/* */

நாகூர் தர்கா சந்தனம் பூசும் விழா: புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

தொற்று பரவலால், நாகை கந்தூரி விழா சந்தனம் பூசும் நிகழ்ச்சியில், தர்கா நிர்வாகிகள் பணியாளர்கள் உள்பட 45 பேருக்கு மட்டுமே அனுமதி என்று, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நாகூர் தர்கா சந்தனம் பூசும் விழா: புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
X

கோப்பு படம் 

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், நேற்று செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 465 ஆம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது, கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய் தொற்று தீவிரமாக பரவி வருகிறது.

எனவே, கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான, ஜனவரி 14ஆம் தேதி நடைபெற உள்ள சந்தனம் பூசும் நிகழ்ச்சியில், தர்காவின் நிர்வாகிகள், பணியாளர்கள் 45 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சந்தனக்கூடு ஊர்வலம் மிக எளிமையான முறையில், நாகையில் இருந்து புறப்பட்டு நாகூர் தர்கா வந்தடையும். இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்க முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.

Updated On: 11 Jan 2022 12:15 AM GMT

Related News