/* */

நாளை சந்திரகிரகணம்; திருப்பதி கோவிலில் 12 மணி நேரம் நடை அடைப்பு

Chandra Grahanam Tamil -நாளை சந்திரகிரகணம் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோவில், 12 மணி நேரம் நடை அடைக்கப்பட உள்ளதாக, திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நாளை சந்திரகிரகணம்; திருப்பதி கோவிலில்  12 மணி நேரம் நடை அடைப்பு
X

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை 12 மணி நேரம் சுவாமி தரிசனம் ரத்து

Chandra Grahanam Tamil -பக்தர்களால் 'பணக்கார சாமி' என்று பக்தர்களால் அழைக்கப்படும் கடவுள், திருப்பதி வெங்கடாஜலதிபதிதான். தமிழகம், கேரளா, கர்நாடகா என இந்தியாவின் பிறமாநிலங்கள் மட்டுமின்றி, பிற நாட்டவர்களும், திருப்பதி ஏழுமலையானை வந்து தரிசித்து செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறைவனை தரிசிக்க வரும் இக்கோவிலில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தங்குமிடம் வசதிகள் செய்யப்படுகிறது.

நாளை, (8ம் தேதி) சந்திரகிரகணம் பிற்பகல் 2:58 மணிக்கு துவங்கி, மாலை 6:18க்கு நிறைவடைகிறது. மாலை 5:32 மணி, கிரகணத்தின் உச்சநேரமாக உள்ளது. எனவே, 12 மணி நேரத்துக்கு, திருப்பதி கோவில் நடை அடைக்கப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் காலை 8.40 மணிக்கு மூடப்பட்டு இரவு 7.20 மணிக்கு திறக்கப்படும். 12மணி நேரம் கோவில் மூடப்படும். இதன் காரணமாக, திருப்பதியில், விஐபி தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கான விஐபி தரிசனம் ரூ.300 கட்டண தரிசனம் நேர ஒதுக்கீடு செய்யப்படும் இலவச தரிசன டிக்கெட், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் உள்ள பெற்றோர்கள், வெளிநாட்டு இந்தியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து சலுகை பெற்ற தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கிரகணம் முடிந்த பிறகு இலவச தரிசனத்தில் மட்டுமே வைகுண்ட வளாகம் 2ல் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கிரகண நாட்களில் கிரகணம் முடியும் வரை சமையல் செய்ய மாட்டார்கள். அதனால், அன்னபிரசாத கூடமும் கிரகணம் முடியும் வரை மூடப்பட்டிருக்கும். இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இதற்கு ஏற்றார் போல் திட்டமிட்டு வருமாறு பக்தர்களுக்கு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

திருமலை அன்னமைய்யா பவனில் நேற்று தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேவஸ்தான தலைமை நிர்வாக அலுவலர் தர்மாரெட்டி கலந்துக்கொண்டு பக்தர்கள் நிறை, குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மீண்டும் சர்வ தரிசன டோக்கன்கள் திருப்பதியில் கடந்த 1-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் தினமும் 25 ஆயிரம் டோக்கன்களும், மற்ற வார நாட்களில் தினமும் 15 ஆயிரம் டோக்கன்களும் வழங்கப்படுகின்றன. டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் அன்றே சுவாமியை குறிப்பிட்ட நேரத்தில் தரிசிக்கலாம். டோக்கன் பெறாத பக்தர்களும் நேரடியாக திருமலைக்கு சென்று, வைகுண்டம்-2 காம்ப்ளக்ஸ் வழியாக சென்று இலவச தரிசனம் வாயிலாக சுவாமியை தரிசிக்கலாம். வரும் 8-ம் தேதி, சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் நடை அடைக்கப்படும். ஸ்ரீநிவாச திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நவம்பர் 5-ம் தேதி ஜெர்மனியிலும், பாரீஸில் நவம்பர் 6-ம் தேதி முதலும், லண்டனில் நவம்பர் 16-ம் தேதியும், ஸ்காட்லாந்தில் நவம்பர் 13-ம் தேதியும் நடைபெறும்.

கடந்த அக்டோபர் மாதத்தில் ஏழுமலையானை 22.74 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளனர். ரூ.122.83 கோடி உண்டியல் மூலம் காணிக்கையாக கிடைத்துள்ளது. 1.08 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 60.91 லட்சம் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. 10.25 லட்சம் பேர் தலைமுடியை காணிக்கை செலுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Nov 2022 3:55 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  2. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  5. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  6. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  7. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  8. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  9. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  10. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...