/* */

Kubera Deepam: வீடு நிறைய செல்வம் சேரணுமா? வியாழக்கிழமை மறக்காமல் இந்த விளக்கேற்றுங்க.

செல்வம் பலமடங்கு பெருகவும், எப்போதும் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கவும், நாம் முழு மனதுடன் செய்ய வேண்டிய ஒரு விசேஷ விளக்கு பூஜை உள்ளது

HIGHLIGHTS

Kubera Deepam: வீடு நிறைய செல்வம் சேரணுமா? வியாழக்கிழமை மறக்காமல் இந்த விளக்கேற்றுங்க.
X

குபேர விளக்கு 

என்ன தான் அலைந்து திரிஞ்சு சம்பாதித்தாலும் வீட்டுல காசு தங்க மாட்டேங்குது. கடன் வாங்கி தான் காலத்தை தள்ள வேண்டிருக்கு. எப்ப தான் இந்த நிலைமை மாறுமோ என்று பலர் புலம்பி தள்ளுவதை கேட்டிருப்போம், அல்லது நாமே கூறியிருப்போம்.

இனி இப்படி புலம்பத் தேவையில்லை. இந்த விளக்கை வீட்டில் வாங்கி வைத்து வியாழக்கிழமை தீபம் ஏற்றி வைத்தால் போதும். உங்களது வீட்டில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். வீட்டில் தரித்திரம் நீங்கவும், தண்ட செலவை குறைக்கவும், சம்பாதித்த காசு தங்கவும் எந்த விளக்கை ஏற்ற வேண்டும்?

செல்வம் பலமடங்கு பெருகவும், தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கவும், நாம் முழு மனதுடன் செய்ய வேண்டிய ஒரு விசேஷ விளக்கு பூஜை உள்ளது.


செல்வச்செழிப்பான கடவுள் குபேர கடவுள். அவர் மற்ற கடவுள்களின் செல்வங்களை எல்லாம் பாதுகாத்து இரட்டிப்பாக பெருக்கி கொடுப்பார். குபேர கடவுளிடம் மட்டுமே செல்வம் குறையாது பெருகிக் கொண்டே இருக்கும். இவ்வாறு நம்மிடமும் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கவும் நம்மிடம் இருக்கும் செல்வத்தை குபேர கடவுள் பாதுகாத்து அதனை பல மடங்காக பெருக்கி கொடுக்கவும் நாம் குபேரருக்கு செய்ய வேண்டிய ஒரு உகந்த வழிபாடுதான் லஷ்மி குபேர விளக்கு பூஜை. வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இந்த விளக்கினை ஏற்றி வழிபடலாம்.

செல்வத்தின் அதிபதியாக குபேரர் விளங்குகிறார். அவரை நாம் வணங்கி வர அவரின் அருள் கிடைத்து வாழ்வில் வளம் பெறலாம். அவரின் அருள் பெற குபேரர் விளக்கில் தீபம் ஏற்றி வழிபடலாம். குபேர விளக்கை ஏற்ற சரியான தினம் வியாழக்கிழமை. அன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணிக்குள் இந்த குபேர விளக்கை ஏற்றி பூஜை செய்வது உகந்தது.

குபேரருக்கு விருப்பமான வியாழக்கிழமை தினத்தில் வீட்டை சுத்தம் செய்து அன்று மாலை வீட்டின் வாசலில் செம்மண் பட்டை இட்டு அதன் மீது பச்சரிசி மாவில் கோலம் போட வேண்டும். வாசல் நிலைப்படிக்கு சந்தனம் தெளித்து, மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். அதன் பின்னர் புள்ளி இல்லாத ஒரு எலுமிச்சைப் பழத்தை எடுத்து, அதை இரண்டாக நறுக்கி ஒரு துண்டில் மஞ்சள், மற்றொரு துண்டில் குங்குமம் தடவி, நிலைப்படிக்கு இருபுறமும் ஒவ்வொன்றை வைக்கவும். அதன் பின் நிலைப்படியின் இருபக்கமும் பூக்களை வைக்கவும்.

முதலில் குபேர விளக்கிற்கும் குபேர விளக்கு வைக்கும் மனை அல்லது தட்டிற்கும் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். பிறகு குபேர விளக்கு வைக்கும் தட்டில் சிறிதளவு பச்சரிசியை வைத்து குபேரருக்கு விசேஷமான எண் 5 என்பதால் ஐந்து ரூபாய் நாணயத்தை பச்சரிசியில் வைக்க வேண்டும்.


