/* */

பிறந்த தேதியை வைத்து ஜாதகம் கணிப்பது எப்படி?..... முதல்ல படிங்க......

Jathagam Kattam From Date Of Birth In Tamil- ஜாதகம் என்பது குழந்தை பிறந்த நேரம், நாள், தேதியை வைத்து கணிக்கப்படுகிறது. எப்படி கணிக்கிறார்கள்... படிங்க..

HIGHLIGHTS

பிறந்த தேதியை வைத்து ஜாதகம்   கணிப்பது எப்படி?..... முதல்ல படிங்க......
X

12 ராசிகளும்  ராசிக்குண்டான படங்களுடன்  (கோப்பு படம்)

Jathagam Kattam From Date Of Birth In Tamil



12 ராசியின்மண்டல அமைப்பு படம் (கோப்பு படம்)


ஜாதகம் கணிப்பது என்பது அக்காலத்தில் குழந்தை பிறந்தவுடன் அந்த நேரம், தேதி, நட்சத்திரம் என குறித்து வைத்துக் கொள்வார்கள். அல்லது அன்றைய காலண்டரில் உள்ள தேதிச் சீட்டினைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு அதன் பின்னால் நேரத்தினை மட்டும் எழுதி வைத்துக்கொள்கின்றனர்.

இது ஒரு புறம் என்றால் மற்றொரு புறம் ஒரு சிலர் அக்காலத்தில் எதனையும் குறித்து வைக்காமலேயே விட்டுவிட்டனர். இவர்களுக்கும் இக்காலத்தில் கம்ப்யூட்டர் யுகத்தில் ஜாதகம் கணிக்கப்படுகிறது. முன்பெல்லாம் ஒரு ஜாதகம் கணிக்க வேண்டும் என்றால் மனக்கணக்கில்தான் அதாவது மேனுவலாகவே வேலை பார்க்கவேண்டியிருந்தது. ஆனால் தற்காலத்தில் கம்ப்யூட்ட்ரில் அது கேட்கும் விபரங்களைக் கொடுத்தால் கணநிமிஷத்தில் உங்களின் ஜாதகம் கைக்குவந்துவிடுகிறது. ஆனால் ஒரு சிலர் கம்ப்யூட்டர் கணிக்கும் ஜாதகத்தின் மேல் நம்பிக்கை வைக்காமல் இன்றளவில் அவர்களின் குடும்ப ஜோசியரிடம் கொடுத்து கையால்தான் எழுதிக்கொண்டு இருக்கின்றனர் என்பதுதான் ஹைலைட்டான விஷயமே. அந்த வகையில் ஒருவரது பிறந்த தேதி இருந்தால் மட்டும் போதும் நேரம், வேண்டும் இது இரண்டும் இருந்தால் ஜாதகத்தினை கண நிமிஷத்தில் கம்ப்யூட்டர் ரெடிசெய்து கையில் தள்ளிடுதுங்க... இன்னும் என்ன?

ஜோதிடம் என்பது 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், ஒன்பது கிரஹங்கள், இவைகளின் செயல்களைக் கூறும் காலமாகும். இவைகளைக் கொண்டுதான் ஜாதகம் கணிக்கப்படுகின்றது. அதாவது-ராசிகள், நட்சத்திரங்கள், கிரஹங்கள், இவைகளின் நிலையைக் கொண்டு ஸ்வபாவம், பலம், பலவீனம், இவைகளைத் தெரிந்துகொண்டால் பலனைத் தெரிந்துகொள்ளலாம்.

ஒருகுழந்தை பிறந்தபோது எந்த நட்சத்திரத்தில் எந்த பாதத்தில் ஒரு கிரஹம் இருக்கிறதோ, அந்த நட்சத்திரத்தின் பாதம் எந்த ராசியைச் சேர்ந்ததோ , அந்த ராசியில் அந்த கிரஹத்தை எழுதவேண்டும்.

லக்னம் என்றால் என்ன?

லக்னம் என்பது ஒரு குழந்தை பிறந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பெயர்.

