/* */

காசியில் சிறப்பாக பணியாற்றி வரும் தமிழ் கலெக்டர் ராஜலிங்கம்

காசியில் தமிழ் கலெக்டர் ராஜலிங்கம் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

HIGHLIGHTS

காசியில் சிறப்பாக பணியாற்றி வரும் தமிழ் கலெக்டர் ராஜலிங்கம்
X
ராஜலிங்கம் ஐ.ஏ.எஸ்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கலெக்டர் ராஜலிங்கம் காசியில் கலக்கி வருகிறார்.

காசியில் தமிழ் சங்கமம். இந்த வார்த்தைகள் இப்போது காசி முதல் ராமேஸ்வரம் வரை அதிகமாக ஒலிக்க தொடங்கி இருக்கிறது. இதற்கு காரணம் ராமேஸ்வரத்தில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீக பக்தர்கள் பலர் வட மாநிலமான உத்தர பிரதேசத்தின் காசியில் நடைபெறும் காசி சங்கமம் தமிழ் விழாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டது ஒரு முக்கிய காரணம்.

காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பு மிகப் பழமையானது மட்டுமல்ல பாரம்பரியமானதும் கூட. காசியினுடைய புனித பெயரை தமிழ்நாட்டில் பலர் தங்களது பெயராக சூட்டியிருக்கிறார்கள். தென்காசி என்ற ஊருக்கும் காசிக்கும் நீண்ட தொடர்பு இருந்திருக்கிறது.மன்னர்கள் காலத்தில் வட இந்தியர்கள் எப்படி ராமேஸ்வரத்திற்கு வந்து புனித கடன்களை செலுத்துகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டு ஆன்மீகவாதிகள் காசிக்குச் சென்று தங்களது ஆன்மிக கடமையை நிறைவேற்றி இருக்கிறார்கள். காசியில் இன்னமும் தமிழ் குடும்பங்கள் ஏராளமானவர்கள் 10 தலைமுறைக்கும் அதிகமாக இருக்கிறார்கள் என்றால் காசிக்கும் தமிழகத்திற்கும் உள்ள உறவு எவ்வளவு ஆழமானது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அந்த வகையில் தான் தேசிய கவி எனப் போற்றப்பட்ட மகாகவி பாரதியாரும் 1898 ஆம் ஆண்டு முதல் 1902 ஆம் ஆண்டு வரை காசியில் அவருடைய அத்தை வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அப்போது அவர் இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை நன்கு கற்றதோடு போஜ்பூரி, அவதி, வங்காளி ஆகிய மொழிகளையும் தெரிந்து கொண்டிருக்கிறார். பாரதியார் காசியில் வாழ்ந்த காலத்தில் தான் 'வெள்ளைத் தாமரை பூவலிருப்பாள்' 'அர்த்தப்பிரகாசம்' 'பாருக்குள்ளே நல்ல நாடு' முதலிய கவிதைகளை இயற்றி இருக்கிறார்.

இத்தகைய சிறப்புக்குரிய காசியில் தற்போது மாவட்ட ஆட்சியராக இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ராஜலிங்கம் என்பவர் ஆவார். இவர் நமது தமிழ்நாட்டின் கடையநல்லூரைச் சேர்ந்தவர் ஆவார். தமிழகத்தைச் சேர்ந்த இவர் அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம் உத்தர் பிரதேச மாநில கேர்டர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

காசியில் தற்போது நடைபெற்று வரும் தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தவர்களில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி காசியில் தற்போது கலக்கி வரும் கலெக்டர் ராஜலிங்கம் கூறும் போது 'பாரதியார் காசியில் உள்ள சிவமடத்தில் நான்காண்டு காலங்கள் வாழ்ந்துள்ளார். அவர் இங்கு வசித்த போது அவருக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதாக நான் கருதுகிறேன். அந்த வீட்டில் தற்போது அவரின் வழிவந்தவர்கள் வசித்து வருகின்றனர். நாங்கள் அவர்களின் அனுமதியோடு இந்த வீட்டில் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அவரது இலக்கிய படைப்புகள், சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்களிப்பு, அவரது கவிதைகளை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அனைத்தும் டிஜிட்டல் வடிவமாக மாற்றப்பட்டு வருகிறது.

இந்த வீட்டின் ஒரு அறையில் பாரதியாரின் மார்பளவு வெண்கல சிலையுடன் கூடிய நூலகம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் காலம் காலமாக நிறைய தொடர்புகள் இருந்துள்ளன. தமிழ்நாட்டில் இருப்பவர்கள் காசிக்கு ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.பிரதமரின் ஒரேபாரதம் உன்னத பாரதம் கோட்பாட்டின் கீழ் நாட்டின் ஒரு பகுதி மக்களின் கலாச்சாரத்தை இன்னொரு பகுதி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கலாச்சாரத்தோடு இன்னொரு கலாசாரம் இணைய வேண்டும். பழமையான கலாச்சாரங்களை இதன் மூலம் செளிமைப்படுத்த முடியும் என்ற சிந்தனையில் உருவாகி இருப்பது தான் காசி தமிழ் சங்கமம் ஆகும். தமிழ்நாட்டின் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 3000 பேர் 12 குழுக்களாக பிரிந்து காசிக்கு வருகிறார்கள். 4 நாட்கள் ரயில் பயணம், 4 நாட்கள் பல்வேறு பகுதிகளுக்கு செல்லுதல், நிகழ்வுகளில் பங்கேற்புகள் என 8 நாள் பயணமாக இந்த குழுவினர் காசிக்கு வருகிறார்கள்.

அவர்கள் காசியின் கலாச்சாரம், உணவு வகைகள் பற்றி தெரிந்து கொள்கிறார்கள். டிசம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டின் மிக மிக முக்கிய பிரமுகர்கள் தலைமை தாங்கி நடத்துகிறார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கும் இந்தியா என்ற உணர்வுடன் இணைவதற்குமான முன் நிகழ்வு தான் காசி தமிழ் சங்கமம். காசியில் பிரயாக்ராஜ், அயோத்தியா உள்ள இடங்களை பார்வையிட்ட பின் இந்த குழுவினர் தமிழ்நாடு திரும்புகிறார்கள்' என்றார்

காசி சங்கமம் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த கலெக்டர் ராஜலிங்கம் அங்கு கலக்கி வருவது உலகெங்கும் தெரிந்து உள்ளது

Updated On: 28 Nov 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  5. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  6. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  7. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  8. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  9. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  10. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!