/* */

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனைவியோடு மகிழ்ச்சியான நாளாம்..!

Jathagam Palan-ராசிபலன் என்பது பலருக்கு நம்பிக்கை ஊட்டும் ஒரு மனோதத்துவ மருத்துவர் போன்றது. நம்பிக்கை வளர்க்கும் ஒரு டானிக்.

HIGHLIGHTS

Jathagam Palan
X

Jathagam Palan

Jathagam Palan-ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமானது. கிரகங்களின் இயக்கங்களுக்கு ஏற்ப காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. கடல் அலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நிலவின் தேய்த்தால் மற்றும் வளர்தலுக்கு ஏற்ப அலைகளின் வீச்சில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்கள் மனிதர்களுக்கும் கடத்தப்படுகின்றன. அந்த மாற்றங்களுக்கு ஏற்ப ஜோதிட சாஸ்திரம் சில வரைமுறைகளை வகுத்து வைத்துள்ளது. அந்த வரைமுறைகள் நாளுக்குநாள் கூறும் விளக்கவுரைகளே தினசரி பலன்களாகின்றன.

இன்றைக்கு உங்களின் ராசி பலன்களை சுருக்கமாக தெரிந்துகொள்வோமா..?

மேஷம்

இன்று அடுத்தவரது கருத்தை அல்லது ஆலோசனையை கேட்காமல் உங்கள் சொந்த விருப்பப்படி செயல்படுவீர்கள். இன்று செலவு அதிகரிக்கலாம். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் உண்டாகும். ஆனாலும் நன்மை ஏற்படும். புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கைகூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6

ரிஷபம்

இன்று அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்குவதில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்க வாய்ப்புள்ளது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9

மிதுனம்

இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதம் ஏற்படாமல் தவிர்ப்பது நன்மை தரும். பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. அவர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3

கடகம்

இன்று வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்பதை தவிர்த்து விடுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6

சிம்மம்

இன்று கோபத்தை காட்டாமல் கோபத்தை குறைப்பது நல்லது. காரிய தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்யம் உண்டாகும். பண வரவு எதிர் பார்த்தது போல் இருக்கும். புதியவர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6

கன்னி

இன்று திடீர் குழப்பம் ஏற்படலாம். தீ அல்லது இயந்திரம் போன்றவைகளை கையாளும்போது கவனமாக இருக்கவேண்டும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7

துலாம்

இன்று குடும்பத்தில் சிறு சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மை தரும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும், மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனமாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7

விருச்சிகம்

இன்று மாணவர்களுக்கு கல்வி பற்றிய ஏற்படலாம். ஆனால், அது நிவர்த்தியாகும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனைகள் கைகொடுக்கும். எதிலும் நிதானமாக ஈடுபட்டு மற்றவர்களின் ஆலோசனையும் கேட்டு காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாக்குவாதம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5

தனுசு

இன்று விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் மனதில் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர் உதவி கிடைக்க வாய்ப்புக்களை உள்ளன. தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5

மகரம்

இன்று எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூர்யத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக்கூடும். குடும்பத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3

கும்பம்

இன்று புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மீனம்

இன்று பெண்கள் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். மாணவர்கள் புத்தி சாதூர்யத்துடன் நடந்து கொண்டு மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, ௭


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 6 April 2024 6:51 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...