/* */

ஆன்மீக குரு ஷீரடி சாய்பாபாவின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் மேற்கோள்கள்..!

Saibaba Quotes in Tamil-சாதி,மாதங்களுக்கு அப்பாற்பட்டவராக சாய்பாபா விளங்கினார். எண்ணற்ற இஸ்லாமியர்கள் சாய்பாபாவை குருவாக ஏற்று வழிபட்டார்கள்.

HIGHLIGHTS

Saibaba Quotes in Tamil
X

Saibaba Quotes in Tamil

Saibaba Quotes in Tamil

ஷீரடி சாய்பாபா ஆன்மீக வாரிசுகளை விட்டுச் செல்லவில்லை, சீடர்களை நியமிக்கவில்லை, கோரிக்கைகள் இருந்தபோதிலும் முறையான தீட்சையை (திக்ஷா) வழங்கவில்லை. மஹால்சாபதி, மாதவ் ராவ் (ஷாமா), நானாசாஹேப் பேஷ்வே, பாய்ஜாபாய், தாத்யா கோட் பாட்டீல், காகாசாஹேப் தீட்சித், ராதாகிருஷ்ண மாய், ஹேமத்பந்த், பூட்டி, தாஸ் கணு, லக்ஷ்மி பாய், நானாவலி, அப்துல் பாபா, சபத்னேகர், நானாசாஹேப் சந்தனேகர், நானாசாஹேப் ஆகியோர் சாய்பாபாவின் குறிப்பிடத்தக்க சீடர்களில் சிலர். பி.வி. நரஷிமா சுவாமிஜி.சகோரியின் உபாசனி மகாராஜ் போன்ற சில சீடர்கள் நன்கு அறியப்பட்ட ஆன்மீக பிரமுகர்களாக ஆனார்கள். சாய்பாபாவின் மரணத்திற்குப் பிறகு, உபாசினி மஹாராஜ் 10 ஆண்டுகளுக்குள் இரண்டு முறை ஷீரடிக்கு விஜயம் செய்தபோது அவரது பக்தர்கள் தினசரி ஆராதனை செய்தனர்.

சாய் பாபா, மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் அஹ்மத்நகர் மாவட்டத்தில் பிறந்தார் செப்டம்பர் மதம் 28-ம் தேதி 1838ம் ஆண்டு பிறந்தார். இவரை இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களும் புனிதக் கடவுளாக வணங்குகின்றனர். சீரடியில் இவர் சமாதி ஆன இடம் புண்ணிய தலமாக எல்லோராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அற்புதங்களை சாய் பாபா நிகழ்த்தி உள்ளார். இந்து முஸ்லீம் இடையே சிநேகத்தை வளர்த்து உள்ளார்.

சாய்பாபா மதம் அல்லது ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டைக் கண்டித்தார். அவர் ஒரு முஸ்லிமா அல்லது இந்துவா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அந்த மத வித்தியாசம் அவரிடம் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. அவரது போதனைகள் இந்து மதம் மற்றும் இஸ்லாத்தின் கூறுகளை இணைத்தன. அவர் வாழ்ந்த மசூதிக்கு துவாரகாமாயி என்ற இந்து பெயரை சூட்டினார். இந்து மற்றும் முஸ்லீம் சடங்குகளை நடைமுறைப்படுத்தினார். மேலும் இரு மரபுகளிலிருந்தும் உருவான சொற்கள் மற்றும் உருவங்களைப் பயன்படுத்தி கற்பித்தார். அவரது மேற்கோள்களை வாசிருங்கள். ஞானம் பெறுங்கள்.

  • ஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஓடுங்கள் வாழ்க்கை வாழ்வதற்கே,

நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்லுங்கள்.

உனக்கென படைக்கப்பட்ட அனைத்தும் நிச்சயமாக உன்னை வந்தடையும்…

  • உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.

ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தகூடாது..

