன்னை

ஒருபோதும் கைவிடாது உன்னுடன் இருந்து வாழ வைக்கும்.

மனிதர்கள் உன்னை தனித்து விடும் போது உடைந்த போகாதே…

நீ நினைக்காதே இடத்திலிருந்து நான் உனக்கு உதவிகளை கொண்டு வருவேன்..

நீ விரும்பிய வாழ்வை வாழ போகிறாய்

உன்னோடு நான் இருப்பதாய்

உணர்ந்து கொள்ளும் நேரம் வரும்.

எந்த சூழ்நிலையிலும் நான் கை விட மாட்டேன்

நான் உன்னுடன் இருக்கிறேன்.

வெறுப்பது யாராக இருந்தாலும்

நேசிப்பது நீங்களாக இருங்கள்.

நீ நிச்சயம் முன்னேறுவாய்

உன் எதிர்காலத்தை

பற்றிய கவலை இருந்தால்

அதை தூக்கி எறிந்து விடு

உன் சாய் அப்பா இருக்கிறேன்.

கவலைப்படாதே

உன்னுள் உன்னுடனே இருக்கிறேன்

எவ்வளவு கஷ்டங்களை இப்போது

நீ அனுபவித்தாலும் அந்த அளவுக்கு

எதிர்காலம் மகிழ்ச்சியாக அமையும்.

ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ

அவனுடைய துன்பம் ஒரு முடிவை

அடைவதுடன் சௌகர்யத்தையும் அடைகிறான்.

உங்கள் எல்லா வலிகளும்

நான் தூக்கி எறிவேன்

விசுவாசமும் பொறுமையும் வேண்டும்

உங்கள் நாள் வருகிறது

நான் இருக்கும் வரை நீ கலங்காதே

நான் உன்னை கை விட மாட்டேன்.

எனது ஆசிர்வாதத்தினால்

நீ அனைவராலும் மதிக்கப்படுவாய்.

எதற்குமே கலங்காதே

நீ வேண்டிய அனைத்தும்

கண்டிப்பாக நிறைவேறும்

நான் நிறைவேற்றுவேன்.

அதை நினைவில் வையுங்கள்! மற்றவர்களை ஒருபோதும் துன்புறுத்தாதீர்கள், அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுங்கள், அவர்களின் மகிழ்ச்சியைப் பறிக்காதீர்கள். யாரையும் கண்டிக்காதீர்கள், யாரையும் வெறுக்காதீர்கள். ஏனென்றால் அன்பு மக்களை நெருக்கமாக்குகிறது மற்றும் வெறுப்பு அவர்களை அழைத்துச் செல்கிறது.

மற்றவர்களை ஏமாற்றுபவர்கள் தன்னை ஏமாற்றத் தயாராகி விட்டார்கள் என்பது தெரியாது. அது எஜமானரின் நீதி.

அவன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான், அதனால் நற்செயல்களைச் செய், கடவுளைக் கவனியுங்கள், மாயையின் வலையில் சிக்காதீர்கள். பாதையில் நடந்து கொண்டே இருங்கள்…உங்கள் நலன் இருக்கும்.

மரணமும் வாழ்வும் கடவுளின் செயல்பாட்டின் வெளிப்பாடுகள். இரண்டையும் பிரிக்க முடியாது. கடவுள் எல்லாவற்றிலும் ஊடுருவுகிறார்.

நமது கர்மமே நமது இன்பத்திற்கும் துக்கத்திற்கும் காரணம்; அதனால் உனக்கு என்ன வந்தாலும் பொறுத்துக்கொள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 March 2024 4:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  2. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  3. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  8. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  9. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  10. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...