/* */

திருப்பதியில் பலத்த மழை; நனைந்தபடி காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருப்பூரில் தொடர் மழை பெய்துவரும் நிலையில், மழையை பொருட்படுத்தாத பக்தர்கள், நனைந்தபடி காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

திருப்பதியில் பலத்த மழை; நனைந்தபடி காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
X

திருப்பதியில் மழையில் நனைந்தபடி சென்ற பக்தர்கள். 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த வாரம் முழுவதும் கடும் வெயில் நிலவியது. இதனால் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வெயிலில் தாக்கத்தால் கடுமையாக அவதிப்பட்டனர்.

தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்ட போதிலும் பக்தர்களின் கூட்டம் குறையாமல் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை முதல் திருப்பதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் லேசான மழை தொடங்கி இரவு முதல் பலத்த மழை வருகிறது. நேற்று 86 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ்சில் இருந்து, 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்து இருந்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மழையில் நனைந்தபடி அவதி அடைந்தனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதியில் நேற்று 86,181 பேர் தரிசனம் செய்தனர். 30,654 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.59 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. இன்று காலை நேரடி இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரமானது.

திருப்பதிக்கு சென்று வந்தால் திருப்பம் என்ற கருத்தும், திருப்பதி சென்றுவந்தால் குடும்பத்தில் கஷ்டம், வறுமை போய் விடும் என்ற அபார நம்பிக்கையும், திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க வைக்கிறது. மேலும், மாதந்தோறும் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதை பலரும் வழக்கமாக கொண்டிருப்பதால், அவ்வாறு பக்தர்களின் வருகையும் கனிசமாக அதிகரிக்கிறது.

மேலும் புரட்டாசி மாதம் நெருங்கும் நிலையில், பக்தர்கள் கூட்டம் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. கோடை கால விடுமுறை காலத்தில், திருப்பதி கோவிலில் கூட்டம் மிக அதிகமாக இருக்கும் என்பதால், கடந்த இரண்டு மாதங்களாக வராத பக்தர்கள் கூட்டமும், கோவிலுக்கு வருவதால் எதிர்பார்ப்பதை விட பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

Updated On: 19 Jun 2023 6:36 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  5. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  7. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  10. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...