  • நம் வார்த்தையால் ஒருவர் மனம் நிம்மதி அடைகிறது என்றால் அதுவும் தர்மம் தான்..
  • என் வார்த்தைகளில் நம்பிக்கை வை எதை நீ தேடினாயோ அது உன்னைத் தேடி வரும்…
  • நீ செல்லும் இடமெல்லாம் சாய் துணையாக இருக்கிறேன் நல்லதே நடக்கும்.
  • அறிவாளியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை விட
  • யாரையும் அறியாமல் காயப்படுத்தி விடக் கூடாது என்ற நோக்கமே சிறந்தது.
  • சங்கடங்களை நினைத்து சந்தோஷத்தை தொலைக்காதே
  • அனுதினமும் வணங்கும் கடவுள் நான் இருக்கிறேன்.

அனைத்திலும் இருந்து நான் உன்னை காப்பேன்…

  • உன் நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும் உன்னை

ஒருபோதும் கைவிடாது உன்னுடன் இருந்து வாழ வைக்கும்.

  • மனிதர்கள் உன்னை தனித்து விடும் போது உடைந்த போகாதே…

நீ நினைக்காதே இடத்திலிருந்து நான் உனக்கு உதவிகளை கொண்டு வருவேன்..

  • வாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும்,

அதை பலமாக பயன்படுத்திக் கொள்வது நமது பொறுப்பாகும்…

  • பிறர் துன்பம் கண்டு மகிழ்வது பெரும்பாவம்..

பிறர் இன்பம் கண்டு மகிழ்வது பெரும்புண்ணியம்..!

  • இறைவன் சிலவற்றை காலம் கடந்து கொடுத்தாலும் காலத்தால்

அழிக்க முடியாததாக கொடுப்பார்…சோர்ந்து போகதீர்கள்…

  • உனது வெற்றியை தேடுவதை விட மகிழ்ச்சியை

வாழ்வில் தேடிப்பார் வெற்றி உன்னை தேடி வரும்..

  • நான் உன்னைப் பாதுகாப்பேன்.

உன் மீது அன்பாக இருக்கிறேன்.

என் அனுமதி இல்லாமல் எதுவும் நடக்காது.

உன்னை எந்த தீங்கும் செய்யவிடமாட்டேன்.

  • நீ இழந்ததை நினைத்து வருந்தினால்

இருப்பதையும் இழந்து விடுவாய்,

இருப்பதை நினைத்து மகிழ்ந்தாள்

இழந்ததையும் அடைந்து விடுவாய்.

  • நான் இருக்கும் வரை நீ கலங்காதே

நான் உன்னை கை விட மாட்டேன்.

எனது ஆசிர்வாதத்தினால்

நீ அனைவராலும் மதிக்கபடுவாய்.

  • உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம் ஆனால்

உன் சிரிப்பு ஒருவரை கூட வேதனை படுத்த கூடாது.

  • எதற்குமே கலங்காதே

நீ வேண்டிய அனைத்தும்

கண்டிப்பாக நிறைவேறும்

நான் நிறைவேற்றுவேன்.

  • நீ விரும்பிய வாழ்வை வாழ போகிறாய்

உன்னோடு நான் இருப்பதாய்

உணர்ந்து கொள்ளும் நேரம் வரும்.

  • எந்த சூழ்நிலையிலும் நான் கை விட மாட்டேன்

நான் உன்னுடன் இருக்கிறேன்.

  • வெறுப்பது யாராக இருந்தாலும்

நேசிப்பது நீங்கலாக இருங்கள்.

  • நீ நிச்சயம் முன்னேறுவாய்

உன் எதிர்காலத்தை

பற்றிய கவலை இருந்தால்

அதை தூக்கி எரிந்து விடு

உன் சாய் அப்பா இருக்கிறேன்.

  • கவலைப் படாதே

உன்னுள் உன்னுடனே இருக்கிறேன்

எவ்வளவு கஷ்டங்களை இப்போது

நீ அனுபவித்தாலும் அந்த அளவுக்கு

எதிர்காலம் மகிழ்ச்சியாக அமையும்.

  • ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ

அவனுடைய துன்பம் ஒரு முடிவை

அடைவதுடன் சௌவ்கர்யத்தையும் அடைகிறான்.

  • உங்கள் எல்லா வலிகளையும்

நான் தூக்கி எறிவேன்

விசுவாசமும் பொறுமையும் வேண்டும்

உங்களுக்கான நாள் வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 11 March 2024 4:51 AM GMT

Related News