/* */

"ஈகைத்திருநாள்" என்று போற்றும் 'ரம்ஜான் நோன்பின்' வரலாறு அறிவோம் வாருங்கள்..!

Eid Mubarak Meaning in Tamil-ஆண்டுதோறும் இஸ்லாமியர்களால் எப்படி கொண்டாடப்படுகிறது? எப்படி நோன்பு இருக்கிறார்கள் என்பதை அறிவோம்.

HIGHLIGHTS

Eid Mubarak Meaning in Tamil
X

Eid Mubarak Meaning in Tamil

Eid Mubarak Meaning in Tamil

ரமலான் இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ரம்ஜான், ரமலான் எனவும் அழைக்கப்படுகிறது.இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பை அனுசரிப்பது வழக்கம்.

இஸ்லாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பு அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுக்கொரு முறை அனுசரிக்கப்படும் இந்த நோன்பு இஸ்லாத்தின் ஐந்து தூண்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.இந்த மாதமானது நிலவின் பிறைக்காட்சியின்படியும், ஹதீஸ்களில் தொகுக்கப்பட்டுள்ள பல்வேறு வாழ்க்கை வரலாறுகளின்படியும் 29–30 நாட்கள் இருக்கலாம்.

ரமதான் என்ற வார்த்தையானது, அரபு வார்த்தை. ரமிதா அல்லது அர்-ரமத் (சுடும் வெப்பம் அல்லது உலர் தன்மை என்ற பொருைளத் தரக்கூடியது) என்பதிலிருந்து தோன்றியதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. நோன்பானது வயது வந்த இஸ்லாமியர்களுக்கு கட்டாயமான கடப்பாடு ஆகும்.

நோய்வாய்ப்பட்டவர்கள், பயணத்தில் உள்ளோர், வயது முதிர்ந்தோர், கர்ப்பிணிப் பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள், நீரிழிவு நோயாளிகள், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாதவிடாய் காலத்தில் உள்ளோர் ஆகியோர் மட்டுமே நோன்பிருப்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள்.

மக்காவில் இருந்து மதீனாவிற்கு இஸ்லாமியர்கள் குடியேறிய இரண்டாம் வருடத்தில், ஷப்பான் மாதத்தில் ரமலான் நோன்பு நோற்க வேண்டும் என்பது கட்டாயமான கடப்பாடாக இருந்தது. நள்ளிரவு சூரியன் அல்லது துருவ இரவு போன்ற இயற்கை நிகழ்வுடன் வாழும் முஸ்லிம்கள் மக்காவின் கால அட்டவணையைப் பின்பற்ற வேண்டும் என்று ஃபத்வாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால், பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து யாதெனில், அந்தந்தப் பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் பகலிலிருந்து இரவை வேறுபடுத்த இயலக்கூடிய நாளிலிருந்து தமக்கு நெருங்கிய நாட்டின் கால அட்டவணையை பின்பற்ற வேண்டும் என்பதாகும்.

அதிகாலையிலிருந்து சூரிய மறைவு வரை உண்ணாநோன்பு இருக்கும் போது, முஸ்லிம்கள் உணவு உட்கொள்ளல், நீர் மற்றும் திரவங்களை அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் பாலியல் உறவுகளில் ஈடுபடுதல் ஆகியவற்றைத் தவிர்த்து விடுகிறார்கள். தவறான பேச்சு (அவமதிப்பு, புறம்பேசுதல், சபித்தல், பொய் போன்றவை) மற்றும் சுய-பாதுகாப்புக் காரணங்களுக்காக அல்லாமல் பிறருடன் சண்டையிடுவது போன்ற பாவ காரியங்களில் ஈடுபட்டால் அவை நோன்பின் பலனைக் குறைத்து விடுமென்பதால் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதிலிருந்தும் தங்கள் நடத்தையை தவிர்த்து விடுகிறார்கள்.

நோன்பு தொடங்குவதற்கு முன்னதாக எடுக்கப்படும் உணவானது ஸஹர் எனவும் நோன்பு முடிந்த பின் எடுத்துக் கொள்ளப்படும் உணவானது இப்தார் எனவும் குறிப்பிடப்படுகிறது.நோன்பிற்கான ஆன்மீக வெகுமதி (தவாப்) மேலும் ரமலான் மாதத்தில் பெருக்கப்படும் என நம்பப்படுகிறது. ரமலான் மாதத்தில், பொதுவாக பிரார்த்தனைகளை அதிகப்படுத்துதல், திருக்குர்ஆனைப் பாராட்டுதல், பாராது ஒப்புவித்தல் மற்றும் நல்ல செயல்களையும் தொண்டுகளையும் அதிகரித்தல் ஆகியவை வலியுறுத்தப்பட்டுள்ளன.

நோன்பின் சிறப்புகள்

நோன்பு என்பது அதிகாலை சூரியன் உதயத்தில் இருந்து மாலை சூரியன் மறையும் வரை கொடுக்கப்பட்டுள்ள உலக வாழ்வில் இருந்து தள்ளி இருப்பதாகும். இந்த நோன்பின் மூலம் நம் உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கின்றன.

இஸ்லாமிய மாதத்தில் நோன்பு என்பது ஒரு இன்றியமையாததாகும். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக நோன்பு அல்லது ரமழான் மாதம் காணப்படுகின்றது.

முகம்மது நபிக்கு முதன் முதலாக அல்குர்ஆன் வெளிப்படுத்திய மாதமாக ரமழான் மாதம் காணப்படுகின்றது. ஆதலால் இஸ்லாமியர்களுக்கு ரமழான் மாதம் ஓர் ஆன்மீக ரீதீயில் ஒரு மகிமைமிக்க மாதமாக கருதப்படுகிறது.

