/* */

வாழ்க்கை பலனை கணிக்கும் ஜாதகக் கட்டம்

ஒருவரின் ஜாதகம் அந்த குறிப்பிட்ட நபரின் உடல், மனம், உணர்ச்சி மற்றும் ஆன்மீக நிலைகளைப் பற்றி அவர் புரிந்து கொள்ள உதவுகிறது.

HIGHLIGHTS

வாழ்க்கை பலனை கணிக்கும் ஜாதகக் கட்டம்
X

ஜாதக கட்டம் 

ஒரு நபரின் ஜாதகம் என்பது அந்த நபரின் தனித்துவமான பலன்களை கூறும் வரைபடமாகும். இதன் மூலம் அந்த நபரின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் பற்றி அறிந்து கொள்ளவும், எதிர்காலத்தை ஆராய்ந்து முன்கூட்டியே அறிந்து கொள்ளவும் இயலும்.

ஜாதகக்கட்டம் அமைப்பது எப்படி?

ராசி என்பது வான் மண்டலத்தில் 360 பாகை கொண்ட ஒரு நீள்வட்ட வடிவ அமைப்பு ஆகும். இந்த 360 பாகை 12 பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றது. வட்ட வடிவில் அமைப்பதை விட கட்டமாக அமைப்பதால் எளிதில் புரியும் என்று 12 கட்டங்களை அமைத்து ஜாதகக் கட்டம் அமைக்கப்படுகின்றது. இதனை ராசிக் கட்டம் என்று கூறுகிறோம்.

இந்த பன்னிரண்டு கட்டங்களும் விலங்கு மற்றும் இன்ன பிற உருவ அமைப்பில் சித்தரிக்கப்படுகின்றன. இந்த பன்னிரண்டு கட்டங்களும் நிலையாக இருக்கின்றன. இந்தக் கட்டங்களில் கிரகங்கள் சுற்றி வருகின்றன. அவை சுற்றி வரும் வேகத்திற்கேற்ப, மாத கிரகங்கள், வருட கிரகங்கள் என்று கூறப்படுகின்றன.

இந்த வீடுகள் ஒன்று முதல் பன்னிரண்டு எண்களில் குறிப்பிடப்படுகின்றன. முதலாம் வீடு லக்னம் என்று அழைக்கப்படுகின்றது. கடிகாரச் சுற்று முறையில் இந்த எண்கள் ஏறுவரிசையில் வரிசைப்படுத்தப்படுகின்றன. ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் கோள்கள் அல்லது கிரகங்கள் இருக்கும் தீர்க்காம்சத்தைக் கணக்கிட்டு அதற்கேற்ப அவற்றிற்குரிய கட்டங்களில் நிரப்பப்படு கின்றன.

பிறப்பு ஜாதகம் மூலம் ஒருவர் பிறந்த நேரத்தில், ஜோதிடத்தில் கூறப்படும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களின் நிலைகளை அறிய இயலும்.

ஜாதகம் என பிரபலமாக அறியப்படும் இது, ஒரு நபரின் பிறந்த இடம் மற்றும் நேரத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிரகங்களின் நிலைகளை குறிக்கின்றது. உங்கள் ஜாதகம் என்பது நீங்கள் பிறந்த நேரத்தில் கிரகங்களின் அமைப்பைக் குறிக்கின்றது.


ஒரு ஜாதகத்தை எப்படி படித்துப் பார்ப்பது ?

ஒருவரின் ஜாதகத்தினை சரியாக ஆராய்ந்து கணிப்பதன் மூலம் அந்த நபரைப் பற்றிய பெரும்பாலான விஷயங்களை நாம் அறிந்து கொள்ள இயலும். ஒரு ஜாதகத்தை ஆராய்ந்து கணிப்பது என்பது விரிவான செயல் முறை ஆகும். இங்கு நாம் ஓரு ஜாதகத்தை எவ்வாறு வரிசைப்படுத்தி பார்ப்பது என்பதை காண்போம்.

