/* */

horoscope decides a person's character in tamil-உங்கள் லக்கினம் மீனமா..? அப்படின்னா உங்கள் குணாதிசயம் இதுதான்..!

horoscope decides a person's character in tamil-பிறப்பால், லக்கினம் என்பது அடிப்படையில் ஒருவரது குணாதிசயங்களை உருவாக்கும் காரணியாக இருக்கிறது.

HIGHLIGHTS

horoscope decides a persons character in tamil-உங்கள் லக்கினம் மீனமா..? அப்படின்னா உங்கள் குணாதிசயம் இதுதான்..!
X

லக்கினம் அடிப்படையில் ஒருவரது குணம் இதுதான் என்பதை ஜோதிடம் வடிவமைக்கிறது அல்லது தீர்மானிக்கிறது. இன்று மீன லக்கினத்தில் பிறந்தவர்களின் குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதை பார்க்கப்போகிறோம்.

நீங்கள் மீன லக்கினத்தில் பிறந்தவர்களா..? அப்படியென்றால் இதுதான் உங்கள் குணம்.

மீன லக்கின அதிபதி குரு பகவான் ஆவார். அதனால் மீன லக்கின காரர்கள் மிகுந்த அன்பும் கனிவும் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்கள் கணவன் அல்லது மனைவியிடம், மிகுந்த ஈடுபாடு கொண்டு காதல் கொள்வார்கள். இவர்கள் துடுக்குத்தனம் மிக்கவர்கள். துருதுருவென வென எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். இவர்கள் சிற்றின்ப பிரியர்கள். இவர்களுக்கு வாழ்க்கையின் மத்திய பகுதியில் சில இடர்பாடுகள் ஏற்படும். குடும்பத்தை விட்டு சில காலம் பிரிந்து இருக்க வேண்டியிருக்கலாம். இவர்களில் பெரும்பாலோனோர் சற்று குண்டான உடலமைப்பை பெற்றிருப்பார்கள்.

horoscope decides a person's character in tamil

மீன லக்கினத்தில் பிறந்தவர்கள் கடவுள் பக்தி அதிகம் கொண்டவர்கள். விருந்தோம்பலில் இவர்களை மிஞ்ச முடியாது. இவர்கள் சரளமாகவும் தெளிவாகவும் பேசும் திறன் படைத்தவர்கள். எதையாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் நன்கு படித்த அறிவாளியாக இருப்பார்கள். இவர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். தனக்குத் துரோகம் செய்தவர்களையும் மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர்கள். இவர்கள் கவிதை, இலக்கியங்களில், மிகுந்த விருப்பமுடையவர்களாக இருப்பார்கள். இவர்களால் ரகசியங்களை மட்டும் காக்க முடியாது.

horoscope decides a person's character in tamil


மீன லக்கின காரர்கள் தன்னடக்கம் கொண்டவர்கள். அனைவரிடமும் சகஜமாக பேசிப் பழகும் தன்மை உடையவர்களாக இருப்பார்கள். மீன லக்கினத்தில் பிறந்தவர்கள் கம்பீரத் தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஏழைகளிடம் அலலது துன்பப்படுபவர்களிடம் மிகவும் இரக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய பழக்கம் மற்றும் நம்பிக்கையான நடவடிக்கை எல்லோருக்கும் வெகுசீக்கிரத்தில் நம்பிக்கைக்குப் பாத்திரமாவார்களாக மாறிவிடுவார்கள். பிறருக்கு உதவும் குணம் படைத்தவர்கள். எதையும் சாதிக்கும் திறமைமிக்கவர்களாக இருப்பார்கள்.

மீன லக்கின காரரிடம் பேசி ஜெயிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.அவர்களிடம் பேசும்போது கவனமாக பேச வேண்டும். இல்லையெனில் நாம் சொல்லும் பதில் நமக்கான புது கேள்வியை உருவாக்கும் நிலைக்கு கொண்டு வந்துவிடுவார்கள். ஐயோ.. சாமி போதும்டா..என்று நீங்களே இவர்களிடம் வாயை கொடுத்து மாட்டிக் கொண்டதற்கு வருந்தவேண்டி இருக்கும்.

மீன லக்கினத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தின் செல்ல பிள்ளையாக இருப்பார்கள். இவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் அவர்கள் மீது மதிப்பும், மரியாதையுடன் இருப்பதுடன் அவர்களிடம் கௌரவமாகவும் பிரியமாகவும் நடந்து கொள்வார்கள்.

horoscope decides a person's character in tamil

அவர்கள் கலை மற்றும் அறிவியலில் திறமையுடைவர்களாக இருப்பார்கள். அதனால் மற்றவர்கள் செய்யும் வேலைகளில் குற்றம் கண்டுபிடித்துவிடுவார்கள். அவ்வளவு திறமை பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் சுகபோகமாக வாழ வேண்டும் என்பதையே விரும்புவார்கள். தற்புகழ்ச்சி அதிகம் கொண்டவர்கள். இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக ஏற்றுக்கொள்ளும் மனம் படைத்தவர்களாக இருப்பார்கள்.

Updated On: 13 May 2023 7:45 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  2. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  3. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  5. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  6. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  7. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  8. மாதவரம்
    சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்தவர்கள் கைது..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி