/* */

Jathaka porutham in tamil for marriage by rashi nakshatra-நட்சத்திர பொருத்தம் எப்படி இருக்கணும்?

திருமணத்தில் பொதுவாக பெண் நட்சத்திரத்தை வைத்தே ஒரு மணமகனுக்கு திருமணப் பொருத்தம் பார்ப்பது வழக்கம்.

HIGHLIGHTS

Jathaka porutham in tamil for marriage by rashi nakshatra-நட்சத்திர பொருத்தம் எப்படி இருக்கணும்?
X

Jathaka porutham in tamil for marriage by rashi nakshatra

பொதுவாக, திருமணம் என்றாலே பத்து பொருத்தம் பார்த்து தான் செய்து வைப்பார்கள். அவற்றில் நட்சத்திரப் பொருத்தமும் முக்கியமான ஒரு பொருத்தமாக பார்க்கப்படுகிறது. நட்சத்திரங்கள் மொத்தம் 27. ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களை கொண்டிருக்கும். அதன்படி, ஆண் நட்சத்திரத்திற்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்களும், பெண் நட்சத்திரத்திற்குப் பொருந்தும் ஆண் நட்சத்திரங்களும் இங்கு ராசிவாரியாக பார்ப்போம்.

1. தினப்பொருத்தம்

மணமகன் மற்றும் மணமகளின் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதற்கும்

அவர்களுக்குள் தினமும் சண்டைகள் வராமல் அன்பு பகிர்ந்து மகிழ்ச்சியுடன் இருப்பார்களா என்பதை தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் அவசியமாகும்

மேலும் தினம் என்றால் நட்சத்திரம் என்ற பொருள் உண்டு. இந்த பொருத்தத்தை நட்சத்திர பொருத்தம் என்றும் கூறுவர்


2. கணப்பொருத்தம்

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமா என்பதையும் மற்றும் அடிப்படை குணங்களில் ஒருவருக்கொருவர் அனுசரித்து நடந்துகொள்வதைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம்.

கணம் மூன்று வகைப்படும். தெய்வ கணம்,மனித கணம், மற்றும் ராட்சத கணம்.

மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களும் இந்த மூன்று கணத்தில் ஒரு கணத்திற்கு 9 நட்சத்திரங்கள் வீதம் அடங்கிவிடும்

3. மகேந்திரப்பொருத்தம்

திருமண வாழ்க்கையின் முக்கிய கட்டமான குழந்தை பேறு குறித்து கணிக்கப்படுவதுவே மகேந்திர பொருத்தமாகும்

புத்திர பாக்கியம் சிறப்பாக அமைய மகேந்திர பொருத்தம் அவசியமானதாக பார்க்கப்படுகிறது.

குழந்தை பாக்கியம் ஆயுள் விருத்தி சௌபாக்கியம் போன்றவற்றை தருவதாகும்.

Jathaka porutham in tamil for marriage by rashi nakshatra

4. ஸ்திரி தீர்க்கப் பொருத்தம்

திருமணமாகும் பெண்கள் வாழ்நாள் முழுவதும் தீர்க்க சுமங்கலியாக இருக்கவே பெரும்பாலானோர் விரும்புவார்கள்.

ஆகையால் தான் தீர்க்க சுமங்கலியாய் இருக்க இந்த பொருத்தம் பார்க்க படுகிறது

மேலும் பொருள் செல்வ சொல்வாக்கினை தருவது ஆகும்.

திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்க ஸ்த்ரி தீர்க்க பொருத்தம் உதவுகிறது.

மேலும் பெண்ணின் ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தினை ஆணின் நட்சத்திரம் வைத்து எப்படி மாறுபடுகிறது என்பதை பொருத்து பார்க்கபடுகிறது.


5. யோனி பொருத்தம்

யோனிப்பொருத்தம் சரியாக இருந்தால் தம்பதிகள் இருவரும் தாம்பத்திய உறவில் நீடித்த தன்மையும் மன நிறைவும் நிறைந்த சுகமும் இருக்கும்.

நமது ஜோதிட சாஸ்திரங்களில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு.

அதன் அடிப்படையில் இந்த பொருத்தமானது பார்க்கபடுகிறது.

ஆண் பெண் நட்சத்திரங்களுக்கு இடையே பகை மிருகங்கள் இல்லாமல் இருந்தால் அது நல்ல பொருத்தமாகும்

6. ராசி பொருத்தம்

ஆண் பெண் குடும்பத்திற்குள் நல்ல உறவு நீடிப்பதற்கும். தம்பதிகள் இருவரும் புரிந்து வாழ்வதற்கும் ராசி பொருத்தம் பார்க்கபடுகிறது.

பெண் பிறந்த ராசியை வைத்தும் ஆண் பிறந்த ராசியை வைத்தும் இந்த பொருத்தம் பார்க்க படுகிறது

7. ராசி அதிபதி பொருத்தம்

வாழையடி வாழையாய் வம்சமும் வளர வேண்டும் என்று பெரியோர்கள் வாழ்த்துவார்கள் அப்படி வம்சம் விருத்தி அடைய ராசி அதிபதி பொருத்தம் அவசியமானதாக பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு ராசிக்குமான கிரக நிலையை வைத்து அதன் நட்பு கிரகம், சம கிரகம், பகை கிரகங்களை ஆராய்ந்து இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது

8. வசிய பொருத்தம்

வசிய பொருத்தமானது திருமண தம்பதிகளின் வாழ்க்கையில் இருவரும் வாழ்க்கை முழுக்க இணக்கமாகவும் அன்போடும் இருப்பார்களா என்பதற்கும்

இருவர்களுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இல்லாமல் நிம்மதியோடு வாழ்வதற்கும் இந்த பொருத்தம் அவசியமாகும்

இந்த பொருத்தமானது ஒவ்வொரு ராசிக்கும் ஏற்ற வசிய ராசிக்கு மட்டுமே பொருந்தும்


9. ரஜ்ஜிப்பொருத்தம்

ரஜ்ஜு பொருத்தம் பத்து பொருத்தங்களில் மிக முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுகிறது. மணமக்களுக்கு ரஜ்ஜு தட்டுகிறது என்றால் அது அவர்களுக்கு ஆபத்தானதாகும். அதனால் ரஜ்ஜு பொருத்தம் மிகவும் அவசியமானதாகும்.

சிரசு ரஜ்ஜு, கண்ட ரஜ்ஜு, உதர ரஜ்ஜு, ஊரு ரஜ்ஜு, பாத ரஜ்ஜு என ஐந்து ரஜ்ஜுக்கள் உள்ளன

ஆண் மற்றும் பெண் ஒரே ரஜ்ஜூவாக இல்லாமல் செய்தால் இருவரும் நலமோடு வாழ்வார்கள்

Jathaka porutham in tamil for marriage by rashi nakshatra

10. வேதைப்பொருத்தம்

வேதைப்பொருத்தமானது திருமண தம்பதிகள் வேதனையில்லாத வாழ்க்கை அமையுமா என்பதை பார்க்கும் பொருத்தமாகும். வேதை பொருத்தம் இல்லையெனில் சிறிது காலம் கூட மகிழ்ச்சியுடன் வாழமாட்டார்கள் என்று கூறுவர்.

இரு நட்சத்திரங்களுக்கு இடையே வேதை இருந்தால் அதற்கு பொருத்தமில்லை என்று பொருள்.

வேதை என்றால் ஒன்றுக்கொன்று தாக்குதலை ஏற்படுத்தும் என்று பொருள். வேதைக்கு வேதனை தரும் என்ற மற்றொரு பொருளும் உண்டு

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரம்:

மேஷம்:

அஸ்வனி - பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம்

பரணி - ரோகிணி, சுவாதி, உத்திராடம் (2, 3, 4), திருவோணம், அஸ்வனி

கார்த்திகை 1 ம் பாதம் - சித்திரை (3, 4), அவிட்டம் (1, 2)

ரிஷபம்:

கார்த்திகை (பாதம் 2, 3, 4) நட்சத்திரம் - அஸ்தம், சித்திரை (1, 2,) கேட்டை, அவிட்டம் (3, 4)

ரோகிணி நட்சத்திரம் - மிருகசீரிஷம் (1, 2), உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி

மிருகசீரிஷம் (பாதம் 1, 2) நட்சத்திரம் - புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி


மிதுனம்:

மிருகசீரிஷம் (பாதம் 3, 4) நட்சத்திரம் - திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி

திருவாதிரை நட்சத்திரம் - பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் (3, 4)

புனர்பூசம் (பாதம் 1, 2, 3) நட்சத்திரம் - பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி

கடகம்:

புனர்பூசம் (பாதம் 4) நட்சத்திரம் அதிபதி - பூசம், அனுஷம், பரணி, ரோகிணி

பூசம் நட்சத்திரம் - உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4

ஆயில்யம் நட்சத்திரம் - அஸ்தம், அனுஷம், பூசம்

Jathaka porutham in tamil for marriage by rashi nakshatra

சிம்மம்:

மகம் நட்சத்திரம் - சித்திரை, அவிட்டம் (3, 4)

பூரம் நட்சத்திரம் - உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்

உத்திரம் நட்சத்திரம் (பாதம் 1) - பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்

கன்னி:

உத்திரம் நட்சத்திரம் (பாதம் 2, 3, 4) - பூராடம், திருவோணம், ரேவதி

அஸ்தம் நட்சத்திரம் - உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் (3, 4)

சித்திரை நட்சத்திரம் (பாதம் 1, 2) - விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்

துலாம்:

சித்திரை நட்சத்திரம் (பாதம் 3, 4) - விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம்

சுவாதி நட்சத்திரம் - அனுஷம், பூரட்டாதி (1, 2, 3), புனர்பூசம் 4, பூசம்

விசாகம் நட்சத்திரம் (பாதம் 1, 2, 3) - சதயம், ஆயில்யம்

விருச்சிகம்:

விசாகம் நட்சத்திரம் (பாதம் 4) - சதயம்

அனுஷம் நட்சத்திரம் - உத்திராடம் (2, 3, 4), பூரட்டாதி, ரேவதி, உத்திரம்

கேட்டை நட்சத்திரம் - திருவோணம், அனுஷம்


தனுசு:

மூலம் நட்சத்திரம் - அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் (3, 4)

பூராடம் நட்சத்திரம் - உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் (2, 3, 4), அஸ்தம்

உத்திராடம் நட்சத்திரம் (பாதம் 1) - பரணி, மிருகசீரிஷம் (3, 4), அஸ்தம், பூராடம்

Jathaka porutham in tamil for marriage by rashi nakshatra

மகரம்:

உத்திராடம் நட்சத்திரம் (பாதம் 2, 3, 4) - பரணி, மிருகசீரிஷம் 1, 2

திருவோணம் நட்சத்திரம் - உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்

அவிட்டம் நட்சத்திரம் (பாதம் 1, 2) - புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்

கும்பம்:

அவிட்டம் நட்சத்திரம் (பாதம் 3, 4) - சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4

சதயம் நட்சத்திரம் - கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் (3, 4)

பூரட்டாதி நட்சத்திரம் (பாதம் 1, 2, 3) - உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்

மீனம்:

பூரட்டாதி நட்சத்திரம் (பாதம் 4) - உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்

உத்திரட்டாதி நட்சத்திரம் - ரேவதி, புனர்பூசம், உத்திரம் (2, 3, 4), உத்திராடம், பூரட்டாதி 4

ரேவதி நட்சத்திரம் - பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி

பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்:

மேஷம்:

அஸ்வினி - பரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம்

பரணி - புனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி

கார்த்திகை 1 ம் பாதம் - சதயம்

ரிஷபம்:

கார்த்திகை (பாதம் 2, 3, 4) நட்சத்திரம் - சதயம்

ரோகிணி நட்சத்திரம் - மிருகசீரிஷம் (1, 2), புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி

மிருகசீரிஷம் (பாதம் 1, 2) நட்சத்திரம் - உத்திரம் 1, உத்திராடம் (2, 3, 4), திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணி


மிதுனம்:

மிருகசீரிஷம் (பாதம் 3, 4) நட்சத்திரம் - திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் (2, 3, 4), சதயம், பரணி

திருவாதிரை நட்சத்திரம் - பூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4

புனர்பூசம் (பாதம் 1, 2, 3)நட்சத்திரம் - அவிட்டம் (3, 4), உத்திரட்டாதி, மிருகசீரிஷம் (3, 4)

Jathaka porutham in tamil for marriage by rashi nakshatra

கடகம்:

புனர்பூசம் (பாதம் 4)நட்சத்திரம் அதிபதி - பூசம், சுவாதி, அவிட்டம் (1, 2), உத்திரட்டாதி, மிருகசீரிஷம்

பூசம் நட்சத்திரம் - ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் (1, 2, 3), பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை, புனர்பூசம்

ஆயில்யம் நட்சத்திரம் - சித்திரை, அவிட்டம் (1, 2)

சிம்மம்:

மகம் நட்சத்திரம் - சதயம்

பூரம் நட்சத்திரம் - உத்திரம் 1, பூரட்டாதி (1, 2, 3), அஸ்வனி

உத்திரம் நட்சத்திரம் (பாதம் 1) - சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம்

கன்னி:

உத்திரம் நட்சத்திரம் (பாதம் 2, 3, 4) - அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம்

அஸ்தம் நட்சத்திரம் - பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை (2, 3, 4)

சித்திரை நட்சத்திரம் (பாதம் 1, 2) - கார்த்திகை (2, 3, 4), மகம்

துலாம்:

சித்திரை நட்சத்திரம் (பாதம் 3, 4)- கார்த்திகை 1, மகம்

சுவாதி நட்சத்திரம் - பூராடம், அவிட்டம் (1, 2), பரணி, மிருகசீரிஷம் (3, 4), பூரம், புனர்பூசம்

விசாகம் நட்சத்திரம் (பாதம் 1, 2, 3) - அவிட்டம் (1, 2), சித்திரை (3, 4)

விருச்சிகம்:

விசாகம் நட்சத்திரம் (பாதம் 4) - அவிட்டம், சதயம், சித்திரை

அனுஷம் நட்சத்திரம் - கேட்டை, சதயம், பூரட்டாதி (1, 2, 3), ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி

கேட்டை நட்சத்திரம் - கார்த்திகை (2, 3, 4)

தனுசு:

மூலம் நட்சத்திரம் - உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம்

பூராடம் நட்சத்திரம் - பூரட்டாதி, புனர்பூசம் (1, 2, 3), உத்திரம், ரேவதி

உத்திராடம் நட்சத்திரம் (பாதம் 1) - உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி


மகரம்:

உத்திராடம் நட்சத்திரம் (பாதம் 2, 3, 4) - உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம்

திருவோணம் நட்சத்திரம் - அவிட்டம் (1, 2), பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் (2, 3, 4), சித்திரை, கேட்டை, பூராடம்

அவிட்டம் நட்சத்திரம் (பாதம் 1, 2) - கார்த்திகை 1, மூலம்

Jathaka porutham in tamil for marriage by rashi nakshatra

கும்பம்:

அவிட்டம் நட்சத்திரம் (பாதம் 3, 4) - கார்த்திகை, சதயம், மகம், மூலம்

சதயம் நட்சத்திரம் - சித்திரை (3, 4), விசாகம், அவிட்டம் (3, 4)

பூரட்டாதி நட்சத்திரம் (பாதம் 1, 2, 3) - மிருகசீரிஷம் (1, 2), சுவாதி, அனுஷம்

மீனம்:

பூரட்டாதி நட்சத்திரம் (பாதம் 4) - உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம்

உத்திரட்டாதி நட்சத்திரம் - ரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் (1, 2, 3), அஸ்தம், திருவோணம், பூரட்டாதி

ரேவதி நட்சத்திரம் - மிருகசீரிஷம், புனர்பூசம் (1, 2, 3), உத்திரம் (2, 3, 4), அனுஷம், உத்திரட்டாதி

Updated On: 16 Sep 2023 8:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  3. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  4. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  5. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  6. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  7. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!