/* */

பல்லி தலையில் விழுந்திடிச்சா..? அப்ப பலன் இதுதான்..! தெரிஞ்சுக்கங்க..!

Palli Thalaiyil Vilunthal-நமது வீடுகளில் இன்றும் பல்லி கத்தினால் பெரியவர்கள் கெவுளி சொல்லுது என்று அதற்கு சில விளக்கங்களும் சொல்வார்கள்.

HIGHLIGHTS

Palli Thalaiyil Vilunthal
X

Palli Thalaiyil Vilunthal

Palli Thalaiyil Vilunthal-கடவுள் மனிதர்களோடு பேசுவதற்கு பல வழிகளை வைத்துள்ளார் என்று நமது புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதில் நம்மோடு பேசுவதற்கு அல்லது சில எச்செரிக்கைகளை வலியுறுத்துவதற்கு பல்லியும் ஒன்றாக கூறப்படுகிறது.

இதனாலேயே ஊர்வன வகை உயிரினங்களில் ஒலியை எழுப்பும் சிறப்பு சக்தியை பல்லிக்கு மட்டுமே இறைவன் கொடுத்துள்ளார். பல்லியை கடவுளின் தூதன், ஒரு செய்தியாளன் என்று நமது இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பல சிறப்புகள் மிக்க பல்லியின் பல செயல்களுக்குப் பின் பல அர்த்தங்கள் உள்ளன. இன்றும் நமது வீட்டில் சில இடங்களில் பல்லி கத்தினால் நல்லது நடக்கும், சில இடங்களில் கத்தினால் தீயவை நடக்கும் என்று பெரியவர்கள் கூறுவதை நாம் கேள்விப்பட்டுள்ளோம்.

இதுபோலவே பல்லி நம் உடல் மீது எங்கு விழுகிறதோ அதை பொருத்தும் தனி பலன்கள் உண்டு. பண்டைய காலத்தில் பல்லியை குறித்து ஒரு தனி படிப்பே இருந்தது என்றால் அது எவ்வளவு முக்கியத்துவம் பெற்றதாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். அதைத்தான் கௌளி சாஸ்திரம் என்று கூறப்படுகிறது. பல்லிக்கு சில சக்திகள் இருப்பதாலேயே காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவிலில் கர்ப்பகிரகத்தின் மேல் கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் பல்லி உருவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதே போல் ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோவிலிலும் பல்லி வணங்கப்படுகிறது.

பல்லி என்பது நவகிரகங்களில் கேதுவை குறிப்பதாக உள்ளது. கேது என்பது ஸ்வரபானு என்கிற அசுரனின் உடலாகும். பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை அதற்கான பலன்கள் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் என்பதையும், அப்படி பல்லி விழுவதால் ஏற்படும் தோஷத்தை போக்கும் பரிகாரம் என்ன என்பதையும் இந்த செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம். வாங்க பார்க்கலாம்.

உடலில் எந்தப்பகுதியில் பல்லி விழுந்தால் என்ன பலன் என்பதை கீழே காணலாம்.

தலையில் பல்லி விழுந்தால் :

தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும். தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம் உண்டாகும்.

நெற்றியில் பல்லி விழுந்தால்:

நெற்றியின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும். நெற்றியின் வலது பக்கம் பல்லி விழுந்தால் லக்ஷ்மிகரம் உண்டாகும்.

வயிறு பகுதியில் பல்லி விழுந்தால்

வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி உண்டாகும். வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம் சேரும்.

முதுகு மீது பல்லி விழுந்தால்:

முதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை உண்டாகும். முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் ஏற்படும்.

கண் பகுதியில் பல்லி விழுந்தால்

கண் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயம் உண்டாகும். கண் வலது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் உண்டாகும்

தோள் பகுதியில் பல்லி விழுந்தால்

தோள் இடது பக்கம் பல்லி விழுந்தால் போகம் உண்டாகும். வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும்.

பிருஷ்டம் பகுதியில் பல்லி விழுந்தால்

பிருஷ்டம் இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம் உண்டாகும். பிருஷ்டம் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம் உண்டாகும்.

கபாலம் பகுதியில் பல்லி விழுந்தால்

கபாலம் இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு உண்டாகும். கபாலம் வலது பக்கம் பல்லி விழுந்தால் கதனம் உண்டாகும்.

கணுக்கால் பகுதியில் பல்லி விழுந்தால்

கணுக்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் ஏற்படும். கணுக்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் பிரயாணம் செய்ய நேரிடும்.

மூக்கு மீது பல்லி விழுந்தால்

மூக்கு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை உண்டாகும். மூக்கு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி உண்டாகும்.

