/* */

Rasi kattam-நீங்கள் யார் என்பதை தீர்மானிக்கும் ராசி கட்டம்..!

ஒருவரின் குணாதிசயம் மற்றும் இயல்புகளை பிறப்பு ஜாதகத்தின் மூலமாக கணித்துவிடமுடியும். அதுவே நீங்கள் யார் என்பது வரையறை செய்யும்.

HIGHLIGHTS

Rasi kattam-நீங்கள் யார் என்பதை தீர்மானிக்கும் ராசி கட்டம்..!
X

Rasi kattam-ராசி கட்டம் (கோப்பு படம்)

Rasi kattam

வேதங்களின் ஆறு அங்கங்களில் ஒன்றாக விளங்குவது ஜோதிடம். எனவே ஜோதிடம். வேத ஜோதிடம் என்றும் அழைக்கப்படுகிறது. பாரம்பரியம் மிக்க இந்த ஜோதிடம் இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப பல்வேறு பரிணாமங்களில் வளர்ந்துள்ளது. ஜோதிடம் பொதுவாக வேத ஜோதிடம் என்றும், மேலை நாடுகளில், மேல் நாட்டு ஜோதிடம் என்றும், தமிழ் நாட்டில் தமிழ் ஜோதிடம் (Tamil Astrology) என்றும் அழைக்கப்படுகிறது.


இந்திய ஜோதிடம் பொதுவாக இந்து சோதிடம் என்றும், வேத சோதிடம் என்றும் மற்றும் தமிழ் நாட்டில் தமிழ் ஜோதிடம் என்ற பெயரில் அறியப்படுகிறது. ஜோதிடத்தில் பொதுவாக சூரியனை வைத்துப் பலன் சொல்லும் முறையும், சந்திரனை வைத்துப் பலன் சொல்லும் முறையும் உள்ளது. மேல் நாட்டு முறையில் சூரியனை வைத்து பலன் சொல்லுவார்கள்.

தமிழ் ஜோதிடத்தில் சந்திரனின் நிலையை முதன்மையாக வைத்து ஜாதகம் கணிப்பார்கள். குழந்தை பிறக்கும் நேரத்தினைக் கொண்டு அந்த நேரத்தில் நவகிரகங்களின் நிலையை கணக்கிட்டு எழுதுவது ஜாதகம் எனப்படுகிறது. குழந்தை பிறந்த ஊரின் பொதுப் பலனாக பன்னிரண்டு ராசிக்கரர்களுக்கும் கணிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Rasi kattam

ராசிக் கட்டம்

குறிப்பாக இதற்கு ராசிக்கட்டம் உருவாக்கப்படுகிறது. இந்த ராசிக்கட்டமே வாழ்க்கையின் முழு பகுதியையும் கணித்து எழுத வழிவகை செய்கிறது. வான் மண்டலத்தின் நீள்வட்டப்பாதையின் 360 டிகிரி 12 ஆக பிரிக்கப்படுகிறது. அவ்வாறு 12 ஆக பிரிக்கப்படும் இதை வட்டங்களாக அமைப்பதை விட கட்டங்களாக அமைத்துக்கொண்டால் எளிதில் புரியும் என்பதால் 12 கட்டங்களாக வடிமைக்கப்படுகின்றன.

இதனையே நாம் ராசிக் கட்டம் என்று கூறுகிறோம். இந்த பன்னிரண்டு கட்டங்களும் விலங்கு மற்றும் பிற உருவ அமைப்பில் சித்தரிக்கப்படுகின்றன. இந்த பன்னிரண்டு கட்டங்களும் நிலையாக இருக்கின்றன. இந்தக் கட்டங்களில் கிரகங்கள் மட்டும் சுற்றி வருகின்றன.


