/* */

பழனி கோவிலுக்கு செல்ல ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வது எப்படி..? தெரிஞ்சுக்கங்க..!

Palani Online Dharisanam Ticket Booking-பழனிக்கு பழநி என்று ஏன் பெயர் வந்தது என்று தெரிஞ்சுக்கணுமா..? அப்ப இதை படீங்க.

HIGHLIGHTS

பழனி கோவிலுக்கு செல்ல ஆன்லைனில் டிக்கெட்  புக் செய்வது எப்படி..? தெரிஞ்சுக்கங்க..!
X

palani temple online booking-பழனிமலை கோவில் (கோப்பு படம்)

கோவில் வரலாறு :

Palani Online Dharisanam Ticket Booking-பழனி முருகன் கோவில் (பழநி -பழம் + நீ - முருகன் கோவில்) முருகனது சிறப்பை உணர்த்தும் கோவில்களில் ஒன்றாகும். இது மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.


palani temple online booking

திருவிளையாடல் :

ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு வழங்குவதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினார். ஆனால், பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் என நாரதர் கூறியதை உமையாளிடம் கூறினார். அதனால், இந்த அரிய பலத்தை யாருக்கு வழங்கலாம் என்பதற்கு தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார்.

அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறீர்களோ அவர்களுக்கு இந்த ஞானப்பழம் கிடைக்கும் என்று அறிவித்தார். உடனே, குமரன் தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வரத்தொடங்கினர்.


சற்றுத் தடுமாறிய நிலையில் இருந்த விநாயகனோ உடனே சமயோசிதமாக தனது பெற்றோரை உலகமாகக் கருதி அவர்களை சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். உலகத்தை சுற்றி முடித்து வந்த குமரனுக்கு இதனால் ஏமாற்றமே மிஞ்சியது. அந்த கோபத்தில் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினார். அன்றிலிருந்து அவர் நின்ற இடம் `பழம் நீ ` (பழனி) என அழைக்கப்படுகிறது.

பழனிமலைக்கு முருகன் வருவதற்கு உதவியவர் இடும்பன். அவர் பெரிய தராசின் முலம் பழனிமலையும் இடும்பமலையையும் தூக்கிக்கொண்டு வந்து வைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

புராணங்களில் இப்படியான பெயர்க்காரணங்கள் வழங்கப்பட்டாலும் பழனம் என்ற பழந்தமிழ்ச் சொல்லில் அடிப்படையில் உருவான பெயரே பழனி. பழனம் என்ற சொல் விளைச்சலைத் தருகின்ற நிலத்தைக் குறிக்கும். அப்படிப்பட்ட நல்ல விளைச்சல் நிலம் நிறைந்த பகுதி என்பதால் பழனி என்ற பெயர் உருவானது என்ற கருத்தும் நிலவுகிறது.


பழனி கோவில் ஆன்லைன் முன்பதிவு

பழனி முருகன் கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் கீழே உள்ள செயல்முறை மூலமாக ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். எனவே, பழனி கோவில் தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்ய கீழே உள்ள கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி அதை பின்பற்றி சென்றால் உங்களுக்கான ஆன்லைன் பதிவு முழுமைபெறும் . பிரசாதம் முன்பதிவு போன்ற பிற ஆன்லைன் சேவைகளும் உள்ளன.

1. பழனி கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

2. முகப்புப் பக்கத்தில் ஆன்லைன் சேவைகளுக்கான பல்வேறு விருப்பங்களை நீங்கள் காணலாம்.

3. கிடைக்கக்கூடிய விருப்பங்களிலிருந்து பொருத்தமான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

4. தேதி மற்றும் நேர ஸ்லாட்டைத் தேர்ந்தெடுத்து, 'தொடரவும்' என்பதைக் 'கிளிக்' செய்யவும்.

5. முன்பதிவு படிவத்தை பூர்த்தி செய்ய தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.

6. கட்டணம் செலுத்துவதற்கான தேவை ஏதேனும் இருந்தால், தொகையை செலுத்தவும்.

7. நீங்கள் முடித்த ஸ்லாட்டை முன்பதிவு செய்வதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.

8. இப்போது, உங்கள் ஆன்லைன் முன்பதிவு முடிந்தது. உங்களுக்கான ஆன்லைன் பதிவுக்கான டிக்கெட்டை பிரதி எடுத்துக்கொள்ளலாம்.

பழனி கோவில் பூஜை மற்றும் தரிசன நேரங்கள் பின்வருமாறு :-

நேரம் / தரிசனம் / பூஜை

5:40 AM விஸ்வரூப தரிசனம்

6:00 AM - 6:50 AM தரிசனம்

6:50 AM - 7:15 AM விழா பூஜை

7:15 AM - 8:00 AM தரிசனம்

8:00 AM - 8:25 AM சிறுகலாசாந்தி

8:25 AM - 9:00 AM தரிசனம்

9:00 AM - 9:25 AM கலாசாந்தி

9:25 AM - 12:00 PM தரிசனம்

12:00 PM - 12:25 PM உச்சிகால பூஜை

12:30 PM - 5:30 PM தரிசனம்

5:30 PM - 5:55 PM சாயரக்ஷா பூஜை

6:00 PM - 8:00 PM தரிசனம்

8:00 PM - 8:25 PM ராகையா பூஜை

8:30 PM - 8:45 PM தரிசனம்

9:00 PM கோவில் மூடும் நேரம்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 March 2024 5:07 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்