“விசுவாசிகளே நீங்கள் இறையச்சம் உடையவராக மாற வேண்டும் என்பதற்காக உங்கள் முன்னோர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டது போன்றே உங்கள் மீதும் விதியாக்கப்பட்டுள்ளது”

மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனம் நோன்பு என்பது இஸ்லாத்தின் பிரதான கடமைகளில் ஒன்று என்பதை தெளிவுபடுத்துகின்றது.

நோன்பு என்பது அரபு மொழியில் ஸவ்மு என்னும் சொல்லால் குறிப்பிடப்படுகின்றது. இதன் பொருள் தடுத்துக் கொள்ளுதல் என்பதாகும்.

அதாவது சூரியன் உதிக்கும் நேரத்திலிருந்து சூரியன் மறையும் நேரம் வரையில் எதையும் உண்ணாமலும், குடிக்காமலும், தீய செயல்களில் ஈடுபடாமலும் உடல் மற்றும் உள ரீதியில் தம்மை கட்டுப்படுத்தி 30 நாட்களும் நோக்கும் விரதமே நோன்பு என பொருள் கொள்ளப்படுகின்றது.

நோன்பின் நோக்கங்கள்

நோன்பின் நோக்கங்களானது பலவாறாக காணப்படுகின்றது. “அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்கின்றேன்” என்ற எண்ணத்தை மனதில் உறுதிப்படுத்தல், ஸஹர் முடிவிலிருந்து நோன்பு திறக்கும் நேரம் வரை நோன்பை தடுக்கும் எந்தக் காரியத்திலும் ஈடுபடாமல் இருத்தல் வேண்டும்.

நோன்பின் பிரதான நோக்கம் இதயத்தில் இறையச்சத்தை பலப்படுத்துதல் என்ற போதிலும் அதன்மூலம் உடல் மற்றும் உள ஆரோக்யம் பெறல், உள்ளம் பண்படுத்தப்படல், பொறுமை, கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளல், சிக்கனம் பேணல் போன்ற நற்பண்புகளை வளர்ப்பதே பிரதான நோக்கமாக காணப்படுகின்றது.

காலம்

அல்லாஹ்வின் வேதமான குர்ஆன் அருளப்பட்ட மாதமாக ரமழான் மாதம் காணப்படுகின்றது. இஸ்லாமிய வருடத்தில் உள்ள 12 மாதங்களில் ரமழான் ஒன்பதாவது மாதம் ஆகும். இம் மாதத்திலேயே வருடந்தோறும் நோன்பு கடைப்பிடிக்கப்படுகின்றது. 29 அல்லது 30 நாட்கள் நோன்பு அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை ஈகைத் திருநாள் ஈதுல் பிதிர் எனவும் அழைக்கப்படுகின்றது.

சிறப்புகள்

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று நோன்பு நோற்றல் ஆகும். இக்காலப் பகுதியிலேயே விண்ணில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு நரக வாசல்கள் மூடப்படும் காலப்பகுதியாகும்.ஆகவே, இக்காலப்பகுதியில் நோன்பு இருப்பதால் நேரடியாக சொர்க்கத்தை அடையலாம் என்பது இதன் சிறப்பாகும். நோன்பில் அல்லாஹ்வின் விசேஷமான அருள் பாவமன்னிப்பு மற்றும் நரக விடுதலை என்பன கிடைக்கின்றன.

பல மடங்கு கூலிகளையும் இம்மாதத்தில் அல்லாஹ் வழங்குவது சிறப்பிற்குரியதாகும். தீய சிந்தனை, கெட்ட எண்ணங்களை தவிர்க்கத் தூண்டுகின்றது. ஆசைகளைக் கட்டுப்படுத்தி வாழ்வதற்கான மனப்பக்குவம் ஏற்படுகின்றது.

செய்யத் தகாத செயல்கள்

நோன்பு காலத்தில் செய்யத்தகாத செயல்கள் என குர்ஆன் குறிப்பிடுகின்றது. அவை நாவுடன், செயலுடன் சம்பந்தப்பட்டவையாகும். நாவுடன் சம்பந்தப்பட்டவையாக பொய் பேசுதல், புறம் கூறல், கோள் சொல்லல், வீண்பேச்சு பேசுதல், கேலி செய்தல் என்பனவாகும்.

செயலுடன் சம்பந்தப்பட்ட தீய செயல்களாக பிறருக்கு துன்பம் விளைவித்தல், பிறர் பொருளை அபகரித்தல், சண்டை பிடித்தல், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற தீய செயல்களை செய்யக் கூடாது என அல்குர்ஆன் வலியுறுத்துகின்றது.

இஸ்லாமிய மதத்தில் ரமழான் மாதம் அதி உன்னதம் மட்டுமல்ல மிகமுக்கிய காலமாக கொள்ளப்பட்டு இம் மாதம் முழுவதும் நோன்பு நோற்று இஸ்லாமியர்கள் தமது தீய சிந்தனைகளில் இருந்து விலகி சொர்க்கத்தை அடைவதற்கு எத்தணிக்கும் ஒரு காலப்பகுதியாகும்.

இக்காலப்பகுதியில் தீய சிந்தனைகளில் இருந்து விலகி நல்ல எண்ணங்களுடனும் பிறருக்கு உதவி செய்தும் ரமழான் காலப்பகுதியில் 30 நாட்கள் முறைப்படி நோன்பு நோற்று பிறவிப்பயனை சொர்க்கத்தில் சென்றடைய நாம் நோன்பு நோற்றல் சிறப்புக்குரியதாகும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 March 2024 8:59 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!