/* */

மகாளய அமாவாசை சிறப்புகள்

மகாளய அமாவாசை சிறப்புகள், மகாளய அமாவாசையில் செய்ய வேண்டிய தானங்கள்

HIGHLIGHTS

மகாளய அமாவாசை சிறப்புகள்
X

மகாளய பட்சம் அல்லது மகாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும்.

பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். மறைந்த நம் முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும். பித்துரு வழிபாடு இல்லற வாழ்க்கைக்கு பித்ருக்களின் ஆசியும், ஆசீர்வாதங்களும் கிடைக்கப்பெற்று சிறப்பளிக்கின்றன என்பதனால் எம் முன்னோரால் பின்பற்றப்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

மகாளய அமாவாசையில் செய்ய வேண்டிய தானங்கள்..!!

💥 தானம் என்பது தனக்கே இல்லாத நிலை வரும் வரை தருவதாகும். அதுவும் மகாளய அமாவாசை நாளில் செய்யும் சிறு தானமும் நமது முன்னோர்களின் பசியை தீர்த்து அவர்களின் ஆசியை வழங்கக்கூடியது. பித்ரு தர்ப்பணம் செய்தால் நமது முன்னோர்கள், சிறுவயதில் இறந்தவர்கள், பிறந்தவுடன் இறந்த குழந்தைகள், துர்மரணம் ஆனவர்களுக்கு நற்கதி கிடைக்கும். இத்தகைய சிறப்புமிக்க அமாவாசை திருநாளில் தானங்கள் செய்தால் நல்ல பலன்களை அடையலாம்.

💥 கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர். அனைத்து தெய்வங்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்ய முடியும். பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததற்கு சமம். எனவே, இத்தகைய சிறப்புடைய பசுவிற்கு தங்களால் இயன்றளவு உணவை அளிக்கவும்.

💥 பசுவிற்கு அகத்திக்கீரை அளிப்பதன் மூலம் தானத்திற்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும். கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது. ஒரு கட்டு அகத்திக்கீரையை உணவாக அளிக்கலாம். வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம். அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு அகத்திக்கீரையை அளிக்கலாம்.

💥 தானம் செய்ய ஏற்ற எளிதாக சமைக்கும் வகையில் கத்தரி, அவரை, பீன்ஸ், வெண்டை, உருளை, கேரட், பீட்ரூட், முருங்கை, கோஸ், வாழைக்காய், முழுபூசணி போன்றவற்றை தானம் தருதல் நன்று. எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்த மரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும். அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தால் நமது கர்மவினைகளை போக்கி கொள்ள முடியும்.

எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?

💥 அன்னம் - வறுமையும், கடன் தொல்லைகளும் நீங்கும்

💥 தேன் - புத்திர பாக்கியம் உண்டாகும்

💥 தீபம் - கண்பார்வை தெளிவடையும்

💥 அரிசி - நமக்கு தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்களை போக்கும்

💥 நெய் - நாள்பட்ட தீராத நோய்களை போக்கும்

💥 பால் - துக்கம் நீங்கும்

💥 பழங்கள் - புத்தியும், சித்தியும் உண்டாகும்

💥 தேங்காய் - நினைத்த காரியம் வெற்றியாகும்

💥 நெல்லிக்கனி - ஞானம் உண்டாகும்

💥 அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் என்பது நம் பிதுர்களையும் மகிழ்விக்கும். நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசிகளும் கிடைக்கும். நமது குலம் தழைக்கும்.

*மஹாளய அமாவாசை அன்று கோதானம் செய்வது நன்று பசுவையும் கன்றையும் தானமாக மஹாலய அமாவாசை அன்று தானமாகக் கொடுத்தால் மூன்று தலைமுறைக்கு லட்சுமி வாசம் செய்வாள் எந்த தோஷங்கள் இருந்தாலும் அவைகள் எல்லாம் விலகும், திருமணம், குழந்தைப்பேறு கிடைக்கும் பல தலைமுறையினால் பாதித்து வரும் பிதுர் தோஷம் நீங்கும், 16 வகையான செல்வங்கள் வீடு வந்து சேரும், தொழில் அபிவிருத்தி அடைந்து அபரீதமான லாபம் கிடைக்கும், அயல்நாட்டில் வேலை கிடைக்கும், கிரகங்களில் ஏற்படும் பாதிப்பு நீங்கும், தீராத கடன்கள் தீர வழி கிடைக்கும், கோதானம் வழங்குபவர்கள் புத்திர தோஷம், பிரம்மஹத்தி தோஷம், நாக தோஷம், மாங்கல்ய தோஷம், நவக்கிரக தோஷம் நீங்கும்,

தானம் செய்து முன்னோர்களின் ஆசியை பெற்றிடுங்கள்..!!!

Updated On: 5 Oct 2021 1:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  3. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  4. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  5. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  8. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  9. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை
  10. வீடியோ
    Congress vs BJP இரண்டு கட்சிக்கும் வித்தியாசம் என்ன ?#annamalai...