/* */

திருப்பூர் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை; வரும் 14ல் துவக்கம்

Tirupur Ayyappan Temple-திருப்பூர் ஐயப்பன் கோவிலில், மகரவிளக்கு மண்டல பூஜை விழா, வரும் 14ம் தேதி துவங்குகிறது.

HIGHLIGHTS

திருப்பூர் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை; வரும் 14ல் துவக்கம்
X

திருப்பூர் காலேஜ் ரோடு ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, வரும் 14ல் துவங்குகிறது.

Tirupur Ayyappan Temple-திருப்பூர் காலேஜ் ரோட்டில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது. திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபடும் பிரதான வழிபாட்டு தலங்களில் ஒன்றாக உள்ளது. திருப்பூரில், கார்த்திகை விரதம் மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள், வரும் 17ம் தேதி, கார்த்திகை மாதம் துவங்கும் முதல் நாளில், மாலை அணிந்து விரதம் துவங்குகின்றனர். ஒரு மண்டலம் என 48 நாட்கள் வரை, விரதம் இருக்கும் பக்தர்கள், தலையில் இருமுடி ஏந்தி எரிமேலி சென்று, பெருவழிப்பாதை வழியாகவோ, அல்லது பம்பை சென்றோ சபரிமலை ஐயப்பனை தரிசிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. திருப்பூர் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள், ஆண்டுதோறும் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்று காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. தற்போது, தொற்று பாதிப்பு இல்லாததால், ஆன்லைன் புக்கிங் மூலம் முன்பதிவு செய்துகொண்டு, பக்தர்கள் சபரிமலைக்கு வரலாம் என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எனவே, நடப்பாண்டில் ஐயப்பன் சீசன் களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பூர் ஐயப்பன் கோவிலில், ஆண்டு தோறும் மண்டல பூஜை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு மண்டல பூஜை நாளை மறுதினம் (14-ம் தேதி) துவங்குகிறது.

ஐயப்ப சுவாமி ஆறாட்டு விழா, 14-ம்தேதி துவங்கி 19-ம் தேதி வரை நடக்கிறது. வருகிற 14-ம் தேதி காலை கணபதி ஹோமம், மாலையில் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. மகா கணபதி ஹோமம், நவகலச அபிேஷகம், 108 வலம்புரி சங்காபிேஷகம், பறையெடுப்பு, மகா விஷ்ணு பூஜை, உற்சவ பலிபூஜை, பகவதி சேவை, தாய்பகை மேளம், பள்ளிவேட்டை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வருகிற 19 -ம் தேதி காலை 8மணிக்கு ஐயப்ப சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலுக்கு ஆறாட்டு உற்சவத்துக்கு புறப்பட்டு செல்கிறார். காலை 11மணிக்கு, சபரிமலை பிரதம தந்திரி கண்டரு பிரம்மஸ்ரீ மகேஷ் மோகனரு தலைமையில், வீரராகவப்பெருமாள் கோவில் குளத்தில் அய்யப்ப சுவாமி ஆறாட்டு விழா நடக்கிறது. அன்று மாலை 6:30 மணிக்கு விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் இருந்து, ஐயப்ப சுவாமி ரத ஊர்வலம் துவங்குகிறது. முக்கிய வீதிகள் வழியாக சென்று ரத ஊர்வலம், ஐயப்பன் கோவிலை சென்றடைகிறது.

மண்டல பூஜை விழாவை முன்னிட்டு, வரும் ௨௦ம் தேதி துவங்கி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 11:30 மணிக்கு கோவிலில் அன்னதானம் நடைபெற உள்ளது. மேலும் 15-ம்தேதி முதல், 18-ம் தேதி வரை தினமும், 7 மணிக்கு பறையெடுப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. மேலும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக, கோவிலில் இருந்து குறிப்பிட்ட தினங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில், முன்பதிவு செய்யும் பக்தர்கள் சபரிமலைக்கு அழைத்து செல்லப்பட்டு, திரும்ப அழைத்து வரப்படுகின்றனர். மண்டல பூஜை விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Feb 2024 9:22 AM GMT

Related News

Latest News

  1. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  3. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  4. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  5. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  6. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  7. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  8. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  9. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  10. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?