/* */

மச்சானுக்கு வாழ்வு வந்தால் 'மச்சம்' தான் காரணமா..? மச்ச சாஸ்திரம் பாருங்க..!

Macham in Tamil-'மச்சி நீ மச்சக்காரண்டா' என்று நண்பர்களுக்குள் பேசுவது வழக்கம். அதற்கு அந்த நண்பருக்கு ஏதாவது திடீர் நன்மைகள் கிடைத்திருப்பதால்தான் அவ்வாறு பேசப்படுகிறது.

HIGHLIGHTS

Macham in Tamil
X

Macham in Tamil

Macham in Tamil-சாஸ்திர அடிப்படையில் பலவகை பலன்களைக் கூறும் கணிப்பு முறைகள் உள்ளன. உதாரணமாக பல்லி விழும் பலன். அதேபோலவே உடலில் மச்சங்கள் இருப்பதைக்கொண்டு பலவகை பலன்களை நமது முன்னோர்கள் கணித்து வைத்துள்ளனர். அதன்படி இன்று மச்ச சாத்திரம் என்பது என்ன? அது எப்படி பலன் கூறுகிறது என்பதை பார்க்கலாம் வாங்க.

மச்ச சாஸ்திரம்

முன்னோர்கள் நமது உடலில் உள்ள மச்சங்கள் இருக்கும் இடத்தை அடிப்படையாக வைத்து பலன்களை கணித்து வைத்திருக்கிறார்கள். பொதுவாக சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்துச் சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை, பொன் பொருள் போன்றவை அளவுக்கு அதிகமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களை அவன் அதிர்ஷ்டக்காரன் என்று கூட சொல்லமாட்டார்கள். அட..அவன் மச்சக்காரன் என்பார்கள்.

கஷ்டப்பட்டு உழைக்காமலேயே ஏதாவது ஒரு வழியில் இந்த வசதி வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைத்திருக்கலாம். அவ்வாறான அதிர்ஷ்டத்திற்கு அவர்கள் உடலில் குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் மச்சங்கள்தான் வழங்குகின்றன, என்பதுதான் இந்த சாஸ்திரத்தின் அடிப்படை நம்பிக்கை.

அந்த மச்சங்கள் எந்த இடத்தில இருந்தால் என்ன அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை மச்ச சாஸ்திரம் என்னும் நூல் விளக்குகிறது.

மச்சம் என்பது அங்க அடையாளம்

மச்சங்கள் என்பது நமது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களால் ஏற்படும் கழிவுகளின் வெளிப்பாடு. இருப்பினும் அவைகளை நமது முன்னோர்கள் மச்சம் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகத்தை கணிக்கிறார்கள். தலையில் இருந்து கால் வரை இருக்கும் தோல் பாகத்தில் சிறு மற்றும் பெரும் மச்சங்கள் இருக்கும். இது ஒரு சிலருக்கு கோதுமை நிறம், கருநீலம், அடர் சிவப்பு, வெள்ளை என பல வண்ணங்களில் இருக்கும். நாம் பிறக்கும்போது இருக்கும் மச்சம் சிறியதாகவும், பெரிதாகவும் இருக்கும். இவை நாம் இறக்கும் வரை மறையாது என்பதால் முக்கிய அரசு ஆவணங்களில் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது.

எதெல்லாம் மச்சம்

சிலருக்கு ஆழமான காயங்களால் ஏற்பட்ட புண், அம்மை போன்றவைகளால் ஏற்பட்ட தழும்பு இருக்கும். அவைகள் உண்மையில் மச்சங்கள் இல்லை. மச்சங்கள் ஒரு சிலருக்கு பிறக்கும் போதே இருந்தாலும் சில நேரங்களில் அவைகள் மறைந்துவிடும். ஒரு சிலருக்கு உடலில் தீடீரென மச்சம் தோன்றுவதும் உண்டு. ஆனால், அது அரிதாகவேத் தோன்றும்.

மச்சத்தால் ஏற்படும் பலன்கள்

இந்த மச்சங்கள் ஒரு சிலருக்கு பிறக்கும் போதே நற்பலன்களையும், யோகங்களையும் வாழ்க்கை முழுவதும் தரும் என்று நம்பப்படுகிறது. ஒரு மச்சம் ஆண் மற்றும் பெண்ணுக்கு ஒரே இடத்தில இருந்தாலும் அதன் பலன்கள் வேறு வேறானவை.

