/* */

Chitrai Vishu: The Grandeur Of 'Sophakritu' Tamil Anniversariesசித்திரை விஷு: மகத்துவம் நிறைந்த ‘சோபகிருது’ தமிழ் வருடப்பிறப்பு

சித்திரை விஷு எனப்படும் மகத்துவம் நிறைந்த ‘சோபகிருது’ தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதி பிறக்கிறது.

HIGHLIGHTS

Chitrai Vishu: The Grandeur Of Sophakritu Tamil Anniversariesசித்திரை விஷு:  மகத்துவம் நிறைந்த ‘சோபகிருது’ தமிழ் வருடப்பிறப்பு
X

தமிழக மக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் தமிழ் வருட பிறப்பு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு தமிழ் வருடப்பிறப்பு ஏப்ரல் 14-ஆம் தேதி வரவுள்ளத


சுபகிருது வருடம் முடிந்து சோப கிருது வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று பிறக்கிறது. சித்திரை விஷு என்ற பெயரில் தமிழ் வருட பிறப்பு தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படும் முக்கியமான ஒரு நிகழ்வாகும். விஷு என்பதற்கு தமிழில் இரவு பகலும் சமமானது என்று பொருள். இந்த தினத்தில் இறைவனை மனம், மெய் ஆகியவற்றால் வணங்கி துதித்தால் அந்த ஆண்டு முழுவதும் நமக்கு வரும் துன்பங்கள், பிணிகள் அனைத்தும் அகன்று போகும் என்பது நம்பிக்கை. நாம் முன்னெடுக்கும் எந்த நல்ல காரியமும் தங்கு தடை இன்றி நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். இது தவிர லட்சுமி கடாட்சம் தெய்வ அனுக்கிரகமும் கிடைக்கும் என்று சான்றோர்கள் தெரிவித்துள்ளனர

ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் உதயமாகி பங்குனி வரை 12 ராசிகளிலும் சஞ்சரித்து மறுபடியும் சித்திரையில் மேஷ ராசிக்கு வருவார். இப்படி சூரியன் மேஷ ராசியில் பயணிக்க தொடங்கும் நாளே தமிழ் வருட பிறப்பு என்று அழைக்கப்படுகிறது. சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனிற் காலம் எனும் வசந்த காலம் தொடங்குகிறது. இந்த வசந்த காலத்தில் தான் மா மரங்களில் மாந்தளிர்களும் மலர்களும் பூத்துக் குலுங்கும். அதேபோல் வேப்ப மரங்களில் வேப்பம்பூ பூத்து குலுங்கும்.மனித வாழ்க்கை இனிப்பும் ,கசப்பும் கலந்து இருக்கும் என்பதை சொல்லும் இயற்கையின் வெளிப்பாடு இது .சித்திரை மாதத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களில் திருவிழாக்கள், தேரோட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இவையும் தமிழர்களின் பண்டைக்கால பண்பாட்டை விளக்கும் ஒரு விழாவாகும்.

சித்திரை மாத திருதியை நாள் ஒன்றில் தான் மகாவிஷ்ணு தனது தசாவதாரங்களில் முதல் அவதாரமான மச்ச அவதாரத்தை எடுத்தார். சித்திரை மாத பௌர்ணமியில்தான் எமதர்மனிடம் கணக்கராக இருந்து மக்களின் பாவ புண்ணியங்களை எழுதும் சித்திர குப்தன் தோன்றினார். சித்திரை மாத வளர்பிறை பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.இந்த நாளில் லட்சுமி தேவியை வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும். மேலும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய திருவிழாவாக பார்க்கப்படும் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு சித்திரை மாத பௌர்ணமி தினத்தில் தான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சித்திரை முதல் நாள் அன்று நம் வருங்கால பலன்களை அறிவது அவசியம். எனவே புத்தாண்டு பஞ்சாங்கம் வாங்கி அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும். பின்னர் குடும்ப சோதிடரையோ புரோகிதரையோ கொண்டு புத்தாண்டு பூஜைகளை செய்ய வேண்டும் .பூஜை முடிந்த பின்பு அவர் புத்தாண்டு பஞ்சாங்கத்தை படிப்பார். அதன் மூலம் அந்த ஆண்டில் நவக்கிரக சஞ்சாரத்தினால் நிகழ இருக்கும் பலன்களை அறிந்து பரிகாரங்களை செய்து கொள்ளலாம் .தமிழ் வருட பிறப்பு அன்று தான தர்மங்கள் செய்வது வழக்கம். ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும்.


சித்திரை பிறப்பதற்கு முந்தைய நாள் இரவு சாப்பாடு முடிந்ததும் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட்டு வைக்க வேண்டும் .அந்த கோலத்தின் மீது தட்டு ஒன்றில் வீட்டில் உள்ள பொன், வெள்ளி, நகைகள் என்று அனைத்து ஆபரணங்களையும் ,பணம், நிலை கண்ணாடி, வெற்றிலை பாக்கு, பழங்கள் தேங்காய், மலர்கள் முதலிய மங்கள பொருட்களையும் தெய்வத்தின் முன்பாக இருக்கும் படி வைக்க வேண்டும். மறுநாள் காலை சித்திரை மாதப்பிறப்பன்று அதிகாலையில் வீட்டின் மூத்த பெண்மணி எழுந்து குளித்து குத்துவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பின்னர் வீட்டில் உள்ள அனைவரையும் எழுப்பி கண்களை மூடிய நிலையிலேயே சுவாமியின் முன்பாக அழைத்துச் சென்று தெய்வத்தின் முன்பாக பூஜைக்கு வைத்துள்ள மங்களப் பொருட்களை பார்க்கச் சொல்ல வேண்டும்.

இவ்வாறு செய்வதால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை. சித்திரை விஷு நாளில் பலவகை மலர்கள், இலைகள், அருகுகள்,மஞ்சள், பால் முதலாக கொண்டு செய்யப்படும் மருந்து நீர் வைத்து நீராட வேண்டும். பின்னர் கோவிலுக்கு சென்று இறைவனை மனதார தொழுதல் வேண்டும் அத்துடன் தங்களால் இயன்ற தான தர்மங்களையும் செய்து பெரியவர்களிடம் ஆசுர்வாதம் பெறுவது ஒவ்வொருவரையும் வாழ்வாங்கு வாழ செய்யும். மங்களப் பொருட்களை அணிந்து இல்லங்களில் பொங்கல் வைத்து இறைவனுக்கு படைத்து சூரிய நமஸ்காரம் செய்து பிரகாசம் நிறைந்த வாழ்வு வேண்டிய வழிபாடு செய்யலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 12 March 2024 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!