/* */

kumba rasi nakshatra-கும்பராசி நட்சத்திரங்கள் என்ன? அவங்க குணம் என்ன? தெரிஞ்சுக்கங்க..!

கும்ப ராசிக்கு நட்சத்திரங்கள் என்ன? அவர்களின் பொதுவான குணங்கள் எப்படி இருக்கும் என்று பாப்போம் வாங்க.

HIGHLIGHTS

kumba rasi nakshatra-கும்பராசி நட்சத்திரங்கள் என்ன? அவங்க குணம் என்ன? தெரிஞ்சுக்கங்க..!
X

kumba rasi nakshatra-கும்ப ராசி 

kumba rasi nakshatra

குடம் போன்ற அமைப்பில் உள்ளதே கும்பம். குடத்துக்குள் இருப்பதை வெளியில் இருந்து பார்த்தால் எதுவும் தெரியாது. அதைப்போலவே கும்ப ராசிக்காரரும் பல விஷயங்களை உள்ளத்துக்குள் மறைத்து வைத்துக்கொள்வார்கள். அவர்களோடு பழகும்போது மட்டுமே முழுமையாக அவர்களின் குணங்களை பிறர் அறிய முடியும். கும்ப ராசிக்காரரிடம் பல திறமைகள் இருந்தாலும், சரியான முறையில் அதை வெளிப்படுத்தத் தெரியாது. சரியான தூண்டுதல் இருந்தால் மட்டுமே அவர்களால் திறமைகளை வெளிப்படுத்த முடியும்.

பிள்ளைகளால் உங்கள் அந்தஸ்து உயரும். 5-ம் இடத்துக்கு உரிய புதனே உங்களின் 8-ம் இடமான கன்னிக்கும் அதிபதி என்பதால், உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நீண்ட ஆயுள் உண்டு. ஜீவன ஸ்தானமாகிய 10-ம் இடம் விருச்சிகம். அதன் அதிபதி செவ்வாய். ஜோதிடம், மாந்த்ரீகம் போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவீர்கள்.

kumba rasi nakshatra


கெமிக்கல், மருந்துப் பொருட்கள் தயாரிப்பு போன்ற துறைகளில் பணிபுரிவீர்கள். 11-ம் இடம் லாப ஸ்தானம் ஆகும். கோதண்ட குரு என்னும் தனுசு குரு அந்த இடத்தின் அதிபதி என்பதால், அரசாங்கம் தொடர்பான தொழில்களில் ஒப்பந்ததாரராக இருந்து தொழில் செய்வீர்கள். எதிர்பாராத வகையில் மொத்தமாகப் பணம் வரும். அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தோடு தொடர்புடையவர்களால் அதிக லாபம் பெறுவீர்கள்.

இந்த ராசியில் பிறந்த நீங்கள் எல்லா சக்திகளும் நிறைந்த ஆலயத்துக்குச் செல்லும்போது, இன்னும் பல பெரிய மாற்றங்கள் உங்கள் வாழ்வில் நிகழும். அப்படிப்பட்ட ஆலயமே கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயம்.

அமுதக் கும்பம் ஈசனின் திருவிளையாடலால் மகாமகக் குளத்தில் அமுதமாகக் கொட்டியது. ஈசன் அந்த தலத்தின் மண் எடுத்து தனது அருள் நீரைப் பொழிந்து அதைப்பிசைந்து லிங்க உருவம் செய்தார். அந்த ஆதிலிங்கத்தினுள் பரமசிவன் பெருஞ்சோதி வடிவமாக உட்புகுந்தார்.

கும்பம் கும்பேஸ்வரர் ஆனது. பிரம்ம சிருஷ்டிக்கு முற்பட்டதால் ஆதிகும்பேஸ்வரர் எனவும், இன்னும் பல்வேறு திருநாமங்களோடும் பல யுகாந்திரங்களுக்கு முன்பு தோன்றிய கும்பேசுவரர் இன்றைக்கும் பேரருள் புரிகிறார். அம்பிகையின் திருநாமம் சர்வ மங்களங்களையும் அருளும் மங்களாம்பிகை ஆகும்.

kumba rasi nakshatra

கும்பராசியைச் சேர்ந்தவர்கள் புரிந்து ஈசனை தரிசித்து வாருங்கள்.

அவிட்டம் 3, 4-ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்கள் இதில் அடங்கும். கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம், கும்பம் ராசி சதயம் நட்சத்திரம், கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரங்களின் பொதுவான குணங்களை தனித்தனியே கீழே தந்துள்ளோம்.

அவிட்டம் குணம்

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடமையில் ஆர்வம் கொண்டவராகவும், கம்பீரமானவராகவும், தைரியசாலியாகவும், செல்வாக்கு மிக்கவராகவும், முன்கோபியாகவும், மனைவியை நேசிப்பவராகவும் இருப்பார்கள்.

சதயம் குணம்

கும்ப ராசி சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொறுமைசாலி யாகவும், வசீகரனமானவராகவும், நட்புக்காக செயல்படுவராகவும், முன்யோசனை கொண்டவராகவும், ஒழுக்கமானவராகவும், திறமையாக செயல்படுபவராகவும், செல்வந்தராகவும் இருப்பார்கள்.

பூரட்டாதி குணம்

கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழிலில் ஆர்வம் மிக்கவராகவும், மன திடமானவராகவும், பலசாலியாகவும், சுகபோகியாகவும், பழக இனியவராகவும், குடும்பத்தை நேசிப்பவராகவும் இருப்பார்கள்.

Updated On: 11 Aug 2023 6:10 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி