சபரிமலையில் ஒலிக்கும் 'ஹரிவராசனம்' பாடல் அர்த்தம் தெரிஞ்சுக்குங்க...!

ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி, நாம் அனைவருமே ரசித்து கேட்கும் பாடல்தான் ‘ஹரிவராசனம்’. அதிகாலையில், இந்த பாடலை ஒருமுறை கேட்டுவிட்டால், நாள் முழுவதும் இந்த பாடல் வரிகள் நம் மனதுக்குள் ரீங்காரமிடும். பாடல் வரிகள் சொல்லும் விளக்கம் தெரிந்துகொள்ளுங்கள்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சபரிமலையில் ஒலிக்கும் ஹரிவராசனம் பாடல் அர்த்தம் தெரிஞ்சுக்குங்க...!
X

தினந்தோறும் ‘ஹரிவராசனம்’ பாடுவோம்; சபரிமலை வாசனின் அருளை பெறுவோம். 

கார்த்திகை மாதம், முருக பெருமானின் சிறப்புக்குரிய மாதமாக இருந்தாலும், சபரிமலை ஐயப்ப சுவாமியை வழிபட்டு கொண்டாடும் மாதமாகவும் உள்ளது. சபரிமலை வாசனை வழிபடும் பக்தி பாடல்களை கேட்டாலே மனம் தித்திக்கும். 'பள்ளிக்கட்டு சபரிமலைக்கு, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை' பாடலை கேட்டால், பக்தி பரவசத்தில் உடல் பரபரக்கும். 'சன்னதியில் கட்டுக்கட்டி வந்தோமப்பா ஐயப்பா' பாடலை கேட்டால், மனம் பக்தியில் துள்ளிக் குதிக்கும். அதே போல், தெய்வ குரலோன் ஜேசுதாஸ் குரலில், 'ஹரிவராசனம்' பாடல் ஒலித்தால், மனம் பக்தியில் ஒடுங்கி போகும். மெய்மறந்து, பக்தியில் மனம் கரைந்து போகும். தினமும், சபரிமலையில் இரவில் ஒலிக்கும் இந்த பாடலின் வசீகரமும், மயக்கமும் வார்த்தைகளில் வர்ணிக்க இயலாதவை.

அந்த 'ஹரிவராசனம்' பாடல் வரிகளின் விளக்கம் தெரிந்துகொள்வோம்.

ஹரிவராசனம் விஸ்வமோகனம்

ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்

அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

அரியாகிய திருமாலின் ஆசிகள் நிறைந்தவர், பேரண்டத்தை இயக்குபவர், அரியின் அருளின் சாராம்சமாக இருப்பவர், உமது தெய்வீகப் பாதங்களை வணங்குகிறோம். தீயசிந்தனைகளை அழிப்பவரே, இந்த அண்டத்தை ஆள்பவரே, அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.


சரணகீர்த்தனம் பக்தமானஸம்

பரணலோலுபம் நர்த்தனாலயம்

அருணபாசுரம் பூதநாயகம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணடைவோரின் பாடலை விரும்புபவர், பக்தர்களின் மனதில் நிறைந்தவர், பக்தர்களை ஆள்பவர், ஆடலை விரும்புபவர். உதிக்கும் சூரியன் போல பிரகாசிப்பவரே உயிர்களின் வேந்தரே, அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

பிரணயசத்யகம் பிராணநாயகம்

ப்ரணதகல்பகம் சுப்ரபாஞ்சிதம்

பிரணவமந்திரம் கீர்த்தனப்பிரியம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

உண்மையின் உணர்வாக இருப்பவர், எல்லா உள்ளங்களின் விருப்பமாக இருப்பவர், பேரண்டத்தைப் படைத்தவர், சுடரொளி வீசும் ஒளிவட்டமாய் திகழ்பவர். 'ஓம்' என்னும் மந்திரத்தின் ஆலயம் நீங்கள்; பக்தர்களின் பாடல்களை விரும்புபவர் நீங்கள். அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

துரகவாகனம் சுந்தரானனம்

வரகதாயுதம் தேவவர்ணிதம்

குருகிருபாகரம் கீர்த்தனப்பிரியம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

குதிரையை வாகனமாகக் கொண்டவரே, அழகிய திருஉருவம் கொண்டுள்ளவரே, ஆசிர்வதிக்கப்பட்ட தண்டாயுதத்தை ஏந்துபவர், ஒய்யாரமானவர்; என்னுடைய குரு நீங்கள். பக்தர்களின் பாடல்களை விரும்புபவரே, அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.