அவை சுற்றி வரும் வேகத்திற்கேற்ப, மாத கிரகங்கள், வருட கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வீடுகள் ஒன்று முதல் பன்னிரண்டு எண்களில் குறிப்பிடப்படுகின்றன. முதலாம் வீடு லக்னம் என்று அழைக்கப்படுகின்றது. கடிகாரச் சுற்று முறையில் இந்த எண்கள் ஏறுவரிசையில் வரிசைப்படுத்தப்படுகின்றன. ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் கோள்கள் அல்லது கிரகங்கள் இருக்கும் தீர்க்காம்சத்தைக் கணக்கிட்டு அதற்கேற்ப அவற்றிற்குரிய கட்டங்களில் நிரப்பப்படுகின்றன.

Rasi kattam

பிறப்பு ஜாதகம் மூலம் ஒருவர் பிறந்த நேரத்தில், ஜோதிடத்தில் கூறப்படும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களின் நிலைகளை அறிய முடியும். ஜாதகம் என எல்லோராலும் கூறப்படும் இது, ஒருவர் பிறந்த இடம் மற்றும் நேரத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிரகங்களின் நிலைகளைக் குறிக்கின்றது.

உங்கள் ஜாதகம் என்பது நீங்கள் பிறந்த நேரத்தில் கிரகங்களின் அமைப்பைக் குறிப்பதாகும். அந்த அமைப்பிற்கேற்ப நிகழ்பவைகளை வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.

ஒரு ஜாதகத்தை எப்படிப் பார்ப்பது ?

ஒருவரின் ஜாதகத்தினை சரியாக ஆராய்ந்து கணிப்பதன் மூலம் அவரைப் பற்றிய பெரும்பாலான விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். ஒரு ஜாதகத்தை ஆராய்ந்து கணிப்பது என்பது விரிவான செயல் முறை ஆகும். இங்கு நாம் ஓரு ஜாதகத்தை எவ்வாறு வரிசைக் கிரமப்படுத்தி படிப்பது அல்லது பார்ப்பது என்பதை சற்று சுருக்கமாகக் காண்போம்.

உங்கள் ஜாதகத்தில் “ல” அல்லது “லக்” என்று எழுதப்பட்டிருக்கும் வீடு தான் முதல் வீடு அல்லது லக்னம் என்று அழைக்கபடும். இங்கிருந்து தான் கடிகாரச் சுற்றில் ஏறு வரிசையில் வீடுகளை எண்ண வேண்டும்.

Rasi kattam


ராசிகள் இருப்பு

மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு வீடுகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ராசியின் சின்னம் இருக்கும். இந்த சின்னம் மற்றும் வீடுகளின் பெயர்கள் மாறாத , நிலையான ஒன்றாகும்.

கடிகாரச்சுற்று முறையில் எண்ணி, தீர்காம்சத்திற்கேற்ப சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களுள் எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த வீட்டில் உள்ளன என்று அறிந்து அமைக்க வேண்டும். இறுதியாக ஒன்பது கிரகங்களும் எந்தெந்த வீட்டில் உள்ளன என்பதை அறிய வேண்டும்.

இவை ஒரு ஜாதகத்தின் அடிப்படை விஷயங்கள் ஆகும். இவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்து உங்கள் ஜோதிட அனுபவ அறிவை பயன்படுத்தி நுணுக்கங்களை ஆராய்ந்து வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்குரிய பலன்களை கணித்து ஒருவரின் ஜாதகமாக வரையறுக்கவேண்டும்.

உங்கள் சொந்த ஜாதகத்தை வைத்து முதலில் கற்றுக் கொள்ள முயலுங்கள். பின்னர் உங்கள் உறவினர்கள் நண்பர்கள் என உங்கள் ஜாதக அனுபவத்தை விரிவு படுத்திக்கொள்ளுங்கள். இதன் மூலமாக உங்களின் வாழ்க்கை மற்றும் இந்த உலகத்துடனான உங்கள் தொடர்பை நீங்கள் அறிய முடியும். உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ளாத சில விஷயங்களை நீங்கள் உங்கள் ஜாதகத்தின் மூலம் அறியலாம்.

Updated On: 31 Aug 2023 5:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு