/* */

காதலில் தான் எத்தனை வகைகள்- காதல் என்பது காவியமானால் கதாநாயகன் வேண்டும்

கதாநாயகன் சாட்தாத் கடவுள் என்றால் தெய்வீக காதல் தானே அப்படின்னா அந்த கதாநாயகிக்கு நம்ம ஊரு என்றால் பரவசத்திற்கும் பாசத்திற்கும் ஒரு குறைவில்லையே.

HIGHLIGHTS

காதலில் தான் எத்தனை வகைகள்- காதல் என்பது காவியமானால் கதாநாயகன் வேண்டும்
X

கதாநாயகன் சாட்தாத் கடவுள் என்றால் தெய்வீக காதல் தானே.

காதல் என்பது காவியமானால் கதாநாயகன் வேண்டும் அந்தக் கதாநாயகன் சாட்தாத் கடவுள் என்றால் தெய்வீக காதல் தானே அப்படின்னா அந்த கதாநாயகி நம்ம ஊரு பார்ட்டி என்றால் பரவசத்திற்கும் பாசத்திற்கும் ஒரு குறைவில்லையே

காதலில் தான் எத்தனை வகைகள்... `ஒருதலைக் காதல்', `இரு மனமொத்த காதல்',பார்த்ததும் காதல்., பா்க்காமலே காதல் நாக்கை அறுத்த காதல்., `புனிதமான காதல்', `தெய்விகக் காதல்'.... என ஏராளம்

தெய்வீகக் காதல் என்பது ஒருவரை ஒருவர் மனதால் ஈர்க்கப்பட்டு, உடல் ஸ்பரிசம் இல்லாமல் , ஆத்ம பரிவர்த்தனை செய்து கொள்வதே ஆகும்

உலகத்து காதலுக்கெல்லாம் ஒப்பற்ற தத்துவ விளக்கம் தான் நம்ம நாயகி ஆண்டாளின் காதல். இவள் அரங்கன் பால் கொண்ட காதல் தான் எப்பேற்பட்ட மகிமை வாய்ந்தது!

தன் காதலை தன் தந்தைக்கு ஒரு பூமாலை வாயிலாகப் புரியவைத்த விதம் என்ன ஓர் அழகு. அதை அவரோடு வாதிட்ட விதம் என்ன ஓர் அற்புதம். அதில் ஜெயித்து, தன் தந்தையின் ஆசியோடு அவரை அடைய, உண்ணா நோன்பிருந்து அதை நடத்திக்காட்டியவிதம்... ஆஹா, என்ன அருமை!

ஆகவே, உள்ளம் சார்ந்த காதல் தெய்விகமானது. அதில் ஓர் உறுதியும், செயல் வேகமும், விவேகமும் நிச்சயம் இருக்கும். அதில் வெற்றி பெற்று வாழ்ந்தாலே காதலில் நீங்கள் வெற்றியாளர்கள்தான்.

முன்னொரு காலத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நிலப்பகுதிகள் ராணி மல்லி என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒருநாள், அவர்கள் காட்டில் வேட்டையாடிய போது, கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், வில்லி, அவரது சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டு இருந்தார்.

வெகு நேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்துப் போய் சிறிது நேரம் தூங்கினார். அவரது கனவில், கடவுள் அவரது சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதை அவருக்கு விளக்கினார். உண்மை புரிந்ததும், தெய்வீக உத்தரவின் பேரில் வில்லி அந்த காடுகளைத் திருத்தி அமைக்க, ஒரு அழகான நகரம் உருவாக்கப்பட்டது. இந்த காரணத்திற்காக, இந்த நகரம், வில்லிப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் என்று சொல்வார்கள், ஸ்ரீவில்லிபுத்தூரை!

முன்னொரு காலத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நிலப்பகுதிகள் ராணி மல்லி என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒருநாள், அவர்கள் காட்டில் வேட்டையாடிய போது, கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், வில்லி, அவரது சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டு இருந்தார்.