திரிபுவனார்ச்சிதம் தேவதாத்மகம்

திரிநயன பிரபும் திவ்யதேசிகம்

திரிதசப்பூஜிதம் சிந்திதப்பிரதம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

மூவுலகாலும் வணங்கப்படுபவர், கடவுளர்களின் ஆன்மாவாகத் திகழ்பவர், சிவனின் உருவமாக இருப்பவர், தேவர்களால் வணங்கப்படுபவர்; உங்களைத் தினந்தோறும் மூன்றுமுறை வணங்குகிறோம். எங்கள் மனம் நிறைந்தவர் நீங்கள்; அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

பவபயாபகம் பாவுகாவகம்

புவனமோகனம் பூதிபூசணம்

தவளவாகனம் திவ்யவாரணம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

அச்சத்தை அழிப்பவர், செழிப்பை கொணர்பவர், இந்த அண்டத்தை ஆள்பவர், திருநீற்றை ஆபரணமாக அணிந்தவர். வெள்ளை யானையை வாகனமாக கொண்டவர் நீங்கள். அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

களம்ருதுஸ்மிதம் சுந்தரானனம்

களபகோமளம் காத்ரமோகனம்

களபகேசரி வாஜிவாகனம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

இனிமையான, மிருதுவான புன்முறுவல் உடையவரே, அழகிய திருமுகத்தை உடையவரே, இளமையும், மென்மையும் உடையவர். சொக்க வைக்கும் பேரழகையும், யானை, சிங்கம், குதிரை போன்றவற்றை வாகனமாகவும் கொண்டவர் நீங்கள். அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரிதம்

ச்ருதிவிபூஷணம் சாதுஜீவனம்

ச்ருதிமனோகரம் கீதலாலசம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

பக்தர்களால் நேசிக்கப்படுபவர், பக்தர்களின் வேண்டுதல்களை பூர்த்தி செய்பவர், வேதங்களால் துதிக்கப்படுபவர், ஞானியரை ஆசிர்வதிப்பவர். வேதங்களின் சாராம்சம் நீங்கள்; தெய்வீக இசையை ரசிப்பவர் நீங்கள். அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

Updated On: 25 Nov 2022 6:50 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  தேனியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்.. நிரந்தர தீர்வுக்கு செய்ய...
 2. தேனி
  தேனி மாவட்டத்தில் இரண்டாம் போக நெல் நடவுப் பணிகள் நிறைவு..
 3. மதுரை மாநகர்
  இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு...
 4. விராலிமலை
  கீரனூரில் இருந்து புலியூருக்கு பேருந்து வசதி: ஜனநாயக மாதர் சங்கம்...
 5. துறைமுகம்
  கடற்படை தினத்தையொட்டி போர்க் கப்பல்களை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்
 6. சென்னை
  திருநெல்வேலி எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவு.. ஆதிதிராவிடர் மாநில ஆணையம்...
 7. புதுக்கோட்டை
  வருவாய்த்துறையினரை கண்டித்து சிபிஎம் கட்சியினர் காத்திருப்புப்...
 8. சென்னை
  தகுதி இல்லாதவர்களுக்கு அரசு வீடுகள் ஒதுக்கீடு.. அதிகாரிகள் மீது...
 9. சிவகாசி
  விபத்தை ஏற்படுத்திய பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்
 10. இந்தியா
  விழிஞ்சம் துறைமுகத்தில் மத்தியப் படை பாதுகாப்பு கோரி அதானி குழுமம்...