சதுரகிரி கோவிலில் 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி

நவராத்திரி விழாவையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில், வரும் 26ம் தேதி முதல் அக். 5ம் தேதி வரை, 10 நாட்கள் சுவாமி தரிசனம் செய்ய, வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சதுரகிரி கோவிலில் 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி
X
சதுரகிரி கோவிலில், 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில், நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, வரும் 26 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை 10 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய, அனுமதிக்கப்படுகின்றனர்.

புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு, வரும் 23ம் தேதி பிரதோஷ நாள் முதல், நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனையடுத்து நவராத்திரி விழா வழிபாட்டிற்காக வரும் 26 முதல் அக். 5 வரை மேலும் 10 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்நாட்களில், தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். இரவில் கோவிலில் தங்க அனுமதி கிடையாது. வனத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தாங்களே உணவு சமைத்து சாப்பிடுவதை தவிர்த்து கோவில் சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தை பக்தர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக, நவராத்திரி வழிபாட்டிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில்,

தற்போது புரட்டாசி அமாவாசை மற்றும் நவராத்திரி வழிபாடுகளுக்காக, செப். 23 முதல் அக். 5 வரை, தொடர்ந்து 13 நாட்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது, சதுரகிரி பக்தர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 22 Sep 2022 1:53 PM GMT

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  திருச்செந்துார் செந்தில் நாதன் முருக பெருமான் பற்றி அறிவோம்!
 2. கல்வி
  JKKN மருந்தியல் கல்லூரி மாணவன் மாநில அளவிலான மல்யுத்தப்போட்டியில்...
 3. தமிழ்நாடு
  புதிய சிக்கலில் மாட்டினார் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி.
 4. சினிமா
  'பொன்னியின் செல்வன்' படத்தை தாய்லாந்தில் பார்த்த வனிதா விஜயகுமார்..!
 5. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 6. சினிமா
  மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
 7. தென்காசி
  தென்காசி மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
 8. லைஃப்ஸ்டைல்
  மற்றவர் காலில் விழுவது அவமானமா? வெகுமானமா?
 9. சினிமா
  'இந்தி தெரியாது போடா..!' - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர்...
 10. நாமக்கல்
  2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் நரிக்குறவர் காலனி மக்கள்...