om namah shivaya tamil-'ஓம் நம சிவாய' உச்சரிங்க..! வாழ்வின் உன்னதம் அனுபவிங்க..!
om namah shivaya tamil-'ஓம் நம சிவாய' எனும் மந்திரம் ஒலிக்கும் இல்லங்களில் வளமும் உடலாரோக்கியமும் பெருகும்.
HIGHLIGHTS

om namah shivaya tamil-ஓம் நம சிவாய சொல்வதால் ஏற்படும் நன்மைகள் - படம் : சிவ பெருமான் (கோப்பு படம்)
" ஓம் நம சிவாய " மந்திரத்தின் பொருள்
ஓம் நம சிவாய அடிப்படையில் பிரபஞ்சத்தின் முதலாக வருகின்ற ஓம் உலகின் மூல ஒலியான பிரணவத்தை காட்டுகிறது.சி - என்பது சிவபெருமானையும், வா - என்பது அம்பாளையும், ய -என்பது மனிதர்களான ஜீவன்களையும் நம - என்பது ஜீவன்களை பற்றியுள்ள மாயை, ஆணவம், கர்மம் என்ற மும்மலத்தையும் காட்டுவதாகும்.
om namah shivaya tamil-'ஓம் நம சிவாயா' என்று உச்சரிக்கும்போது மன வேதனைகள்,மனக்கவலைகள் மாயமாகிப்போகும். எந்த துன்பத்தையும் நீக்க வல்ல 'ஓம் நம சிவாயா' என்ற வார்த்தையை மனதில் இருத்தி சொல்லிப் பழகுவது சிறந்த ஆக்கப்பூர்வமான நேர்மறை அலைகளை நம்முள் நிரந்தமாக்கி விடும்.
om namah shivaya tamil
ஆன்ம பலம் தரும்
இந்த நாமம், ஒலியின் ஒலி. ஆத்ம சுத்தம் செய்யும் ஆன்ம கீதம். உள்ளுக்குள் ஒளிந்து கிடக்கும் சக்திகளை வெளிக் கொணரும் பிராண நாமம். 'ஓம் நம சிவாயா' இது வேதத்தின் உயிர்நாடி. நம்மை புனிதப்படுத்தும் அழகோசை. நாமம், காம, க்ரோத, மோகங்களை அழிக்கும் நாமம். பிறப்பினை அழிக்கும் நாமம் என இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இது வாழ்வின் உண்மை.
'ஓம் நம சிவாயா' நான் 'சிவபெருமானை வணங்குகிறேன்' என்ற இந்த வார்த்தைக்கு இத்தனை மகிமைகள் உள்ளன. மன வேதனைகளையும், கவலைகளையும் நீக்க வல்லது. இதனை மனதினிலேயே சர்வ காலமும் சொல்லிப் பழகுவது நேர்மறை அலைகளை நிலைநிறுத்தும்.
om namah shivaya tamil
பொருள்
ந-நிலம், ம-நீர், சி-அக்னி, வா-காற்று, ய-ஆகாயம் என பொருள்படுகிறது. சிவன் பஞ்ச பூதங்களின் அதிபதி. இந்த மந்திரம் அண்ட சராசரங்களின் உட்கருவான சிவனின் அருளினைப் பெற்றுத்தரும். இந்த உட்கருவில் இருந்தே அனைத்தும் வெளி வருகின்றன. பின்னர் அதனுள்ளே செல்கின்றன. அப்பேர்பட்ட அதிசக்தியான சிவபிரானை வணங்குவது தான் 'நம சிவாய'.
- இது விஞ்ஞான ரீதியான தியானம்.
- கவனத்திறனையும் செயல் திறனையும் கூட்டுவதாக கூறப்பட்டுள்ளது.
- 'ஓம்' என்ற வார்த்தை மன அமைதி குறைந்தவர்கள், வலிப்பு நோயாளிகள் இவர்களுக்கு சிகிச்சையில் பயிற்சியாக அளிக்கப்படுகின்றது.
