/* */

kumba rasi palan-நீங்க கும்ப ராசிக்காரரா..? நல்ல சேதி ஒண்ணு வருமுங்கோ..!

கும்ப ராசிக்காரருக்கான இன்றைய(11ம் தேதி வெள்ளிக்கிழமை) ராசிபலன் என்ன என்பதை தெரிஞ்சுக்கங்க.

HIGHLIGHTS

kumba rasi palan-நீங்க கும்ப ராசிக்காரரா..?  நல்ல சேதி ஒண்ணு  வருமுங்கோ..!
X

kumba rasi palan-கும்ப ராசிக்கான இன்றைய பலன்.

kumba rasi palan, kumba rasi palan today

கும்பம் ராசிபலன்

கும்பம் இன்றைய ராசி பலன்

அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் ஆகிய நட்சத்திரங்களுக்கு இன்றைய ராசி பலன்கள்

கும்பராசிக்காரர்களே..!

புதிய முயற்சிளைப் பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். மாலையில் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு இளைய சகோதரரால் சங்கடங்கள் ஏற்படும். தாயாரின் உடல்நலனில் கவனம் செலுத்துவது அவசியம் ஆகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சரபேஸ்வரரை வழிபட சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.

kumba rasi palan, kumba rasi palan today

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்

கிரீம் மற்றும் வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 7

கும்ப ராசிக்காரரின் பொதுப்பலன்

ஒரு காரியத்தை இவர்களிடம் ஒப்படைத்தால் அது முடிந்து விடும் என நினைத்துக் கொள்ளலாம். கண்ணும் கருத்துமாக இருந்து அந்த வேலையை செய்து முடிப்பார்கள். யாருடைய பிரச்னையிலும் தேவையின்றி மூக்கை நுழைக்க மாட்டார்கள். கும்ப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தின் மீது அதிக பற்றுதல் இருக்கும். தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், மனைவி, பிள்ளைகள் மேல் அதிக பாசம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

kumba rasi palan, kumba rasi palan today

இவர்கள் அன்பும், சாந்தமும், அமைதியான தோற்றமும் கொண்டவர்கள். நியாய அநியாயங்களை யாருக்கும் பயமின்றி எடுத்துரைப்பார்கள். சொன்ன சொல் தவறாதவர்கள். நியாவாதிகள். எனினும் அதிகம் பிடிவாதம் கொண்டவர்கள். இவர்கள் மனதை ஒரே நிலையில் கட்டுப்படுத்தக்கூடிய மனப் பக்குவம் கொண்டவர்கள். தனக்குப் பிடித்தவர்களிடம் நெருங்கிப் பழகும் இவர்கள் பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் கூட பார்க்க மாட்டார்கள். எவ்வளவு பெரிய பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து இருந்தாலும் பிடிக்கவில்லை என்றால் தூக்கி எறிவார்கள்.

கும்ப ராசிக்காரகள் உண்மை பேசுவதையே குறிக்கோளாகக் கொண்டவர்கள். தவறு செய்பவர்களை கண்டால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கண்டிப்பார்கள். தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடுவதில் வல்லவர்கள். பரந்த நோக்கம் கொண்டவர்களாதலால் தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கு தானமளிப்பார்கள்.

Updated On: 11 Aug 2023 6:38 AM GMT

Related News