பல்லி தலையில் விழுந்தால் என்ன பலன்? | Palli Vilum Palan in Tamil for Female

சாஸ்திர சம்பிரதாயங்கள், ஜோதிடம் மீது நமக்கு பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன. அதில் முக்கியமானது பல்லி விழுவதால் ஏற்படும் பலன்கள். palli vilum palan in tamil for female பல்லி உடலில் எங்கு விழுந்தால், என்ன பலன்? இதோ...

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
palli vilum palan in tamil 2022 for female
X

பல்லி விழும் பலன் | palli vilum palan in Tamil 2022 for female

பல்லி, தற்செயலாக நம் மீது விழுந்துவிடுகிறது. இவ்வாறு பல்லி விழுவதற்கு ஒவ்வொரு பலன் உண்டு என்று, நமது முன்னோர்களும், ஜோதிட சாஸ்திர நூல்களும் குறிப்பிடுகின்றன. அதற்கு செய்ய வேண்டிய பரிகாரங்களும் இதோ உங்கள் பார்வைக்கு:
இடது கை மற்றும் கால்

நம் உடலின் இடது கை அல்லது இடது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சி கிடைக்கும் என்பது ஐதீகம்.

வலது கை மற்றும் கால்:

உடலின் வலது கை அல்லது வலது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் உடல் நல பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்பது அர்த்தமாகும்.


பாதம்:

நமது பாதத்தில் பல்லி விழுந்தால், வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்பது அர்த்தம்.

தொப்புள்:

தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால், மிகவும் விலை மதிப்பு மிக்க பொருட்களான தங்கம், வைரம், விடூரியம், இரத்தினம் போன்ற பொருட்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்க பெருமாம்.

தொடை:

தொடைப்பகுதியில் பல்லி விழுந்தால், அவர்களுடைய பெற்றோருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் செயலை செய்வீர்கள் என உணர்த்தும்.

மார்பு:

வலது மார்பின் மீது பல்லி விழுந்தால் லாபம் கிடைக்கப் பெறும். இடது மார்பின் மீது பல்லி விழுந்தால் அவர்களுக்கு சுகம் கிடைக்கப் பெறும்.

கழுத்து:

இடது பக்க கழுத்துப் பகுதியில் பல்லி விழுந்தால் காரிய வெற்றி உண்டாகும். வலது கழுத்தில் பல்லி விழுந்தால் அடுத்தவருடன் பகை உண்டாகும்.

செய்ய வேண்டியது என்ன?

நம் உடலின் எந்த பாகத்தின் மீதும் பல்லி விழுந்தாலும் உடனே குளித்து விடுங்கள். குளித்த பின்னர் அருகில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யுங்கள் அல்லது வீட்டிலேயே விளக்கேற்றி சுவாமியை வழிபட்டு பல்லி விழுந்ததால் எந்த கெட்ட செயலும் நடந்துவிடக் கூடாது என வேண்டிக் கொள்வது நல்லது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், வாய்ப்பிருந்தால் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பல்லியின் சிலையை தொட்டு வணங்குதல் சிறப்பைத் தரும்.

Updated On: 2022-06-22T15:14:21+05:30

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  சொந்த ஊர்களுக்கு, ஒரு நாளில் 1.42 லட்சம் பேர் பயணம்
 2. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று 225 ஊராட்சிகளில் கிராமசபை...
 3. சினிமா
  ஹீரோவாக ஆசைப்பட்ட அனிருத்: அட்வைஸ் சொன்ன ரஜினி
 4. தேனி
  இரண்டு டிஎம்சி தண்ணீரை இழந்தோம்... நீடிக்கும் பெரியாறு பெருந்துயரம்
 5. சினிமா
  துல்கர் சல்மானுடன் நடிக்கவில்லையே.. நடிகை பூஜா ஹெக்டே புலம்பல்
 6. ஆன்மீகம்
  குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடுமாம்...!
 7. சினிமா
  இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தம்பதி போட்டோ வைரல்
 8. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 68 அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
 9. தமிழ்நாடு
  சர்வதேச காற்றாடி திருவிழா மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது
 10. தமிழ்நாடு
  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்