- 'ஓம்' என்ற நாம சொல்வதால் உயர் ரத்த அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
சாதாரணமாக பத்மாசனம் செய்யும்போது 'ஓம்' உச்சரிப்பது உடலில் ஒருவித புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். சாதாரணமாகவே நாம் பிரார்த்தைகள் செய்யும்போது கூட 'ஓம் நம சிவாயா' என்று உச்சரிக்கலாம். அவ்வாறு நாம் உச்சரிக்கும்போது உடலில் ஒருவித அதிர்வலைகள் ஏற்படுவதை நாம் உணரமுடியும். அந்த அதிரவலைகளே புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.
இந்து மதத்தில் முக்கிய கடவுளாக பார்க்கப்படுபவர் சிவபெருமான். சிவன், பிரம்மா, விஷ்ணு என்று இந்து மதத்தில் மும்மூர்த்திகளில் முதல்வராக இருப்பவர்,சிவன். அதிக பக்தர்களைக் கொண்டவர் சிவன்தான்.
ஓம் நமசிவாய மந்திரம்
பெரும்பாலான சிவபக்தர்கள் கூறும் மந்திரம் ஓம் நம சிவாய என்னும் மந்திரமே. இந்த மந்திரம் ஸ்ரீ ருத்ர சமாகம் என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபெருமானின் ருத்ரம் தீங்கற்றது என்பதை இது உணர்த்துகிறது. வெல்லமுடியாத சக்தியாக சிவபெருமான் இருக்கிறார் என்பதால் அவரின் பக்தர்கள் இந்த மந்திரத்தை கூறி வழிபடுகின்றனர்.
மந்திரத்தின் பலன்கள்
ஓம் நமசிவாய மந்திரத்தை கூறுவது சிவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் உடல் ரீதியாக மற்றும் மனரீதியாக இருக்கும் பல பிரச்சினைகள் தீர்வதாக கருதப்படுகிறது.
ஓம் நமசிவாய மந்திரம் சொல்லும் உண்மைகள்
இந்த மந்திரம் ஐந்து அக்ஷரங்கள் அல்லது மூலக்கூறுகளை உள்ளடக்கியுள்ளது. அவை "ந", "ம", "சி", "வா", "ய" என்பதாகும். இதன் உட்பொருள் செறிவுமிகுந்தது. நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்களுக்கும் அதிபதியாக இருப்பவர் சிவபெருமான்தான் என்பதாகும். இதனை பற்றிய குறிப்புகள் யஜூர் வேதத்தில் உள்ளன.
பலன்கள்
மனதில் உண்மையான பக்தியோடு இந்த மந்திரத்தை கூறி வழிபடுவது ஒருவரின் ஆன்மாவை சுத்தப்படுத்தும். மேலும் அவர்களை நல்வழிப்பாதையில் செலுத்தி வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய உதவும்.
அதிர்வுகள்
இந்த மந்திரத்தின் அதிர்வுகள் நமது மனதையும், ஆழ்மனதையும் விழிப்புடன் இருக்க வைத்து அதனை தெளிவடைய வைக்கும். இந்த மந்திரத்தை தொடர்ந்து கூறுவது மனஅழுத்தம், தூக்கப் பிரச்னைகள் மற்றும் மனநோய்களை குணப்படுத்தும். மனஅழுத்தத்திற்கு இந்த மந்திரத்தை விட சிறந்த தீர்வு எதுவுமில்லை.
ஓம்
" அம் " என்பது நமது பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலாக கருதப்படுகிறது. இதனை தொடர்ந்து கூறுவது நமக்குள் இருக்கும் நேர்மறை ஆற்றலை எழுப்பும். நமது எண்ணங்கள் மற்றும் செயல்களை சீராக்கும்.
om namah shivaya tamil
அமைதி
இந்த மந்திரத்தை தொடர்ந்து 108 முறை கூறுவதால் கோபம் மற்றும் மூர்க்கத்தனம் மறையும்.மனக்கட்டுப்பாடு ஏற்படும். எதிலும் ஒரு தெளிந்த பார்வை கிட்டும். இது வாழ்க்கையில் அமைதியை ஏற்படுத்துவதுடன், வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பையும் உண்டாக்குகிறது.