இந்த மச்சங்கள் இருக்கும் இடத்தை கொண்டு அவர் எப்படிபட்டவர், அவரது குணங்கள் எப்படி இருக்கும் எனபதையும் கணிக்கமுடியும். ஆண்களுக்கு உடலின் வலது புறம் உள்ள மச்சங்களை வைத்தும், பெண்களுக்கு உடலின் இடது புறமுள்ள மச்சத்தை வைத்து பலன் காண வேண்டும் என்று மச்ச சாஸ்திர நூல் கூறுகிறது. இனி ஆண் மற்றும் பெண்களுக்கு எங்கெங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

ஆண்களுக்கு தலைப் பகுதியில் மச்சம் இருந்தால் ஏற்படும் பலன்கள் :-

தலையின் வலது பக்கத்தில் மச்சம் உள்ளவர்கள் அதிகாரம் செலுத்தும் இடத்தில் இருப்பார்கள்.

தலையில் இடது பக்கம் மச்சம் உள்ளவர்கள் பொது வாழ்வில் அதிக ஆர்வம் இருக்கும்.

நெற்றியின் வலது புறம் மச்சம் உள்ளவர்கள் திடீர் தனயோகம் உண்டாகும்.

வலது நெற்றியில் மச்சம் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும்.

mole sastram in tamil

நெற்றியின் இடது புறம் மச்சம் உள்ளவர்களுக்கு வசதியான வாழ்க்கை அமையும்.

புருவங்களில் மச்சம் உள்ள ஆண்கள் முன்கோபம் அதிகமாக கொண்டவராக இருப்பார்.

புருவங்களுக்கு நடுவில் மச்சம் உள்ளவர்கள் நீண்ட ஆயுள் பெற்றவராக இருப்பர்.

வலது புருவத்தில் மச்சம் உள்ளவர்களுக்கு மனைவியால் யோகம் உண்டாகும்.

இடது புருவத்தில் மச்சம் உள்ள ஆண்கள் செலவாளியாக இருப்பார்கள்.

கண்களில் மச்சம் உள்ள ஆண்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள்.

வலது கண்ணில் மச்சம் உள்ளவர்களுக்கு நண்பர்களால் உயர்ந்த நிலை ஏற்படும்.

இடது கண்ணில் மச்சம் உள்ள ஆண்கள் சுதந்திர மனப்பான்மை உடையவர்களாக இருப்பார்கள்.

வலது கண் வெண்படலத்தில் மச்சம் உள்ளவர்களுக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருக்கும்.

இடது கண் வெண்படலத்தில் மச்சம் உள்ளவர்களுக்கு வறுமையான வாழ்க்கை அமையும்.

mole sastram in tamil

கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் உழைப்பால் உயர்ந்த நிலைக்கு வருவார்கள்.

வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் வசீகரமான உடலமைப்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.

இடது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் எல்லோரிடமும் இனிமையுடன் பழகுவார்கள்.

மூக்கின் மேல் மச்சம் உள்ளவர்களுக்கு சுகபோகமான வாழ்க்கை அமையும்.

மூக்கின் வலதுபுறம் மச்சம் உள்ளவர்கள் நினைத்ததை அடையும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள்.

மூக்கின் இடதுபுறம் மச்சம் உள்ளவர்களுக்கு தேவையில்லாத நட்பால் பெண்களிடம் அவமானம் ஏற்படும் நிலை வரலாம்.

மூக்கின் நுனியில் மச்சம் உள்ளவர்களுக்கு ஆணவம், கர்வம், பொறாமை, தயக்க குணம் உடையவர்களாக இருப்பார்கள்.

நாக்கில் மச்சம் உள்ளவர்கள் பொய் அதிகம் பேசுவார்கள்.

உதட்டில் மச்சம் உள்ளவர்கள் சகல கலைகளையும் கற்றுக்கொள்வதில் ஆர்வமுடையவராய் இருப்பார்கள்.

mole sastram in tamil

மேல் மற்றும் கீழ் உதட்டில் மச்சம் உள்ளவர்கள் எதிலும் அலட்சியமாக இருப்பார்கள்.

மேவாய் பகுதியில் மச்சம் உள்ளவர்கள் செல்வாக்கு மற்றும் இசைத்துறையில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

காதில் மச்சம் உள்ள ஆண்கள் வெற்றிகளைச் சந்திப்பார்கள்.

காதின் பின்புறம் மச்சம் உள்ள ஆண்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்ததாக அமையும்.

வலது காதின் நுனியில் மச்சம் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் கண்டங்கள் வரலாம்.

இடது காதின் நுனியில் மச்சம் உள்ளவர்களுக்கு தகாத சேர்க்கையால் அவமானம் ஏற்படும்.

நாளை பெண் முகத்தில் மச்சங்கள் இருந்தால் ஏற்படும் பலன்களைக் காண்போம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 1 April 2024 5:28 AM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  4. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  5. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  6. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  7. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  8. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா