/* */

Karuvalarcheri-'என் கருவுக்கு உரு கொடு தாயே'..! கருவளர்சேரி அகிலாண்டேஸ்வரி..!

குழந்தை இல்லாதவர்கள் குழந்தைவரம் கேட்டும் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் கிடைக்கவும் கருவளர்சேரி அகிலாண்டேஸ்வரி அம்மனை வணங்குகிறார்கள்.

HIGHLIGHTS

Karuvalarcheri-என் கருவுக்கு உரு கொடு தாயே..! கருவளர்சேரி அகிலாண்டேஸ்வரி..!
X

Karuvalarcheri-கருவளர்சேரி அகிலாண்டேஸ்வரி ஆலயம்.(கோப்பு படம்)

Karuvalarcheri

வாழ்க்கையில் எல்லா வசதிகளும் கிடைத்தாலும் பிள்ளைவரம் என்பது கிடைக்கத்தகாத ஒன்றாக மாறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் இளையோரை இடைவிடாது ஆட்டிவைப்பது ‘குழந்தைப்பேறின்மை’. நமது உணவுப்பழக்கத்தால் இளம்வயதிலேயே சர்க்கரை, உடற்பருமன் என்று பல நோய்கள் ஆட்டிப்படைக்கிறது.


Karuvalarcheri

இந்த பெயரை கவனித்தாலே இதன் பொருள் புரியும். கரு-வளர்-சேரி. குழந்தை பிறப்புக்கான கருவினை வளர்க்க அருள் புரியும் அன்னை குடியிருக்கும் ஊர் என்பது தெளிவாகும்.

மடி நிறைய பணம் வேண்டாம். மடி நிறைக்க மகவு வேண்டும் என்று மன்றாடி நிற்கும் தம்பதியினருக்கு கருவாய் உருமாறி குழந்தைபாக்கியம் அருள்கிறாள் அகிலாண்டேஸ்வரி. கும்பகோணம் அருகே கருவளர்சேரி என்னும் ஊரில் அகிலாண்டேஸ்வரியாய் குடிகொண்டிருக்கிறாள் இந்த கருவளர்த்தநாயகி.

குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் வழிபடவேண்டிய கோவில்களில் திருக்கருகாவூருக்கு அடுத்த இடம் கருவளர்ச்சேரிக்குத்தான். அகஸ்தீஸ்வரர் சமேதராக அமர்ந்திருக்கும் அகிலாண்டேஸ்வரியை மக்கள் ‘கருவளர்த்த நாயகி’ எனக் கொண்டாடுகிறார்கள்.

Karuvalarcheri

இங்கு வந்து வழிபடுகின்ற தம்பதிகளுக்கு உடல்ரீதியான பிரச்னைகள் தீர்க்கப்பட்டு குழந்தை வரம் கிடைக்க அருள்கிறாள்,அன்னை அகிலாண்டேஸ்வரி. கர்ப்பமுற்ற பெண்களும் இங்கு வந்து தாயை வழிபட்டால், சிக்கலில்லாத சுகப்பிரசவம் நிகழும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கையாக இன்றும் நிலவி வருகிறது.

திருமணமாகி பலநாட்களாக குழந்தையின்றி தவிக்கும் பெண்கள், கருவளர்சேரி கோவிலுக்கு வந்து அகிலாண்டேஸ்வரியை மனதில் பக்தியுடன் மன்றாடி வேண்டிக் கொண்டு, படிகளை தூய நெய்யால் மெழுகி படி பூஜை செய்ய வேண்டும்.


Karuvalarcheri

பின்னர், படிகளுக்கு நெய் தீபம் ஏற்றி அன்னையை வழிபட வேண்டும். பின்னர் அன்னையின் சந்நிதியில் பூஜை செய்த மஞ்சள் கிழங்கினை வீட்டுக்கு கொண்டு வந்து அதைத் தொடர்ந்து பூசிக் குளித்து வர உடல் கோளாறுகளை நீக்கி மகப்பேறை அருள்கிறாள் அன்னை அகிலாண்டேஸ்வரி.

கர்ப்பிணிகளாக இருக்கும் பெண்களும் இந்த வேண்டுதலை செய்யலாம். அன்னையின் அருளை பெறுகின்ற பக்தைகள், குழந்தைப் பேறு பெற்று கைமாறாக வளையல், தொட்டில் என்று வாங்கிவந்து அன்னைக்கு சமர்ப்பிக்கின்றனர்.

கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் செல்லும் வழியில் மருதாநல்லூரில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கருவளர்சேரி. அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான ஏனாதிநாத நாயனார் பிறந்து, வளர்ந்து, முக்தி பெற்ற தலமான ஏனநல்லூரும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Karuvalarcheri


திருமணமாகி பலநாட்களாக குழந்தையின்றி தவிக்கும் பெண்கள், கருவளர்சேரி திருத்தலத்திற்கு வந்து அகிலாண்டேஸ்வரியை மனதில் மாசற்ற பக்தியுடன் வேண்டிக் கொண்டு, படிகளை தூய நெய்யால் மெழுகி படி பூஜை செய்ய வேண்டும்.

சுவாமி : அகஸ்தீஸ்வரர் சுவாமி.

அம்பாள் : அகிலாண்டேஸ்வரி(கருவளர்த்த நாயகி).

தலச்சிறப்பு :

குழந்தை பேறு வேண்டுபவர்கள் இக்கோவிலில் வழிபடலாம். இங்குள்ள அம்மனை கருவளர்த்த நாயகி என்று மற்றொரு பெயரும் உண்டு. இத்தலத்தில், காகபுஜண்டர் யாகக்குழுவினர், உலகநன்மைக்காக காகபுஜண்டர் ஜீவநாடியில் அருளியபடி, இத்தலத்தில் லோபமுத்ராதேவிக்கும் அகஸ்திய மாமுனிவருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

Karuvalarcheri


இதை முன்னிட்டு நடந்த வேள்வியில், கர்நாடகாவில் உள்ள தலைக்காவிரி உற்பத்தியாகும் இடத்தில், வெள்ள உபாதைகளை கருதி கிழக்கு முகமாக இருந்த நந்தியை மேற்கு முகமாக பிரதிஷ்டை செய்துள்ளனர். இதனால் இருமாநிலத்திற்கும் பஞ்சம் ஏற்பட காரணமாயிற்று.

மீண்டும் காவிரியில் தேவையான நீர் கிடைக்கவும், இரண்டு மாநிலங்களும் செழிப்புடன் திகழவும் யாகம் செய்து, மீண்டும் பழையபடி நந்திபெருமானை கிழக்கு முகமாக பிரதிஷ்டை செய்ய வேண்டி சங்கல்பம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு யாகவேள்வியின் போது திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


நடைதிறப்பு : காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

Karuvalarcheri

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி ,

கருவளர்ச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம். போன் : 93448 95538

Updated On: 21 Sep 2023 7:27 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  2. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  3. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  4. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  5. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  6. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  7. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...
  8. கலசப்பாக்கம்
    மக்கள் கூடும் இடத்தில் பசுமை நிழல் பந்தல் அமைப்பு
  9. வந்தவாசி
    தவளகிரி வெண்குன்றம் மலையில் தீ விபத்து
  10. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?