திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா; வரும் 26ல் துவக்கம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், பங்குனி பெருவிழா வருகிற 26-ம் தேதி தொடங்கி அடுத்த (ஏப்ரல்) மாதம் 10-ம் தேதி வரை 15 நாட்கள் நடக்கிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா; வரும் 26ல் துவக்கம்
X

திருப்பரங்குன்றம் முருகன் கோவில். (கோப்பு படம்)

திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளுள் ஒன்று. இது மதுரைக்கு தென்மேற்கில் எட்டு கி.மீ தொலைவில் உள்ளது. இது முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட இடமாகும். இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.இங்குள்ள சரவண பொய்கை புனித தீர்த்தமாக போற்றப்படுகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம். அறுபடை வீட்டு முருகப் பெருமான் கோவில்களில் இக்கோவில் அளவில் பெரியதாகும்.

திருப்பரங்குன்றம் லிங்க வடிவமாகக் காட்சியளிக்கும் அருட் செறிந்த மலை. இந்தத் திருப்பரங்குன்றத்தில் தங்கி சிவசக்தியை நோக்கி ஆறுமுகப் பெருமான் தவமிருந்தார். இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.

திருவிழா முதல் நாளான 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. 27-ம் தேதி விநாயகர் திருநாளாக போற்றப்படுகிறது. அன்று இரவு 7 மணியளவில் விநாயகர் சப்பரம் வலம் வருதல் நடக்கிறது திருவிழாவையொட்டி தினமும் காலை 10 மணியளவில் தங்கப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் வீதிகளில் வலம் வருதல் நடக்கிறது.

28-ம் தேதி இரவு 7 மணிக்கு தங்ககுதிரை வாகனத்திலும், 29-ம் தேதி வெள்ளி பூத வாகனத்திலும், 30-ம் தேதி அன்ன வாகனத்திலும், 31-ம் தேதி சேஷ வாகனத்திலும், ஏப்ரல் 1-ம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 2-ம் தேதி தங்க மயில் வாகனத்திலும், 3-ம் தேதி வெள்ளி ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், 4-ம் தேதி பச்சைக் குதிரை வாகனத்திலும், 5-ம் தேதி தங்க குதிரை வாகனத்திலும், 6-ம் தேதி தங்கமயில், குதிரை வாகனத்திலும், 7-ம் தேதி பச்சை குதிரை வாகனத்திலும், 8-ம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும்,9-ம் தேதி திருத்தேரிலும், 10-ம் தேதி தங்கமயில் வாகனத்திலும் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 1-ம் தேதி (சனிக்கிழமை) கைப்பாரம், 5-ம் தேதி பங்குனி உத்திரம், 6-ம் தேதி சூரசம்கார லீலை, 7-ம் தேதி பட்டாபிஷேகம், 8-ம் தேதி பகல் 12.20 மணிக்கு மேல் 12.40மணிக்குள் திருக்கல்யாணம், 9-ம் தேதி காலை 6 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் கிரிவலப் பாதையில் மகா தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணைகமிஷனர் சுரேஷ் தலைமையில் கோவில் சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Updated On: 20 March 2023 1:17 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் கிரிக்கெட் மட்டையால் அடித்து மாமனார் கொலை; மருமகன்...
  2. நாமக்கல்
    சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கண்டித்து, நாமக்கல்லில் ஜூன் 12ல்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரத்தில் போலி பட்டுச் சேலை விற்பனை அதிகரிப்பு
  4. திருவண்ணாமலை
    நிதி நிறுவன மோசடி; காவல் நிலையத்தை முற்றுகையிட்ட முகவர்கள்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை
  6. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் திடீர் மழை; வேரோடு சாய்ந்த ஆல மரங்கள்
  7. திருப்பூர் மாநகர்
    ‘அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் இல்லை’ - ‘மாஜி’ அமைச்சர் வேலுமணி...
  8. ஆன்மீகம்
    12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்
  9. திருவண்ணாமலை
    சிறுமி பலாத்கார வழக்கு; தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
  10. திருவண்ணாமலை
    கள்ளச்சாராய விற்பனையை தடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம்