/* */

சஷ்டி கவசம் படிங்க.... கவலைகள் தீரும்.... அருள்புரிவான் முருகன்...படிங்க.....

kandha sasti kavasam lyrics in tamil பக்தி மார்க்கம் என்பது அவரவர்களின் விருப்பத்தினைப் பொறுத்தது. ஆன்மீகம் என்பது ஆர்வம் உள்ளோரிடம் அதிகம் இருக்கும். அந்த வகையில் கந்தசஷ்டிகவசத்தினை படிப்பதால் என்ன நன்மை ... .படிங்க...

HIGHLIGHTS

சஷ்டி கவசம் படிங்க.... கவலைகள் தீரும்....  அருள்புரிவான் முருகன்...படிங்க.....
X

சேலம் மாவட்டத்தில் புத்திரகவுண்டன்பாளையம் என்னுமிடத்தில்  ஆசியாவிலேயே மிக உயரமான முருகன் சிலை  146  அடி அமைக்கப்பட்டுள்ளது . (கோப்பு படம்)


kandha sasti kavasam lyrics tamil



முருகா....முருகா....முருகா.... வேல்முருகா...வேல்முருகா... வேல்முருகா... வேல்முருகா...சரணம்..சரணம்...

kandha sasti kavasam lyrics in tamil

கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்வோருக்கு எந்த கஷ்டமும் துன்பங்களும் பனி போல்விலகுவதாக அனுபவத்தில் கண்டவர்கள் உணர்த்தியுள்ளனர். அந்த வகையில் தினமும் காலையில் குளித்த பின் பக்தியுடன் சஷ்டி கவசத்தினை பாராயணம் செய்வோருக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. நீங்களும் படிச்சு பாருங்களேன்?

சஷ்டி விரதம் மேற்கொள்ளும் முறை

கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக கருதுகின்றனர்.

முருகன் சூரனை அழித்தல்

ஆறு நாட்கள் நடைபெற்ற சூர சம்காரத்தின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.

கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூரசம்ஹாரமாகும்.

kandha sasti kavasam lyrics in tamil


திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி மலைக்கோயில் தோற்றம் (கோப்பு படம்)

kandha sasti kavasam lyrics in tamil

கந்த சஷ்டி விரதம்

இந்த ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர். பகற்பொழுதில் உணவருந்தாமல், இரவில் பால், பழம் மட்டும் அருந்தி ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.

முருகனுக்கு உரிய கோயில்களாக தமிழகத்தில் அறுபடை வீடுகள் உள்ளன. இந்த ஆறு கோயில்களுக்கும் சென்று வணங்குவோர்க்கு தேவையான அனைத்து சுபிட்ஷங்களையும் முருகப்பெருமான் அருள்வதாக ஐதீகம். அந்த வகையில் பக்தர்களில் பெரும்பாலானோர் இ ந்த அறுபடைவீடுகளையும் வருடத்தில் ஒரு நாள் தரிசிப்போரும் உண்டு.

மருதமலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருச்செந்துார், பழனி, உள்ளிட்ட மலைக்கோயில்களில் வீற்றிருக்கும் முருகன் தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதால் வருடந்தோறும் இக்கோயில்களுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருவது இதன் சிறப்பாக கருதப்படுகிறது.

ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூசம் விழாவானது அனைத்து முருகன் கோயில்களிலும் மிக மிக சிறப்பாக கொண்டாடப்படும். அன்றைய தினம் பக்தர்கள் காவடி எடுத்து கடவுளுக்குநேர்த்திக் கடனைச் செலுத்துவர். பழனி, திருத்தணி,திருப்பரங்குன்றம், மருதமலை உள்ளிட்ட அனைத்து முருகன் திருக்கோயில்களிலும் தைப்பூச விழாவானது சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

kandha sasti kavasam lyrics in tamil


மதுரை அருகேயுள்ள திருப்பரங்குன்றம் கோயிலின் முகப்பு தோற்றம் (கோப்பு படம்)

kandha sasti kavasam lyrics in tamil

தமிழர்களின் "காக்கும் கடவுளான" "கந்தனாகிய" "முருகப்பெருமானுக்கு" பல பாடல்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. அப்படி முருகப்பெருமானின் மீது இயற்றப்பட்டு அனைவராலும் பரவலாக அறியப்பட்ட பாடல் தான் "கந்த சஷ்டி கவசம்".