குபேர விளக்கு ஏற்றும் முறை

விளக்கு ஏற்றும் போது வீட்டினுள், வாசலின் முன் நின்றபடி, நமது இடது புறத்தில், ஒரு மரப்பலகை அல்லது தட்டில்குபேர விளக்கை வைத்து, மஞ்சள் குங்குமம் இட்டு, நல்லெண்ணெய் ஊற்றி, இரண்டு திரிகளை எடுத்து, ஒன்றாக சேர்த்து ஒரு திரியாக்கி குபேர விளக்கில் போடவும். பின்னர் வீட்டில் எப்போதும் வீட்டில் விளக்கேற்றும் பூஜை அறையில் விளக்கேற்றிய உடன், குபேர விளக்கிலும் தீபத்தை ஏற்ற வேண்டும்.

குபேரன் காயத்ரி மந்திரம்

குபேர தீபத்தை குபேரன் காயத்ரி மந்திரம் சொல்லிக் கொண்டே ஏற்றலாம்.

ஓம் யக்ஷராஜாய வித்மஹே

வைஸ்ரவ ணாய தீமஹி!

தந்நோ குபேர ப்ரசோதயாத்

இப்படி செய்வதால் நமக்கு குபேரரின் அருள் கிடைத்து குடும்பத்தில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். குபேர விளக்கை தினமும் பூஜை அறையில் ஏற்றி வரலாம். குபேரருக்கு உகந்த திசை வடக்கு. ஆகையால் பூஜை அறையில் வடக்கு திசை நோக்கி ஏற்றவேண்டும்

நெய் தீபம் குபேர விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து குபேர திரியினால் அதாவது குபேரருக்கு உகந்த நிறம் பச்சை. அதனால் பச்சை நிறத்தில் உள்ள திரியால் குபேர விளக்கு ஏற்றினால் மிகவும் சிறந்த பயனளிக்கும். பச்சை நிற தரி இல்லை எனில் பஞ்சு திரி வைத்தும் விளக்கு ஏற்றலாம்.

விளக்கைச் சுற்றி வாசனை மலர்கள் வைக்க வேண்டும். குபேர விளக்கை ஏற்றிய பின்னர் நம் வீட்டின் நிலை வாசலில் இடதுபுறம் வடக்கு நோக்கி வைக்க வேண்டும்.

நிலைவாசலில் தீபம்

குபேர விளக்கை நிலை வாசலில் ஏற்ற வேண்டுமென்றால் குபேரர் மற்ற கடவுளின் செல்வங்களுக்கு எல்லாம் பாதுகாவலர். அவரை வாசலில் வைத்து பூஜித்தால் நமது செல்வத்திற்கும் பாதுகாவலாக இருப்பார். விளக்கை ஏற்றும்போது குபேர மந்திரத்தை மனதில் உச்சரித்துக் கொண்டு ஏற்றினால் மிகவும் நல்லது

குபேர மந்திரத்தை மனதில் பக்தியுடன் உச்சரித்து கொண்டே இந்த விளக்கை ஏற்றி வர உங்கள் குடும்பத்தில் பண வரவு இருந்து கொண்டிருக்கும்.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 5 லிருந்து 8 மணிக்குள் உங்கள் வீட்டு நிலை வாசற்படியில் இவ்வாறு வடதிசை நோக்கி குபேர விளக்கு ஏற்றி வர உங்கள் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும். தொடர்ந்து குபேர விளக்கை ஏற்றி வழிபட்டு வர குடும்பத்தில் இருந்த துன்பங்கள், கடன் பிரச்சினை, சங்கடங்கள் அனைத்தும் நீங்கி நல் வாழ்வு கிடைக்கும்.

வளம் தரும் இந்த விளக்கினால் ஏற்படும் நன்மைகள்:

  • பொருளாதாரத்தில மேன்மை கிடைக்கும்
  • வீட்ல நிம்மதி , மகிழ்ச்சி, அமைதி அனைத்தும் கிடைக்கும்.
  • செல்வ வளம் மட்டுமில்லாம மற்ற வளங்களும் நிறைந்து காணப்படும்.
  • வீட்டில் உள்ள வறுமை, துன்பங்கள் நீங்கி சுகவாழ்வு கிடைக்கும்.
  • கடன் பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வந்து, பண வரவை ஏற்படுத்தும்.
  • வீட்டில் நிறைவான, நீங்காத அதிர்ஷ்டம் எப்போதும் தங்கும்.

நம்பிக்கை உள்ளவர்கள் இந்த லட்சுமி குபேர விளக்கினால் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் வீடு ஐஸ்வர்யமும், செல்வங்களும் நிறைந்த வீடாக மாறும்.

Updated On: 10 Aug 2023 6:10 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  2. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  3. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  4. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  5. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  7. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  9. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்