வெகு நேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்துப் போய் சிறிது நேரம் தூங்கினார். அவரது கனவில், கடவுள் அவரது சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதை அவருக்கு விளக்கினார். உண்மை புரிந்ததும், தெய்வீக உத்தரவின் பேரில் வில்லி அந்த காடுகளைத் திருத்தி அமைக்க, ஒரு அழகான நகரம் உருவாக்கப்பட்டது. இந்த காரணத்திற்காக, இந்த நகரம், வில்லிப்புத்தூர் என்ற பெயர் பெற்றது.

மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்து வந்தவர் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் அந்தணரான இவர் திருவில்லிபுத்தூர் கோவிலுக்கு மலர்கள் கொய்து மாலைகள் தொடுத்து கொடுப்பதையே தமது கடமையாகக் கொண்டவர். ஒரு நாள் தோட்டத்தில் பூ பறிக்க சென்றபோது, குழந்தை ஒன்றை(ஆண்டாள்) துளசிச் செடியின் கீழ் கண்டெடுத்தார் ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வார் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை.

இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்து வந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டு போய் வைத்துவந்தார்.

இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை சூடிய மாலைகளே தனக்குப் உகந்தவை எனவும், அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும், இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.

கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உள்ள இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணு சித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தார். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்து விட்டாள் மேலும் ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார்.இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமைக்கும், தத்துவம்,பக்தி ஆகியவற்றிக்காக மிகுந்து போற்றப்படுகின்றது. இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது.

திருப்பதியில் புரட்டாசி ௩ வது சனிக்கிழமை பிரம்மோற் ஸவத்துக்கு ஆண்டாள் மாலையை திருப்பதி பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது. இங்கே, ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலிலிருந்து திருமணப் பட்டுப் புடவை வருகிறது. மதுரையில் சித்திரைத் திருவிழா அழகர் எதிர் சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைத்தான் கள்ளழகர் அணிவிக்கிறார். விஷ்ணு சித்தர் என்று போற்றப்படும் பெரியாழ்வாரும் ஸ்ரீஆண்டாளும் அவதரித்த திருத்தலம் இது!

ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த பெரியாழ்வார் மதுரையில் நடந்த போட்டியில் பொற்கிழி பரிசு பெற்றார். பெருமாள் கருட வாகனத்தில் தோன்றி, இப்பரிசை கிடைக்கச் செய்தார். இந்தக் காட்சியை அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோர் தரிசித்தனர். மக்களின் கண் பெருமாள் மீது பட்டு அவருக்கு திருஷ்டி ஏற்பட்டிருக்குமோ, அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என பெரியாழ்வார் பயந்துபோனாராம். பக்தியின் உயர்நிலை இது. எனவே, அவர் பல்லாண்டு வாழ வேண்டும் எனக் கருதி,"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம், மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு" என்று துவங்கி "திருப்பல்லாண்டு" பாடினார். இந்த உயர்ந்த பக்தியை மெச்சிய பெருமாள், "நீரே பக்தியில் பெரியவர்" என வாழ்த்தினார். அதுவரை, விஷ்ணு சித்தர் என்று அழைக்கப்பட்டவர், பெரியாழ்வார் எனும் திருநாமம் பெற்றார். இந்தப் பல்லாண்டு பாடலே உலகம் முழுவதும் உள்ள திருமால் கோயில்களில் இன்றைக்கும் தினந்தோறும் பாடப்படுகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர், ஆண்டாளின் மடியில் சயனித்திருப்பார். அதுபோல, ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் ஆடித்திருவிழாவின் 7ம் நாளில் ரங்கமன்னார் சுவாமி, ஆண்டாளின் மடியில் சயனித்த கோலத்தில் அருளுவதைக் காணலாம். இவ்வூர் கிருஷ்ணன் கோயிலில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இதைத் தரிசித்தால், தம்பதியரிடையே ஒற்றுமை வலுப்படும் என்பது ஐதீகம்!

Updated On: 4 Jun 2021 2:06 AM GMT

Related News