ராசி என்பது 12 சமபாகமாகப் பிரிக்கப்பட்ட பூமண்டலத்தின் பாகம். சூரியனும் மற்ற கிரகங்களும் கிழக்கிலிருந்து மேற்குப் பக்கமாகச் சுற்றுகின்றன. அதே சமயத்தில் மேஷாதி 12 ராசிகளைச் சமபாகமாகக் கொண்ட பூமண்டலமானது மேற்கிலிருந்து கிழக்கு பக்கமாகச் சுற்றுகிறது. அப்படிச்சுற்றும்போது பூமண்டலத்தின் எந்தப் பாகம் கிழக்கில் நமக்கு நேராக வருகிறதோ அந்த ராசிக்கு லக்னம் என்று பெயர்.

அதாவது அந்த நேரத்தில் பிறந்த குழந்தைக்கு அந்த ராசியை லக்னமென்று சொல்வார்கள். மற்றும் அப்போது கிரஹங்கள் எந்த எந்த ராசியில் இருக்கின்றனவோ, அதையும் குறித்துவைத்துக் கொள்வார்கள். இதெல்லாம் சேர்ந்ததற்கே ஜாதகச் சக்கரம் அல்லது ராசிச்சக்கரம் என்று பெயர்.

உதாரணமாக விகாரி வருஷம் தை மாதம் 9 ஆம் தேதி வெள்ளியன்று சுவாதி நட்சத்திரம் 29-27 மறுநாள் விசாகம் 25-42 (23.01-1960) காலை 5.40 a.m. ) இரவு 5.40 க்கு (சனிக்கிழமை விடியற்காலை) சென்னையில் ஒரு ஆண் குழந்தை பிறந்ததை வைத்துக்கொண்டு அதற்கு ஜாதகம் கணிக்கும் விதத்தையும் கிரகங்களை அமைக்கும் வழியையும் தசா புக்திகள் கணிக்க வேண்டும்.



நவாம்சம் கட்டம் அமைக்கும் மாதிரிப் படம் (கோப்பு படம்)


ஜாதகம் கணிக்கும் முன் கீழ்க்கண்ட அம்சங்களை முக்கியமாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

*குழந்தை எத்தனையாவது அட்சாம்சத்தில் உள்ள ஊரில் பிறந்தது?

*அந்த அட்சாம்ச ரேகைக்குத் தக்கபடி மேஷாதி ராசிப் பிரமாணங்கள் என்ன?

*குழந்தை, ஜனனமான தேதியில் அது பிறந்த ஊரில் சூரிய உதயம் , எத்தனை மணி, எத்தனை நிமிஷத்துக்கு நிகழ்ந்தது-

*சூரியோதயம், முதல் குழந்தை பிறந்தது வரையில் எத்தனை நாழிகை எத்தனை விநாடிகள் சென்றன.

*சிசு பிறந்த நட்சத்திரத்தின் மொத்தநாழிகை என்ன? இவற்றைப் பஞ்சாங்கத்தின் உதவியால் முக்கியமாக குறித்து வைத்துக்கொண்டால் சுலபமாக ஜாதகம் கணித்துவிடலாம்.

சூரிய உதயம், உதயாதி ஜனன நாழிகை, உதயலக்ன சேஷம், ஜந்ம லக்னம், நவாம்ஸ லக்னம், ஜந்ம நட்சத்திர ஆத்யந்தம், என அனைத்தையும் கணித்துவிட வேண்டும்.

பின்னர் தசாபுக்தியைக் கண்டுபிடிக்க வேண்டும். இதுபோல் பல ஜாதக சம்பந்தமான விஷயங்களைக் குழந்தையின் பிறந்த தேதியை வைத்துக்கொண்டு கணித்துவிடலாம்.

தற்காலத்தில் ஜாதகத்தினையே நம்பாமல் பெயர் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்பவர்கள்தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். காரணம் நம்பிக்கையில் சற்று சரிவு . எல்லாமே ஜாதகம் அதுவும் இடைத்தரகர்களால் செட்அப் செய்த ஜாதகம் என ஒரு சிலர் நம்புவதே இல்லை. இப்படி ஒருபுறம் உள்ளனர். என்ன செய்ய?


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 April 2024 9:50 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...