கந்த சஷ்டி கவசம் என்பது முருகப்பெருமானை போற்றி பாடும் கவசம் ஆகும். தேவார சுவாமிகள் இதை நமக்கு அருளினார். கந்த சஷ்டி கவசம் முதன் முதலில் திருச்செந்தூரில் குடிகொண்டிருக்கும் முருகப் பெருமான் மீது பாடப்பட்டது என்று கூறப்படுகிறது. கந்த சஷ்டி கவசம் அதை முருகப்பெருமான் படத்தின் முன்பு நின்றோ அல்லது முருக பெருமான் கோவில்களிலோ அல்லது அறுகோண சக்கரத்தின் முன்போ பாடலாம்.

முருக பெருமானுக்கு உகந்த நாட்களான செவ்வாய்க்கிழமைகளிலும் சஷ்டி மற்றும் முருகனுக்கு உகந்த இதர நாட்களிலும் இந்த கவசத்தை பாடினால் அதிக பலன்களை பெறலாம். சஷ்டியில் விரதமிருந்து முருகப்பெருமானை வணங்கி கந்த சஷ்டி கவசம் அதை பாராயணம் செய்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்,

kandha sasti kavasam lyrics in tamil

காப்பு

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில்

பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்து ஓங்கும்;

நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர்

சஷ்டி கவசந்தனை.

குறள் வெண்பா

அமரர் இடர் தீர அமரம் புரிந்த

குமரன் அடி நெஞ்சே குறி..

kandha sasti kavasam lyrics in tamil


கோவை அருகேயுள்ள மருதமலை முருகன் கோயிலின் படி வழித்தோற்றம் (கோப்பு படம்)

kandha sasti kavasam lyrics in tamil

நூல்

சஷ்டியை நோக்கச் சரவணபவனார்

சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்

பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாடக் கிண்கிணியாட

மையல் நடம் செய்யும் மயில்வாகனனார்

கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து

வர வர வேலாயுதனார் வருக

வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலாய் எண்டிசை போற்ற

மந்திர வடிவேல் வருக வருக

வாசவன் மருகா வருக வருக

நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக

நீறிடும் வேலவன் நித்தம் வருக

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக

சரவணபவனார் சடுதியில் வருக

ரகணபவச ரரரர ரரர

ரிகண பவச ரிரிரி ரிரிரி

விணபவ சரவண வீராநமோ நம

நிபவ சரவண நிற நிற நிறென்

வசர ஹணபவ வருக வருக

அசுரர் குடிகெடுத்த ஐயா வருக

என்னையாளும் இளையோன் கையில்

பன்னிரண்டாயுதம் பாசங்குசமும்

பரந்த விழிகள் பன்னிர ண்டிலங்க

விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக

ஐயம் கிலியும் அடைவுடன் சௌவும்

உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்

கிலியும் சௌவும் கிளரொளி யையும்

நிலைபெற் றென் முன் நித்தமும் ஒளிரும்

kandha sasti kavasam lyrics in tamil


பழனி மலை முருகன் தங்கத் தேரில் உற்சாகமாக பவனி வரும் காட்சி (கோப்பு படம்)

சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்

குண்டலியாம் சிவகுகன் தினம் வருக

ஆறுமுகமும் அணிமுடியாறும்

நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்

பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலங்கு குண்டலமும்

ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்

பல்பூஷணமும் பதக்கமும் தரித்து

நன்மணி பூண்ட நவரத்தினமாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்

செப்பழகுடைய திருவயிறுந்தியும்

துவண்ட மருங்கில் சுடரொளிப்பட்டும்

நவரத்தினம் பதித்த நற்சீராவும்

இருதொடை யழகும் இணைமுழந்தாளும்

திருவடியதனில் சிலம்பொலி முழங்க

செககண செககண செககண செகண

மொக மொக மொகமொக மொக மொக மொகென

நகநக நகநக நகநக நகென

டிகுகுண டிகுகுண டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர

ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு

டகு டகு டிகு டிகு டங்கு டிங்குகு

விந்து விந்து மயிலோன் விந்து

முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ

மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும்

லாலா லாலா லாலா வேசமும்

லீலா லீலா லீலா விநோதனென்றும்

உன் திருவடியை உறுதியென்றெண்ணும்

என் தலைவைத்துன் இணையடி காக்க

என்னுயிர்க்குயிராம் இறைவன் காக்க

பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க

கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க

விதிசெவியிரண்டும் வேலவர் காக்க

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க

பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

முப்பத்திருபல் முனைவேல் காக்க

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க

என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க

மார்பை ரத்தின வடிவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவேலிருதோள் வளம் பெறக்காக்க

பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க

பழுபதினாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க

சிற்றிடையழகுற செவ்வேல் காக்க

நாணாங் கயிற்றை நல்வேல் காக்க

ஆண் குறியிரண்டும் அயில் வேல் காக்க

பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க

வட்டக் குதத்தை வல்வேல் காக்க

பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

ஐவிரலடியினை அருள் வேல் காக்க

கை களிரண்டும் கருணை வேல் காக்க

முன் கையிரண்டும் முரண்வேல் காக்க

பின்கை யிரண்டும் பின்னவள் இரக்க

நாவிற் சரஸ்வதி நற்றுணையாக

நாபிக் கமலம் நல்வேல் காக்க

முப்பால் நாடியை முனை வேல் காக்க

எப்பொழு தும்மெனை எதிர்வேல் காக்க

அடியேன் வசனம் அசைவுள நேரம்

கடுகவே வந்து கனகவேல் காக்க

வரும்பகல் தன்னில் வஜ்ரவேல் காக்க

அரையிருள் தன்னில் அணையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க

தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியினில் நோக்க

தாக்க தாக்க தடையறத் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட

பில்லி சூனியம் பெரும்பகை அகல

வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்

அல்லல் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழங்கடை முனியும்

கொள்ளிவாற் பேய்களும் குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரம்மராட்ச தரும்

அடியனைக் கண்டால் அலறிக கலங்கிட

இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்

எல்லிலு மிருட்டிரும் எதிர்ப்படு மன்னரும்

கனபூசை கொள்ளும் காளியோட னைவரும்

விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்

தண்டியக் காரரும் சண்டாளர்களும்

என் பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட

ஆனையடியினில் அரும்பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைகளென்பும்

நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்

பாவைகளுடனே பலகலசத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியப் பாவையும் ஒட்டியச் செருக்கும்

காசும் பணமும் காவுடன் சோறும்

ஓதுமஞ் சனமும் ஒருவழிப்போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

காலதூ தாள்ளெனைக் கண்டால் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய் விட்டலறி மதிகெட்டோடப்

படியினில் முட்டப் பாசக் கயிற்றால்

கட்டுடனங்கம் கதறிடக் கட்டு

கட்டியுருட்டு கால் கை முறியக்

கட்டு கட்டு கதறிடக் கட்டு

முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட

செக்கு செக்கு செதில் செதிலாக

சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர் வடிவேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி

தணலெரி தணலெரி தணலதுவாக

விடு விடு வேலை வெருண்டது ஓட

புலியும் நரியும் புன்னரி நாயும்

எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட

தேளும் பாம்பும் செய்யான் பூரான்

கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க

ஒளிப்புஞ் சுழுக்கும் ஒருதலை நோயும்

வாதம் சயித்தியம் வலிப்பு பித்தம்

சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் பிhதி

பக்கப்பிளவை படர்தொடை வாழை

கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

பற்குத்தரணை பருஅரையாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

நில்லாதோட நீயெனக்கு அருள்வாய்

ஈரேழுலகமும் எனக்குறவாக

ஆணும் பெண்ணும் அனைவரும் எ னக்காய்

மண்ணாள் அரசரும் மகிழ்ந்துறவாக

உன்னைத் துதிக்க உன்திருநாமம்

சரவணபவனே சைலொளிபவனே

திரிபுரபவனே திகழொளிபவனே

பரிபுரபவனே பவமொழிபவனே

அரிதிருமுருகா அமராபதியைக்

காத்துத் தேவர்கள் கடும் சிறை விடுத்தாய்

கந்தா குகனே கதிர்வேலவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை

இடும்பனை அழித்த இனியவேல் முருகா

தணிகாசலனே சங்கரன் புதல்வா

கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா

பழநிப் பதிவாள் பாலகுமரா

ஆவினன் குடிவாள் அழகிய வேலா

செந்தின்மா மலையுறும் செங்கல் வராயா

சமரா புரிவாழ் சண்முகத்தரசே

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

என்னா விருக்க யானுனைப் பாட

எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்

பாடினே னாடினேன் பரவசமாக

ஆடினே னாடினேன் ஆவினன் பூதியை

நேசமுடன் யான் நெற்றியில் அணியப்

பாச வினைகள் பற்றது நீங்கி

உன்பதம் பெறவே உன்னருளாக

அன்புடனிரஷி அன்னமும் சொன்னமும்

மெத்த மெத்தாக வேலா யுதனார்

சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்

வாழ்க வாழ்க வாரணத்துவசம்

வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை யடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீகுரு பொறுப்பதுன் கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவளாமே

பிள்ளையென் றன்பாய்ப் பிரியமளித்து

மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்

தஞ்சமென்றடியார் தழைத்திட வருள் செய்

கந்தசஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவராயன் பகர்ந்ததை

காலையில் மாலையில் கருத்துடனாளும்

ஆசாரத்துடன் அங்கம் துலக்கி

நேச முடனொரு நினைவதுமாகி

கந்தர் சஷ்டி கவச மிதனைச்

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்

ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு

ஓதியே செபித்து உகந்து நீறணிய

அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்

திசை மன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருளுவர்

மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திடும்

நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்

எந்த நாளுமீரெட்டாய் வாழ்வர்

கந்தர் கை வேலாம் கவசத்தடியை

வழியாய் காண மெய்யாய் விளங்கும்

விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்

பொல்லாதவரைப் பொடிப்பொடியாக்கும்

நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வசத்துரு சங்காரத்தடி

அறிந்தெனதுள்ளம் அஷ்டலெக்சுமிகளில்

வீரலட்சுமிக்கு விருந்துணவாக

சூரபத்மாவைத் துணித்தகையதனால்

இருபத்தேழ்வர்க்கு உவந்தமுதளித்த

குருபரன் பழனிக் குன்றினிலிருக்கும்

சின்னக் குழந்தை சேவடி போற்றி

எனைத் தடுத்தாட் கொள் என்றன துள்ளம்

மேவிய வடிவுறும் வேலவா போற்றி

தேவர்கள் சேனாபதியே போற்றி

குற மகள் மன மகிழ் கோவே போற்றி

திறமிகு திவ்விய தேகா போற்றி

இடும்பாயுதனே இடும்பா போற்றி

கடம்பா போற்றி கந்தா போற்றி

வெட்சி புனையும் வேலே போற்றி

உயர்கிரி கனகசபைக்கோர் அரசே

மயில் நடமிடுவோய் மலரடி சரணம்

சரணம் சரணம் சரவணபவஓம்

சரணம் சரணம் சண்முகா சரணம்..!

Updated On: 11 Dec 2022 8:47 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு