/* */

mahalakshmi ashtakam tamil உங்கள் கஷ்டங்கள் தீர தினமும் மஹாலட்சுமி அஷ்டகம் படிங்க.....

mahalakshmi ashtakam tamil மனித வாழ்க்கையே மகத்தானது. இதில் நம்மை மீறிய சக்தி ஒன்று உண்டு என அனைவரும் நம்புவதால் இறைபக்தியே சிறந்து விளங்கி வருகிறது.

HIGHLIGHTS

mahalakshmi ashtakam tamil  உங்கள் கஷ்டங்கள் தீர  தினமும் மஹாலட்சுமி அஷ்டகம் படிங்க.....
X

mahalakshmi ashtakam tamil



மனித வாழ்க்கையில் ஒரு சிலர் கஷ்டம் வரும்போது மட்டும் கடவுளிடம் சென்று முறையிடுவர். மற்ற நேரங்களில் கோயில் பக்கம் கூட செல்லமாட்டார்கள். உண்மை அப்படியில்லை. தினமும் இறைவனை மனதார வணங்குபவர்கள் எந்தவித துன்பங்களில் இருந்து ம் விடுபடுகின்றனர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அஷ்டகம்_என்றால்எட்டுப் பொருள்களைக் கொண்டது என்பது

பொருள். ஈரடிகளாக வரும் இந்த ஸ்லோகம் இந்திரனால் மஹாலக்ஷ்மியை துதித்து "பத்ம புராணத்தில்" பாடப்பட்டது.இந்த மஹாலக்ஷ்மி அஷ்டகத்தை ஒரு முறை, இரு முறை, மூன்று முறைகளால் சொல்வதால் ஏற்படும் பலன்களைக் குறிப்பது.

நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே |

சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 1

வணக்கத்திற்கு உரியவளே! சகலருடைய சித்தத்தையும் கவர்ந்து விருப்பங்களில் செலுத்தும் மஹா மாயையே!

ஸ்ரீசக்கர பீடத்தில் நிலைத்து வசிப்பவளே!

தேவர்களால் வழிபடப்படுபவளே!

சங்கு சக்கரம் கதை இவற்றைத் திருக்கரங்களில் தாங்கியிருக்கும் மஹாலக்ஷ்மியே!

உன்னை வணங்குகின்றேன் தாயே!




mahalakshmi ashtakam tamil

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி |

சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 2

எல்லோரும் வணங்கும்படியாக கருடவாகனத்தில் ஆரோகணித்து வருபவளே!

கோலாசுரன் என்னும் கொடியவனுக்கு பயங்கரியாகி, அவனை அழித்தவளே! எல்லா பாவங்களையும் அழிக்கும் தேவியே!

மஹாலக்ஷ்மித்தாயே!

உன்னை வணங்குகின்றேன் அம்மா!

mahalakshmi ashtakam tamil

சர்வக்ஞே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி |

சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 3

உயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாக விளங்குபவளே!

அனைத்து வரங்களையும் அளிப்பவளே!

எல்லா தீமைகளுக்கும் பயங்கரியாக விளங்குபவளே!

எல்லா துக்கங்களையும் தீர்ப்பவளே!மஹாலக்ஷ்மியே!

உன்னை வணங்குகின்றேன் அன்னையே!

mahalakshmi ashtakam tamil

சித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி |

மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 4

அறிவும் சிந்தனையும் தேர்ந்து எய்தக்கூடிய தெய்வீக வெற்றியினை அருள்பவளே!

மோக்ஷத்திற்கான நல்ல ஞானத்தை அளிப்பவளே!

மந்த்ரங்களின் வடிவாகத் திகழ்பவளே!மஹாலக்ஷ்மியே!

உன்னை வணங்குகின்றேன் அம்மையே!

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி |

யோகஜே யோக ஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 5

முதலும் முடிவும் அற்ற தேவியே! பிரபஞ்சத்தின் முதல் சக்தியான ஆதிபராசக்தியே!

யோக நிலையில் தோன்றியவளே!

