குரு பெயர்ச்சியால் ராசிகள் அடைய போகும் பலன்கள் என்ன தெரியுமா?

குரு பெயர்ச்சியால் ராசிகள் அடைய போகும் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்து தான் பாருங்களேன்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குரு பெயர்ச்சியால் ராசிகள் அடைய போகும் பலன்கள் என்ன தெரியுமா?
X

gurupeyarchi palangal 2023, 2023 to 2024 guru peyarchi palangal in tamil, Guru Peyarchi 2023 To 2024குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள்.ஆம். குரு பார்க்க தொடங்க போகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பகவான் ஏப்ரல் 21ஆம் தேதி மீனம் ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். குரு பெயர்ச்சியையெட்டி சித்திரை மாதம் சிலருடைய வாழ்க்கையிலே மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்பட போகிறது.


gurupeyarchi palangal 2023, 2023 to 2024 guru peyarchi palangal in tamil, Guru Peyarchi 2023 To 2024மீன ராசியில் ஆட்சி பெற்று இருந்த நிலையில் குரு பகவான் பயணிக்க இருக்கிறார். மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் இடம் பெயர இருக்கிறார். குருபகவானை ஒரு பொன்னானவன் என்று சொல்லலாம். திருமணம், குழந்தை பாக்கியம் ,வேலை என அனைத்து சவுரியங்களையும் அளிக்க வல்லவர் குருபகவான். குரு பார்க்கிற இடத்திற்கு பலம் அதிகம். குரு பகவான் வந்து விட்டாலே வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தேடி வரும். வாழ்க்கையில் வசந்த காற்று வீசத் தொடங்கிவிடும். சமூகத்தில் நல்ல மதிப்பு மரியாதையும் கிடைக்க தொடங்கும்.

குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்கள் கிடைக்க போகிறது என பார்ப்போமா?

மேஷம்

gurupeyarchi palangal 2023, 2023 to 2024 guru peyarchi palangal in tamil, Guru Peyarchi 2023 To 2024செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பண பற்றாக்குறை நீங்கும். திடீர் பணம் வருவாய் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். பொறுப்புகள் புதிதாக வரும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் இந்த ராசிக்கு வருவதால் திடீர் திருப்பங்கள் ஏற்படக் கூடியதாக இருக்கும். நல்ல வேலை எதிர்பாராத, எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும், பதவி உயர்வும் கிடைக்கும், உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும், கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கும். எதிர்பாராத பண வரவுகள் வந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும் குறிப்பாக சுப செலவுகள் அதிகரிக்கும். ஆதலால் சிக்கனம் தேவை.

மிதுனம்

gurupeyarchi palangal 2023, 2023 to 2024 guru peyarchi palangal in tamil, Guru Peyarchi 2023 To 2024புதன் பகவானை ராசி அதிபதியாக கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு குருபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதால் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். மன நிம்மதி சந்தோஷம் அதிகரிக்கும் குடும்பத்தில் இதுவரை ஏற்பட்டு வந்த குழப்பங்கள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கடகம்

gurupeyarchi palangal 2023, 2023 to 2024 guru peyarchi palangal in tamil, Guru Peyarchi 2023 To 2024சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு குருபகவான் பத்தில் இருப்பதால் பதவி பறிபோகுமோ என பயப்பட வேண்டாம். பொறுப்புகள் அதிகம். அதனால் எல்லா நேரமும் நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைத்து விடாதீர்கள். வேலையில் சுமை கூடும். பணவரவு அதிகரிக்கும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

சிம்மம்

gurupeyarchi palangal 2023, 2023 to 2024 guru peyarchi palangal in tamil, Guru Peyarchi 2023 To 2024சிம்ம ராசிக்காரர்களுக்கு பாக்கியஸ்தானத்தில் குரு பகவான் பயணிப்பதால் குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும் கணவன் மனைவியிடையே நெருக்கம் அதிகமாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரவு கிடைக்கும் கடன் பிரச்சினைகள் தீரும்.