உங்கள் ஜாதகத்தில் “ல” அல்லது “லக்” என்று எழுதப்பட்டிருக்கும் வீடு தான் முதல் வீடு அல்லது லக்னம் என்று அழைக்கப்படும். இங்கிருந்து தான் கடிகாரச் சுற்றில் ஏறு வரிசையில் வீடுகளை எண்ண வேண்டும்.

மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு வீடுகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு சின்னம் இருக்கும். கடிகாரச் சுற்று முறையில் எண்ணி, தீர்காம்சத்திற்கேற்ப சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களுள் எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த வீட்டில் உள்ளன என்று அறிந்து அமைக்க வேண்டும்.

இறுதியாக ஒன்பது கிரகங்களும் எந்தெந்த வீட்டில் உள்ளன என்பதை அறிய வேண்டும்.


கட்டம் 1 : ஒருவரின் ஜாதக கட்டத்தில் இருக்கும் ல/ என்று போடபட்டிருக்கும் லக்ன கட்டம் தான் முதல் வீடு ஆகும். ஒருவரின் தனிப்பட்ட அங்க அடையாளங்கள் மற்றும் ஆளுமை திறன், திறமைகள், மரியாதை, அறிவு, வலிமை சார்ந்தவற்றை குறித்து காட்டுகிறது. மற்றவர்கள் அவரை பார்க்கும் விதம் எப்படி இருக்கும்? அவர் வாழ்க்கையில் எந்த இடத்திற்கு செல்வார்? எந்த நாட்டில் இருப்பார்? அவருடைய குணாதிசயம் எப்படிப்பட்டது? என்பதை சொல்லி விடும்.

கட்டம் 2 : ஒருவரின் ஜாதகத்தில் இரண்டாம் கட்டம் என்பது குடும்பம், வாக்கு, தனம் ஆகியவற்றை குறிக்கிறது. குடும்ப வாழ்க்கை, பொருளாதாரம், பேசும் திறன் இவற்றை பற்றி சுலபமாக கூறி விடும். நல்ல கிரகங்கள் இந்த கட்டத்தில் இருந்தால் நல்ல பலன்கள் இருக்கும். தீய கிரகங்கள் இருந்தால் பலன்களும் அது போல் தான் இருக்கும்.

கட்டம் 3 : மூன்றாம் கட்டம் என்பது உங்கள் சகோதரம், தைரியம், வெற்றி, அண்டை வீட்டார், பயணம், தகவல் தொடர்பு, இடமாற்றம், வீடு மாற்றம் போன்றவற்றை பற்றி சொல்லிவிடும். இங்கே அமர்ந்திருக்கும் கிரகத்தினுடைய ஆற்றல் எப்படிப்பட்டதோ அப்படி பட்டவராக நீங்கள் இருப்பீர்கள். செவ்வாய் மிகவும் தைரிய கிரகம் ஆவார். எனவே ஜாதகரும் வீரமிக்கவராக இருப்பார். சனி பகவான் மந்தன் ஆவார். எனவே சனி இருந்தால் சோம்பேறியாக இருப்பார்கள். கிரகங்களின் பார்வை பலத்தை வைத்து இந்த வழியில் பலன்கள் அமையும்.

கட்டம் 4 : நான்காம் கட்டம் தாயாரை குறிக்கும். கல்வி, வீடு, வாகனம், சொத்துக்கள், பொது வாழ்க்கை போன்றவற்றை குறிக்கும். செவ்வாய் பூமிகாரகன் என்பதால் நாலில் செவ்வாய் இருந்தால் எப்படியும் வீடு யோகம் உண்டு. எனினும் நல்ல கிரகங்கள் அமைந்தாலோ அல்லது அவர்களின் பார்வை பலம் இருந்தாலோ நல்ல பலன்கள் கிடைத்து சொத்து சுகத்தோடு இருப்பார்கள். தீய கிரகங்கள் இருந்தால் தாயாருக்கு ஆபத்து நேரலாம். தாயன்பு கிடைக்காமல் போகலாம்.

