/* */

திருமணம் செய்ய தயாரா இருக்கீங்களா..? அப்படின்னா இது உங்களுக்கான செய்தி..!

Date of Birth Astrology in Tamil-உங்களுக்கு திருமணத்துக்கு ஜோடி வேணுமா..? அப்படின்னா உங்களுக்கு வரும் இணை எப்படி இருக்கும்? தெரிஞ்சுக்கங்க.

HIGHLIGHTS

Date of Birth Astrology in Tamil
X

Date of Birth Astrology in Tamil

Date of Birth Astrology in Tamil-பிறந்த தேதி அடிப்படையில்தான் ஒருவருக்கு வாழ்க்கைத்துணை எப்படி அமையும் என்பது தீர்மானிக்கப்படுகிறது. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். திருமணம் என்றதும் முதல் பேச்சே ஜாதகம்தான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஜாதகம் என்ன சொல்லுதோ அதைத்தான் பெற்றோர்கள் செய்வார்கள். அதன் அடிப்படையில்தான் திருமணங்கள் முடிவுசெய்யப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரப்படி ஒருவரின் பிறந்த தேதி என்பது மிகவும் முக்கியமானது.

ஒருவரின் பிறந்த தேதி மற்றும் நேரத்தை வைத்துத்தான் அவருடைய ஜாதகம் கணிக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது பிறந்த தேதிதான் ஒருவரின் குணநலன்களை தீர்மானிப்பதாக இருக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. பிறந்த தேதியின் கூட்டுத்தொகை மூலமாக திருமண வாழ்வைக் கூட கணிக்கலாம்.

இந்த கட்டுரையின் மூலம் உங்கள் பிறந்த தேதியை வைத்து உங்களுக்கு எப்படிப்பட்ட துணை அமையும் என்பது தெரிந்துவிடும். திருமணம் ஆகாத உங்களுக்கு உங்கள் துணை எப்படி இருக்கும்னு பார்க்க ஆவலாக இருக்கில்லையா..? ம்.. பார்க்கலாம் வாங்க..!

கூட்டு எண் 1:

பிறந்த தேதி - 1, 10, 19, 28 பிறந்த தேதியின் கூட்டுத்தொகை 1 என வருபவர்கள், இயற்கையாகவே தலைமை பண்பு உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து காரியங்களையும் தானே முன்னெடுத்து செல்ல வேண்டும் என விரும்புவார்கள். இவர்கள் தங்கள் துணையினை எப்போதும் கட்டுப்படுத்த முயற்சிப்பார்கள். அவர்களின் ராசியை பொறுத்து அவர்களின் குணநலன்கள் மாறுபட்டாலும், பொதுவாக அவர்கள் விரும்பாத ஒரு செயலை அவர்களை செய்ய வைப்பது என்பது இயலாத ஒன்று. ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் எப்பொழுதும் தங்கள் துணையை நேசிப்பவர்களாக, நேர்மையாக இருப்பார்கள். ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களை காதலித்தாலோ அல்லது திருமணம் செய்திருந்தாலோ நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.

கூட்டு எண் 2:

பிறந்த தேதி - 2, 11, 20, 29 ம் தேதியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் அமைதியனவர்களாகவும், எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தங்கள் துணையை புரிந்துகொண்டு வாழ்வதற்கு முயற்சி செய்வார்கள். இவர்கள் உடல்ரீதியான தொடர்பை காட்டிலும் மனரீதியான தொடர்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்களின் மனநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். எனவே, இவர்களை சமாளிப்பது சற்று கடினம் தான். இவர்கள் நிலையான மனநிலை உள்ளவர்களுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டால் மட்டுமே வாழ்க்கை நன்றாக இருக்கும்.

கூட்டு எண் 3:

பிறந்த தேதி - 3, 12, 21, 30-கூட்டு எண் 3ல் பிறந்தவர்களுக்கு கூட்டு எண் 3. அவர்கள் கிட்டத்தட்ட 1ம் எண்ணில் பிறந்தவர்கள் போலத்தான் இருப்பார்கள். காதல் மற்றும் திருமணத்தை தவிர இவர்கள் மிகவும் எதார்த்தமானவர்களாக இருப்பார்கள். அதேசமயம் மனதை விட மூளை சொல்வதை கேட்பார்கள். இவர்கள் தங்களுக்கான விதிகளை தானே உருவாக்கி கொள்பவர்களாகவும், பயமற்றவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் பார்ப்பதற்கு ரொமான்டிக்காக இருக்க மாட்டார்கள். எனவே அதனை ஈடுசெய்வதற்கு ரொமான்டிக்கா இருப்பவர்களை திருமணம் செய்து கொள்வது நல்லது.