கன்னி

gurupeyarchi palangal 2023, 2023 to 2024 guru peyarchi palangal in tamil, Guru Peyarchi 2023 To 2024எட்டாம் வீட்டில் அஸ்தமனத்தில் குரு பகவான் பயணிப்பதால் கன்னி ராசிக்காரர்களுக்கு உடல் சோர்வு நீங்கும். நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்கிற இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். உயர் கல்வி பயில வெளியூர் செல்லக்கூடிய நிலை ஏற்படும் பணவரவு அதிகரிக்கும். கூடவே செலவுகளும் அதிகரிக்கும்.

துலாம்

gurupeyarchi palangal 2023, 2023 to 2024 guru peyarchi palangal in tamil, Guru Peyarchi 2023 To 2024குருபகவான் பார்வை சாதகமாக இருப்பதால் துலாம் ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் கண்டிப்பை எதிர்கொள்ள கூடிய சூழல் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் வருவாய் அதிகரிக்கும் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பின்னர் பார்ப்பதால் உங்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறார்.

விருச்சிகம்

gurupeyarchi palangal 2023, 2023 to 2024 guru peyarchi palangal in tamil, Guru Peyarchi 2023 To 2024விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு பகவான் ஆறாம் வீட்டில் பயணிப்பதால் புதிய வீடு வாகனம் வாங்கலாம். திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு எதிர்பார்த்த எதிர்பார்க்காத பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளாலும் பாராட்டப்படுவீர்கள்.

தனுசு

gurupeyarchi palangal 2023, 2023 to 2024 guru peyarchi palangal in tamil, Guru Peyarchi 2023 To 2024குருபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்திலிருந்து தனுசு ராசியை பார்ப்பதால் தனுசு ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்பார்க்காத திருப்பங்கள் ஏற்படும். புதிய வாகனங்கள் வாங்க கூடிய யோகம் ஏற்படும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும் பழைய கடன் பிரச்சினைகள் தீரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுக்கும் உங்களுக்கும் உள்ள நெருக்கடிகள் தீரும்.

மகரம்

gurupeyarchi palangal 2023, 2023 to 2024 guru peyarchi palangal in tamil, Guru Peyarchi 2023 To 2024மகர ராசிக்காரர்களுக்கு வேலையில் பிரமோஷன் பணவரவு அதிகரிக்கும். கடனாக வாங்கிய பணங்களை செட்டில் செய்து விடலாம்.உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலகட்டம்.

கும்பம்

gurupeyarchi palangal 2023, 2023 to 2024 guru peyarchi palangal in tamil, Guru Peyarchi 2023 To 2024கும்ப ராசிக்காரர்களுக்கு குருபகவான் மூன்றாம் இடத்திற்கு செல்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே உள்ள முரண்பாடுகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய காலம் இது.

மீனம்

gurupeyarchi palangal 2023, 2023 to 2024 guru peyarchi palangal in tamil, Guru Peyarchi 2023 To 2024மீன ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு, ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும் சம்பளமும் அதிகரிக்கும்.

Updated On: 20 Feb 2023 12:26 PM GMT

Related News

Latest News

 1. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 2. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில், காய்கறி இன்றைய விலை
 3. உடுமலைப்பேட்டை
  உடுமலை பகுதியில், பயிர்கள் சேதம்; வேளாண் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
 4. தூத்துக்குடி
  தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் இன்றைய விலை
 5. திருப்பூர் மாநகர்
  திருப்பூரில் கிரிக்கெட் மட்டையால் அடித்து மாமனார் கொலை; மருமகன்...
 6. நாமக்கல்
  சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கண்டித்து, நாமக்கல்லில் ஜூன் 12ல்...
 7. தமிழ்நாடு
  காஞ்சிபுரத்தில் போலி பட்டுச் சேலை விற்பனை அதிகரிப்பு
 8. திருவண்ணாமலை
  நிதி நிறுவன மோசடி; காவல் நிலையத்தை முற்றுகையிட்ட முகவர்கள்
 9. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை
 10. வந்தவாசி
  திருவண்ணாமலை மாவட்டத்தில் திடீர் மழை; வேரோடு சாய்ந்த ஆல மரங்கள்