கட்டம் 5 : ஐந்தாம் கட்டமானது புத்திர ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகும். குழந்தை பாக்கியம் பற்றியும், போன ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியங்களைப் பற்றியும் குறிக்கும். காதல் திருமணமா? என்பதை கூறிவிடும். கலைத்துறை மற்றும் ஆன்மீக நாட்டம் முதலியவற்றைக் குறிப்பது. இங்கு எந்த கிரகம் இருந்தாலும் அதன் தசா புத்திகேற்ப அந்த கால கட்டத்தில் தோஷங்கள் உண்டாகும்.

கட்டம் 6 : ஆறாம் கட்டம் நோய், கடன், தாய் மாமன், கவலைகள், தொழில், எதிரிகள் போன்றவற்றை குறிக்கும். ஆறாம் வீட்டில் சரியான கிரகங்கள் இல்லாவிட்டால் உடல் நலனில் பிரச்சனைகள் இருக்கும். கடன் தொல்லைகள் இருக்கும். வேலையில் பிரச்சனைகள் உண்டாகும். தசா புத்திகேற்ப அந்த கால கட்டத்தில் இதில் மாறுதல்களை உண்டாகும்.

கட்டம் 7 : ஏழாம் கட்டமானது திருமணம், வியாபாரம், மரணம் போன்றவற்றை குறிப்பன. இங்கு தீய கிரகங்கள் இருந்தாலோ அல்லது அவைகளின் பார்வை பலம் இருந்தாலோ திருமணத்தில் தடை ஏற்படும். வியாபார வளர்ச்சி இருக்காது.

கட்டம் 8 : எட்டாம் கட்டம் ஆயுள், அவமானம், கண்டம் போன்றவற்றை குறிக்கும். எட்டில் இருக்கும் ராசியாதிபதி லக்னத்திலிருந்து எந்த வீட்டில் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்களும் இருக்கும். எட்டாம் வீட்டில் சனி மற்றும் குரு இருந்தால் தீர்காயுள் கிட்டும்.

கட்டம் 9 : ஒன்பதாம் கட்டம் தந்தையை குறிக்கும். இங்கு தீய கிரகங்கள் இருந்தால் தந்தையுடன் பிரச்சனைகள் இருக்கும்.

கட்டம் 10 : பத்தாம் கட்டம் கர்மஸ்தானம் ஆகும். கௌரவம், ஜீவனம், மரியாதை, கண்ணியம், புகழ், பதவி போன்றவற்றை குறிப்பது. பத்தில் இருக்கும் ராசியாதிபதி லக்னத்திலிருந்து எந்த வீட்டில் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்களும் இருக்கும். உதாரணத்திற்கு ராசியாதிபதி லக்னத்தில் இருந்தால் கடின உழைப்பாளியாக இருப்பார்கள். சொந்தக் காலில் நிற்பதை விரும்பக் கூடியவர்கள்.

கட்டம் 11 : பதினோராம் கட்டத்தில் இருக்கும் கிரகம் அல்லது ராசியாதிபதி சரியாக அமையவில்லை என்றால் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் வீண் விரயமாகிவிடும். ஏனெனில் இது தான் லாபஸ்தானம் ஆகும்.

கட்டம் 12 : பன்னிரெண்டாம் கட்டம் மோட்சஸ்தானம் ஆகும். விரயம், நஷ்டம், ஜெயில் தண்டனை, மறைமுக எதிரிகள் போன்றவற்றை குறிக்கும். பனிரெண்டில் அமரும் கிரகங்கள் பொறுத்து பலன் இருக்கும். உதாரணத்திற்கு சனி பகவான் வந்து அமர்ந்தால் பாவங்கள் செய்பவராக இருப்பார்கள். நஷ்டம் வந்து கொண்டே இருக்கும்.

Updated On: 28 Aug 2023 7:58 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...