மணிக்கட்டு பகுதியில் பல்லி விழுந்தால்

மணிக்கட்டு இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும். மணிக்கட்டு வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை உண்டாகும்.

தொடையில் பல்லி விழுந்தால்

தொடையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம் உண்டாகும். வலது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும்.

நகம் மீது பல்லி விழுந்தால்

நகத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் உண்டாகும். நகத்தின் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு உண்டாகும்.

காது பகுதியில் பல்லி விழுந்தால்

காதின் இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும். காதின் வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள் கூடும்.

மார்பு பகுதியில் பல்லி விழுந்தால்

மார்பு பகுதியின் இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் உண்டாகும். மார்பு பகுதியில் வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும்.

கழுத்து பகுதியில் பல்லி விழுந்தால்

கழுத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும். கழுத்தின் வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை உண்டாகும்.

உதடு மீது பல்லி விழுந்தால்

உதட்டின் இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு உண்டாகும். உதட்டின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கஷ்டம் உண்டாகும்.

முழங்கால் பகுதியில் பல்லி விழுந்தால்

முழங்கால் பகுதியின் இடது பக்கம் பல்லி விழுந்தால் பந்தனம் உண்டாகும். முழங்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் உண்டாகும்.

பாத விரல்களில் பல்லி விழுந்தால்

பாத விரலில் இடது பக்கம் பல்லி விழுந்தால் நோய் உண்டாகும். பாத விரல் வலது பக்கம் பல்லி விழுந்தால் பயம் உண்டாகும்.

கை மீது பல்லி விழுந்தால்

இடது கை மீது பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும். வலது கை மீது பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும்.

கை விரல் மீது பல்லி விழுந்தால்

இடது கை விரல் மீது பல்லி விழுந்தால் சஞ்சலம் உண்டாகும். வலது கை விரல் மீது பல்லி விழுந்தால் சன்மானம் கிடைக்கும்.

பாதத்தில் பல்லி விழுந்தால்

பாதத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும். பாதத்தின் வலது பக்கம் பல்லி விழுந்தால் நோய் உண்டாகும்.

பல்லி விழுந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்

பல்லி விழுவதால் ஏற்படும் தீமைகளுக்கு பரிகாரம் உள்ளது என பழைய சாஸ்திரங்கள் கூறுகின்றன. உங்கள் உடலின் எந்த ஒரு பகுதியிலும் பல்லி விழுந்தாலும், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நன்கு குளித்து விட்டு சிவன், விஷ்ணு, விநாயகர் போன்ற எந்த ஒரு கோவிலுக்கும் சென்று அங்குள்ள தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் தங்களின் வீட்டின் பூஜையறையிலேயே தெய்வங்களின் படத்திற்கு முன்பாக திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வதும் நல்லது.

சிவபெருமானுக்குரிய ம்ரித்யுன்ஜெய மந்திரத்தை ஜெபிப்பதாலும் பல்லி விழுந்ததால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும். சித்த வைத்தியத்தில் மருந்தாகவும், கோயில் சடங்குகளில் அபிஷேக பொருளாகவும் பசு மாட்டிலிருந்து பெறப்படும் 5 விதமான பொருட்களால் செய்யப்படும் பஞ்சகவ்யா திகழ்கிறது. பசுமாட்டின் உடலில் தேவர்கள் வாசம் செய்கிறார்கள் என்பதால் பசுமாட்டிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்யாவை உண்பதால் பல்லி நம்மீது விழுந்ததால் ஏற்படும் தோஷம் நீங்குகிறது.

வசதி மிகுந்தவர்கள் கோயிலில் இருக்கும் தெய்வங்களுக்கு தங்கம் அல்லது தங்க ஆபரணங்களையோ தானமாக அளிப்பதாலும் பல்லி விழுந்ததால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். மேலும் கோயில்களில் விளக்கெண்ணெய் கொண்டு மண் விளக்குகள் ஏற்றுவதாலும் பல்லி விழுந்ததால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். இவையெல்லாவற்றிற்கும் மேலான பரிகாரமாக இருப்பது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருக்கின்ற தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்ட பல்லி உருவம்.

மேலும் அந்த பல்லி உருவத்தோடு சூரியன் மற்றும் சந்திரனின் சித்திரத்தையும் காண முடியும். தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்ட பல்லி உருவத்தை தொடுவதால் நம் மீதுள்ள ராகு – கேது, சனி போன்ற கிரகங்களின் தீய தாக்கங்கள் மற்றும் முன்னாள் மற்றும் வருங்காலத்தில் வரப்போகும் தோஷங்கள் அனைத்தும் முற்றிலும் நீங்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 28 March 2024 9:18 AM GMT

Related News