யோக வடிவாகத் திகழ்பவளே!மஹாலக்ஷ்மியே!

உன்னை வணங்குகின்றேன் மாதாவே!

mahalakshmi ashtakam tamil

ஸ்தூல சூக்ஷ்ம மஹா ரெளத்ரே மகாசக்தி மஹோதரே |

மஹா பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 6

பூவுலகில் காணும் வடிவங்களாக விளங்குபவளே!

எளிதில் உணரப்பட முடியாதவளே! (பிழைகளைக் காணுங்கால்) எல்லையற்ற கோபம் கொள்பவளே!

அளவிடற்கரிய பெரும் சக்தி என விளங்குபவளே!

பெரும் பாவங்களை அழிப்பவளே!மஹாலக்ஷ்மியே!

உன்னை வணங்குகின்றேன் அம்மா!

mahalakshmi ashtakam tamil

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி |

பரமேஸி ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 7

பத்மாசனத்தில் அமர்ந்தவளே! பரப்ரம்மத்தின் வடிவாகத் திகழ்பவளே! பரமேஸ்வரி என விளங்குபவளே! அகில உயிர்களுக்கும் அன்னையே!

மஹாலக்ஷ்மியே!

உன்னை வணங்குகின்றேன் தாயே!

mahalakshmi ashtakam tamil

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே |

ஜகஸ்திதே ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 8

தூய வெண்ணிற ஆடையுடன் இலங்குபவளே!

பலவிதமான அலங்காரங்கள் கொண்டு திகழ்பவளே!

பூவுலகெங்கும் வியாபித்திருப்பவளே! அகில உலகங்களுக்கும் அன்னையே! மஹாலக்ஷ்மியே!

உன்னை வணங்குகின்றேன் அன்னையே!

பலஸ்ருதி:

மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமாந் நர: |

ஸர்வ ஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா: ||

மஹாலக்ஷ்மி அஷ்டகத்தினைச் சொல்லி மனப்பூர்வமாகத் துதிப்பவர் எல்லா இடர்களையும் வென்று மனோராஜ்யங்களை அடைந்தவராகி இருப்பர்.

mahalakshmi ashtakam tamil

ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம் |

த்வி காலம் ய: படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித: ||

தினமும் ஒரு முறை சொல்லி வழிபடுபவரின் பெரும் பாப வினைகள் அழியும்.

தினமும் இரு முறை சொல்லி வழிபடுபவரின் இல்லத்தில் தனமும் தான்யமும் குறைவின்றி நிறைவாக விளங்கும்.

திரி காலம் ய: படேந் நித்யம் மஹா சத்ரு விநாஸனம் |

மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா. ||

தினமும் மூன்று முறை சொல்லி வழிபடுபவர் (ஐம்புலன் எனும்) எதிரிகளை எளிதாக வெல்வர். ஸ்ரீமஹாலக்ஷ்மியின் பேரருளைப் பெற்று உய்வர். ஸ்ரீமஹாலக்ஷ்மி அவர் நெஞ்சகத்தில் நிலைத்து நிற்பாள்.

mahalakshmi ashtakam tamil

ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம் ஸ்தோத்ரம்:

நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே |

சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 1 ||

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி |

சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 2 ||

சர்வக்ஞே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி |

சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 3 ||

சித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி |

மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 4 ||

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி

யோகஜே யோக ஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 5 ||

ஸ்தூல சூக்ஷ்ம மஹா ரெளத்ரே மகாசக்தி மஹோதரே |

மஹா பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 6 ||

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி |

பரமேஸி ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 7 ||

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே |

ஜகஸ்திதே ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 8 ||

பலஸ்ருதி:

மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமாந் நர: |

ஸர்வ ஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா: ||

ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம் |

த்வி காலம் ய: படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித: ||

திரி காலம் ய: படேந் நித்யம் மஹா சத்ரு விநாஸனம் |

மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா. ||

Updated On: 29 Aug 2022 8:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  10. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?