கூட்டு எண் 4 :

பிறந்த தேதி - 4, 13, 22, 31 கூட்டு எண் 4-ல் பிறந்தவர்கள் வழக்கத்திற்கு மாறானவர்களாக இருப்பார்கள். 4ம் எண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். இவர்கள் ரொமான்டிக்கானவர்களாக இருக்கமாட்டார்கள். அதேசமயம் பாலியல் உறவில் அதிக நாட்டம் உடையவர்களாக இருப்பார்கள். தன் கோபத்தால் தன்னுடைய துணையை இழந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.

கூட்டு எண் 5 :

பிறந்த தேதி - 5, 14, 23 - கூட்டு எண் 5ல் பிறந்தவர்கள் பெரும்பாலும் திருமணத்திற்கு முன் பல பேருடன் நெருக்கமான நட்பில் இருப்பவர்களாக இருப்பார்கள். தங்களுக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். அதே சமயம் மிகவும் ரொமான்டிக்கானவர்களாகவும் . இவர்கள் அனைத்திலும் மாற்றங்களை விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மனநிலை அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும். எனவே நிலையான மனநிலை உடையவர்களை திருமணம் செய்தால், இவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இவர்களுக்கு சிறந்த பொருத்தம் உள்ள கூட்டு எண் 8ல் பிறந்தவர்கள்தான்.

கூட்டு எண் 6:

பிறந்த தேதி - 6, 15, 24- கூட்டு எண் 6 என்பது வெள்ளி கிரகத்தின் எண். வெள்ளி அமைதி மற்றும் அன்பின் கிரகமாகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் எளிதில் பிறரை வசீகரிக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய அன்பே இவர்களுக்கு பல சிக்கல்களை உருவாக்கும். எளிதில் உணர்ச்சி வசப்படுவதால் துணையுடன் சின்னச் சின்ன விஷயங்களுக்கும் பல சண்டைகள் வரும். எனவே எண் 2 ல் பிறந்தவர்கள் இவர்களுக்கு சிறந்த துணையாக இருக்க வாய்ப்புள்ளது.

கூட்டு எண் 7:

பிறந்த தேதி - 7, 16, 25 -கூட்டு எண் 7ல் பிறந்தவர்கள் பொதுவாக மிகவும் குறைவாக பேசி,அதிகம் சிந்திப்பவர்களாக இருப்பார்கள். காதலுடன் அன்பை பொழிவதில் எந்த குறையும் இருக்காது. வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு துணையுடன் மனரீதியாக இணைக்கப்பட வேண்டியது அவசியம். எண் 5 ல் பிறந்தவர்கள் இவர்களுக்கு மிகச் சிறந்த துணையாக இருப்பார்கள். சிறிய விஷயங்களை எல்லாம் தலையில் ஏற்றிக்கொண்டு கடுமையான வாக்குவாதம் செய்வார்கள். எனவே, இவர்களின் துணை பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்.

கூட்டு எண் 8:

பிறந்த தேதி - 8, 17, 26 -கூட்டு எண் 8ல் பிறந்தவர்கள் வலுவானவர்கள். ஆனால், உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். அனைத்து எண்களை காட்டிலும் 8ல் பிறந்தவர்கள் உறவில் அதிக நேர்மையுடன் இருப்பார்கள். ஆனால், இவர்கள் அனைவராலும் தவறாக புரிந்துகொள்ளப்படுவார்கள். அதுதான் இவர்களின் பிரச்சினை. 8ல் பிறந்த பெண்கள் திருமண வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகளை சந்திப்பார்கள். உறவு, காதல் என்று வரும்போது இவர்கள் தங்கள் இதயம் சொல்வதையே கேட்பார்கள். இவர்கள் தங்கள் துணையுடன் இணைய அதிக காலம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் இணைந்துவிட்டால் அவர்களின் உறவு மிக அழகானதாய் இருக்கும்.

கூட்டு எண் 9:

பிறந்த தேதி - 9, 18, 17- கூட்டு எண் 9 செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது. பொதுவாகவே செவ்வாய் அழிவின் கிரகமாகும். அதனால்தான் எண் 9 ல் பிறந்தவர்கள் அதிக ஆற்றலுடனும், கோபக்காரர்களாகவும் இருக்கிறார்கள். அதேசமயம் இவர்கள் அதிக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். ஆனால், அதனை மற்றவர்களுக்கு காட்டமாட்டார்கள். இவர்கள் தங்களின் துணையிடம் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தார் மீதும் அதிக அன்பு செலுத்துபவர்களாக இருப்பார்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 12 April 2024 6:37 AM GMT

Related News